- மனச்சோர்வை நீக்கி தன்னம்பிக்கையை தூண்டும்.
- தாம்பத்தியத்தின் போது எண்டோர்பின்கள் இயற்கையாக வெளியிடப்படுகிறது. எண்டோர்பின்கள் மூளையில் உள்ள பிட்யூட்டரி
எண்டோர்பின்கள் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி மற்றும் ஹைபோதாலமஸால் வெளியிடப்படும் நரம்பியக்க கடத்திகள் ஆகும். இது இயற்கை ஹார்மோன்களாக செயல்பட்டு மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தி, மகிழ்ச்சியை அதிகரிக்கவும் செய்கிறது.
உடற்பயிற்சி, தாம்பத்தியம் போன்ற செயல்களைச் செய்யும்போது உடல் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. மனித உடல் 20 வகையான எண்டோர்பின்களை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயல்பாடுகளுடன் தொடர்புடையது. இவற்றில் பீட்டா எண்டோர்பின்கள் வலிமையான மன அழுத்த நீக்கியாகவும், வலி நிவாரணிகளாகவும் தனித்து செயல்படுகின்றன. இவை இயற்கையாகவே வலியைத் தாங்குவதற்கும், மகிழ்ச்சியான உணர்வு ஏற்படவும் உதவுகிறது.
எண்டோர்பின் தரும் நன்மைகள்
மனச்சோர்வை நீக்கி தன்னம்பிக்கையை தூண்டும், அன்பை மேம்படுத்தும். பிரசவத்தின் போது ஏற்படுகின்ற வலியை கட்டுப்படுத்த உதவுகிறது
ஆரோக்கியமான எடையை பராமரிக்க, பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இயற்கையாக நாம் வலியை தவிர்ப்பதற்கும், நம்மை நன்றாக உணர வைப்பதற்கும் மூளையில் நரம்பு சமிக்ஞைகள் மூலமாக உதவுகிறது.
எண்டோர்பின்களை அதிகரிப்பது எப்படி?
உடற்பயிற்சி, நடத்தல், ஓடுதல், நீச்சல், நடனம், சைக்கிளிங், தியானம், ஆழ்ந்த சுவாசம் ஆகியவை எண்டோர்பின் உற்பத்தியை அதிகரிக்கிறது. நன்றாக சிரிப்பது, இசை கேட்பது போன்றவை எண்டோர்பின்களை வெளியிடுவதோடு செரட்டோனின் மற்றும் டோப்போமின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கிறது.
காரமான உணவுகளில் உள்ள கேப்சின் மூளையை தூண்டி எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது. நறுமண எண்ணெய்களான லாவண்டர், ரோஸ்மேரி, சிட்ரஸ், ரோஸ், இவைகளின் வாசனை எண்டோர்பின் வெளியீட்டை தூண்டும். சூரியக்கதிரில் உள்ள புற ஊதா ஒளி தோலில் பீட்டா எண்டோர்பின் வெளியீட்டை தூண்டும். தாம்பத்தியத்தின் போது எண்டோர்பின்கள் இயற்கையாக வெளியிடப்படுகிறது.
உணவு மற்றும் சித்த மருத்துவம் டார்க் சாக்லெட், வால்நட், காபி, சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவை எண்டோர்பின் சுரப்பை அதிகரிக்கிறது. இந்தியன் ஜின்செங் என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் எண்டோர்பின் சுரப்பது அதிகரிக்கும். சதாவரிக் கிழங்கு பொடி, மதன காமப் பூ பொடி, நிலப்பனைக்கிழங்கு பொடி ஆகியவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால் பலன் பெறலாம். உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செயசெய்யும் போது இயல்பாகவே எண்டோர்பின் உற்பத்தி அதிகரிக்கும்.
நன்றி: மாலை மலர்