Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2011
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,212 முறை படிக்கப்பட்டுள்ளது!

இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு

மனித உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் காப்பதே உணவின் பிரதான நோக்கம். ருசியும் மணமும் இரண்டாம் தேவைகளே. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வாழ்க்கையின் அர்த்தங்களும், உணவுகளின் நோக்கமும் மாறிவிட்டன. வறுமைப் பசியாலும், கடன் தொல்லையாலும் ஏற்படும் மரணங்களை விட அளவுமீறிய ஒழுங்கற்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் மரணங்களே அதிகம்.

நமது உணவுகளில் பெரும்பகுதி கார்போ ஹைட்ரேட், இனிப்பு, அடர்கொழுப்பு (Saturated Fats) போன்ற சத்துக்களே அடங்கியிருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகிறோம். கொலஸ்டிரால் இருதய-ரத்தநாள நோய்கள், உடல்பருமன், நீரிழிவு, மலட்டுத்தன்மை, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் முற்றுகையிடுகின்றன. இதற்குத் தீர்வு… மருத்து வமா? இல்லை…  வாழ்க்கைமுறை மாற்றங்களும் சிறந்த உணவுகளும் தான் உண்மையான தீர்வு களை வழங்க முடியும்.

‘ஸ்பைரூலினா’…எனும் அரிய, எளிய உணவு

‘ஸ்பைரூலினா’ பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அதன் முழுமையான ஆற்றலையும், பயன்களையும் அறிந்திருந்தால் அனைவருமே மிகப்பெரும் நன்மை அடைந்திருக்க முடியும்.

ஸ்பைரூலினா.. ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது. (single celled Algae) அடர் பச்சை நிறமுள்ள இந்தச் சுருள்பாசியில் மிக அதிகளவில் பச்சையம் அமைந்திருப்பதாலேயே அந்நிறத்தில் உள்ளது. உலகின் வெப்பமான நீர்நிலைப் பகுதிகளில் விளையக்கூடியது. மத்திய ஆப்ரிக்கா, வட ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் கடல்களில், ஏரி களில் காணப்படுகிறது.

உலகிலுள்ள வேறு எந்த தாவர உணவுப் பொருட்களையும், இறைச்சி உணவுப் பொருட்களையும் விட அதிகளவு புரதம் (protein) இச்சுருள்பாசியில் செறிந்துள்ளது. இது போன்ற சத்து ஆதாரமிக்க நீர்ப்பாசிகளை உணவாக உண்பதால்தான் மீன்களில் அதிகப் புரதம் அமைகிறது. விண்வெளி வீரர்களின் முக்கிய உணவாக ‘ஸ்பைரூலினா’ பயன்படுகிறது. ஏனென்றால் நாம் இதை உண்ணும் அளவோ மிகக் குறைவு.. கிடைக்கும் ஆற்றலோ அளப்பரியது! Yes… Micro Food! Macro Blessing!

இயற்கை அன்னையின் ஆற்றல்மிக்க உன்னத உணவு

‘இயற்கையை நோக்கி நீ இரண்டடி போனால், இயற்கை உன்னை நோக்கி நான்கடி நெருங்கி வரும்’ என்பது உண்மையே. சோவியத் ருஷ்யாவில் செர்னோபிள் அணுஉலை விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றிலுமுள்ள விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. விளைச்சல் நஞ்சாய் அமைந்தன. எண்ணற்ற குழந்தைகளுக்கு நச்சு உணவுகளால் ஏராளமான தோல் அலர்ஜி நோய்களும், உடல்நலச் சிக்கல்களும் ஏற்பட்டன. புழக்கத்திலிருந்த மருந்துகள் மூலம் குழந்தைகளைக் காப்பாற்ற இயலாத நிலையில் இறுதியில் ‘ஸ்பைரூலினா’ பரிந்துரைக்கப்பட்டது. தினமும் குழந்தைகளுக்கு இந்தக் கடற்பாசி உணவு மிகச் சிறிதளவு தொடர்ந்து வழங்கப்பட்டது. இயற்கையின் ஆச்சரியமாய் ஆறுமுதல் எட்டு வாரங்களில் குழந்தைகளின் தோல் அலர்ஜி நோய்கள் தீர்ந்தன. பெரும்பாலான நோய்களிலிருந்து அவர்கள் மீள முடிந்தது. எனவே ரஷ்யர்கள் ஸ்பைரூலினாவை ‘மருந்துணவு’ (Medicine Food) என்கின்றனர்.

‘ஸ்பைரூலினா’வில் அடங்கியுள்ள சத்துக்கள்

மிகமுக்கியமாக இறைச்சியை விட 5 மடங்கு அதிகம் புரோட்டின் (உயர்தரமான தாவரவகைப் புரதம்) அடங்கியுள்ளது. காரட்டை விட 10 மடங்கு அதிகம் பீடாகரோடின் சத்து அடங்கியுள்ளது. தாய்ப்பாலில் மட்டுமே காணப்படும் காமாலினோனிக் அமிலம் (Gamma Linoleic Avid) இதில் அடங்கியுள்ளது. அமினோ அமிலங்கள் 22ல் 18 வகை இதில் உள்ளன. 10 வகை வைட்டமின்கள் குறிப்பாக யண்ற் Vit A,E,B12 போன்றவை உள்ளன. 8 வகை தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

‘ஸ்பைரூலினா’ அள்ளி வழங்கும் ஆரோக்கியம்

நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கிய மும் வழங்குவதில் முதலிடம் வகிக்கும் உன்னத உணவாக ஸ்பைரூலினாவை இயற்கை படைத்துள்ளது. நமது உணவுகளில் கார்போஹைட்ரேட், எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. உணவுக்கு 1மணி நேரம் முன்பு ஸ்பைரூலினா உண்பதால் பசி சீரடையும், எடை குறையும்.

மேலும் புரதம், வைட்டமின்கள் அபரிமிதமாக உள்ளதால் நோய் எதிர்பாற்றல் பெருகும். நோய் தொற்றுக்கள் நெருங்காது. இதிலுள்ள காமா னோலிக் அமிலச் சத்து கொலஸ்டிரால் உற்பத்தியைத் தடுக்கும். கெட்ட கொலஸ்டிரால் (LDL) அளவைக் குறைக்கும் நல்ல கொலஸ்டிரால் (HDL) அளவை அதிகரிக்கும். உடல் பருமனைக் குறைக்க சிறந்தது. இருதய நோய்களைத் தடுக்கும், ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும். மேலும் காமாலினோலிக் அமிலச் சத்து சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புப் (powerful anti inflammatory) பணியும் ஆற்றுவதால் மூட்டு அழற்சி வலியால் துயரப்படு வோருக்கு பெரும் நிவாரணியாக அமைந்துள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிய தீர்வுகள்

ஸ்பைரூலினா… மனித உடலில் நிகழ்த்தும் அதிசயங்கள் ஒன்று இரண்டல்ல! ஏராளம்! ஏராளம்! சர்க்கரை நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதம். வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவை (blood sugar level in fasting) 6 முதல் 8 வாரங்களில் மிகச் சரியான அளவுக்குக் கொண்டு வருவதோடு, அடிக்கடி பசி ஏற்படுதல், அடிக்கடி உண்ண வேண்டிய நிர்பந்தம், நீரழிவு மிகுதியால் தோல் பாதிப்புகள், பாத எரிச்சல் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் சுகமான, சுலபமான, நம்பகமான தீர்வு ஏற்படுகிறது.

Best Stomach Tonic

ஸ்பைரூலினா… இரைப்பை மற்றும் குடல் களின் செயல்திறனை அதிகரிக்கிறது. E.coli, candida போன்ற தீய பாக்டீரியாக்களை முறியடிக்க உதவுகிறது. ஹார்மோன் இயக்கத்தைச் சமநிலைப் படுத்துகிறது.

முதுமையும் தளர்ச்சியும் தூரப் போகும்

மனிதனை முடக்கி மரணத்தை நோக்கி விரைவாய் நகர்த்தும் சிதைவு நோய்களை (Degenerative Diseases) தடுக்கும் ஆற்றல் ஸ்பைரூலினாவில் அமைந்துள்ளது. இது உடலின் நச்சுக்களை அகற்றும் anti oxidant/antiviralagent ஆகப் பணியாற்றுகிறது. Vitamin B12 அடங்கியுள்ளதால் உடல், மன அழுத்தங்கள் இறுக்கங்கள் குறைந்து சுதந்திர உணர்வு ஏற்படும். தோல் வறட்சி, தோலில் சுருக்கம், இதரதோல் நோய்களையும் முறியடிக்கும். எப்போதும் சோர்வும் பலவீனமும் உள்ளவர்களுக்கு, (Chromic Fatique Syndrome-CFS) நீண்டகால களைப்பு நோய்க்கு மிகச் சிறந்த சிகிச்சையாக இது அமைகிறது. இதன் மூலம் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் பெருகும்.  தளர்ச்சி மறையும், முதுமையைத் தள்ளிப்போடும் (Antiaging) ஆற்றல் ஸ்பைரூலினாவுக்கு உள்ளது. புற்று நோயைத் தடுக்கும் சக்தியும் (cancer fighting ingredients) இதிலுள்ளன என ஏராளமான ஆய்வுகள் மூலம் அறியமுடிகிறது.

‘சேதமடைந்த செல் டிஎன்ஏ’ வின் விளைவே புற்று. இது கட்டுக்கடங்காமல பல்கிப் பெருகும். இந்நிலையில் “Endonucleus” என்ற சிறப்பு என்சைம்கள் சேதமடைந்த செல் “டிஎன்ஏ” நிலை பெற்று செல்லைப் பாதுகாத்து வாழ்வளிக்கும்.

இந்த என்சைம்கள் செயல்படாத நிலையில் “டிஎன்ஏ” சரிசெய்யப்படாமலேயே போய்விடும். புற்று வளரும். ஸ்பைரூலினா… செல்லின் நியூக்ளியஸ் என்சைம் செயலைத் தூண்டும்; அதிகப்படுத்தும். இதுகுறித்து தொடர் ஆய்வுகளி லிருந்து நம்பிக்கையளிக்கும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

‘ஸ்பைரூலினா’ பெயரில் நடைபெறும் MLM-நிறுவனக் கொள்ளையை முறியடிப்போம்

மனிதகுலம் எத்தனையோ போர்களை இயற்கை சீற்றங்களைச் சந்தித்து மீண்டுள்ளது. மனித சமூகமும் பூண்டோடு அழிந்துவிடப் போகிறது என ஆரூடம் கணித்த எத்தனையோ பேர்கள் மாண்டுவிட்டனர். ஆனால் மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தனக்கு எதிரான சூழல்களிலிருந்தும், நோய்மையிலிருந்தும் மீள மனிதகுலம் இடையறாது போராடிப் போராடி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

உயிரினங்களில் புரட்சிகரமானது மனித உயிர். உணவுகளில் புரட்சிகரமானது ஸ்பைரூலினா. மருந்துகளால் அல்ல மிகச்சிறந்த (இயற்கை) உணவுகளால் மட்டுமே மனித நலம் பாதுகாக்கப் படும். இயற்கையை வணங்குவது அல்ல. இயற்கையோடு இணைந்த வாழ்வதே முக்கியம். ஸ்பைரூ னா ஒவ்வொரு குடும்பத்திலும் அடிப்படை உணவு போல அமைய வேண்டும். இந்த எளிய உணவுப் பொருளை MLM நிறுவனங்கள் தங்கத்தின் விலைக்கு விற்பனை செய்து கொள்ளையடிக்கும் மோசடியில் வீழ்ந்துவிடாமல், எல்லோருக்கும் ஏற்றவிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் படும் ‘ஸ்பைரூலினா’வையே அனைவரும் பயன்படுத்த வேண்டும்.

“எதிர்காலத்தில் அதிகமான பேருக்குக் குறைந்த செலவிலான உணவு ஆதாரமாக இது திகழும்” என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தமிழர்களின் சிந்தனை களம் – (மாற்று மருத்துவம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)  –