இந்த உலகில் எத்தணயோ மதங்கள் – மார்க்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் பின்பற்றுபவர்கள் தாங்கள் பின்பற்றும் மார்க்கம் தான் சரியானது என்று நினைக்கின்றனர். ஆனால் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.
ஆனால் முஸ்லிம்கள் சரியாக இந்த இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்களா என்று சிந்திக்க வேண்டும். முதலில் இஸ்லாத்தை முறையாக அறிய வேண்டும். இஸ்லாமிய கொள்கை என்பது என்ன – என்பதை முதலில் அறிய வேண்டும். அதற்காக நாம் என்ன முயற்சி செய்துள்ளோம்? குர்ஆனை, ஹதீஸை முறையாகப் படித்தோமா?
ஆனால் கொள்கையில் முன்மாதிரியாக வாழ்ந்த சமூகம் இந்த உலகையே மாற்றிக் காண்பித்தது. ஆனால் நம் நிலைமை என்ன?
உரை: மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி