Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,698 முறை படிக்கப்பட்டுள்ளது!

தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!

தெருவில் நீங்கள் நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று தெய்வம் உங்கள் எதிரில் தோன்றி, “உனக்கு என்ன தேவை” – என்று கேட்கிறது. உங்களது மனக் கண்ணில் இந்தக்காடசியைக் காட்சிப்படுத்திப் பார்த்து.. உங்களது தேவையைச் சொல்ல முயலுங்கள்…அப்போது தான் நம் தேவை எதுவென்று நாமே உணராமல் இருக்கும் உண்மை நிலை நமக்குப் புரியவரும்.

நாம் எல்லோருமே வெற்றியைத் தேடித்தான் விரைந்து கொண்டிருக்கிறோம்.. மகிழ்ச்சிக்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம். நிம்மதியை நாடித்தான் நடந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் வெற்றி,மகிழ்ச்சி, நிம்மதி – . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,832 முறை படிக்கப்பட்டுள்ளது!

நடுக்கடல் ஐஸ் பாளங்களில் இன்று 10-வது நாளாக சிக்கியுள்ள கப்பல்!

10 நாட்களுக்கு முன் கடலின் நடுவே ஐஸ் பாளங்களிடையே சிக்கி அசைய முடியாமல் நின்றிருந்த ரஷ்யக் கப்பலை இன்று (திங்கட்கிழமை) தென் கொரிய ஐஸ் உடைக்கும் வசதி கொண்ட கப்பல் ஒன்று சென்று மீட்டிருக்கிறது.

ஸ்பார்ட்டா என்ற பெயருடைய ரஷ்யக் கப்பல் கடந்த 16-ம் தேதி அன்டார்ட்டிக்கா கடலில் நியூசிலாந்து

கடந்த 16-ம் தேதி முதல் ஐஸ் பாளங்களில் சிக்கியுள்ள ரஷ்யக் கப்பல் ஸ்பார்ட்டா

கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில், சென்று கொண்டிருந்தபோது இக்கட்டில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,560 முறை படிக்கப்பட்டுள்ளது!

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.

ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,613 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரசனைகளை இழந்து விடாதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 16

வாழ்க்கை நம்மை உருட்டிக் கொண்டே செல்கையில் எத்தனையோ உன்னதமான தன்மைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம். குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் இருந்த எத்தனையோ ரசனைகள் சொல்லாமலேயே நம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றன. ஒரு காலத்தில் மனதைக் கொள்ளை கொண்ட இயற்கைக் காட்சிகளும், அழகான பாடல்களும் காலப் போக்கில் நம்மில் பெரும்பாலோரால் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ பழைய நினைவுகளாக மட்டுமே அவை தங்கி விடுவது தான் பெரிய சோகம். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,419 முறை படிக்கப்பட்டுள்ளது!

குளிர்கால கொண்டாட்டம் 30 வகை சூப்!

குளிரும் பனியும் நிறைந்த இந்த மார்கழிப் பொழுதுகளில், சூடாக, தொண்டைக்கு இதமாக ஏதாவது சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்தானே! அடிக்கடி தேநீர் குடிப்பதும் உடல்நலனுக்குக் கேடு என்னும்போது, நமக்கான அடுத்த சாய்ஸ் சூப் தான்! குளிர்காலத்துக்கு இதமான உணவு என்பதோடு, இப்போது எல்லா வயதினருக்குமே ஏற்ற ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது சூப். உடல்நிலை தேற மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் சூப் வகைகள்தான்.

சூப் என்றதுமே ஏதோ நட்சத்திர ஹோட்டல் சம்பந்தப்பட்ட விஷயம் என்று . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 10,835 முறை படிக்கப்பட்டுள்ளது!

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

Consumer Protection Act 1986

இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே – எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,254 முறை படிக்கப்பட்டுள்ளது!

உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்

உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ”யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது?’ எனவினவ, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

‘இந்த நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,705 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்றங்கள் – கவிதை

கருவறையில் இருக்கையிலே இருட்டறை தான் என்றாலும் உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை. வெளிச்சமும் பிடிக்கவில்லை வெளியுலகம் வருவதற்கோ துளியளவும் விருப்பமில்லை. உள்ளேயே இருப்பதற்கா கருவாய் நீ உருவானாய் என்றே பரிகசித்தே படைத்தவன் பாரினில் பிறக்க வைத்தான்.

அழுதே நாம் பிறந்தோம் பாதுகாப்பை இழந்தே நாம் தவித்தோம். பிறந்தது இழப்பல்ல பெற்றது ஒரு பேருலகம் என்றே பிறகுணர்ந்தோம். சிரிக்கவும் பழகிக் கொண்டோம் உறவுகளை நாம் பெற்றோம் நண்பர்களைக் கண்டெடுத்தோம் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.

ஒன்றை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,401 முறை படிக்கப்பட்டுள்ளது!

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்

உடல் நிலை தொடர்பாகவும் குடும்பச் சூழ்நிலை வேலை கடன் போன்றவை தொடர்பாகப் பிரச்சினை உள்ளவர்களும் இளமையாக வாழ உறுதி கொள்ள வேண்டும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவதுதான் ஒருவர் இளமையாக செயல்துடிப்புடன் வாழ்கிறார் என்பதற்கு அர்த்தம்.

அடிக்கடி தலைவலி வயிற்றுக் கோளாறுகள் இரத்தக் கொதிப்பு பசியின்மை முதலியவைகளில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா?

அப்படியானால் உணவில் மாற்றத்தைக் கொண்டுவந்தால் உங்கள் மனமும் உடலும் புதுப்பிக்கப்பட்டு பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் வழி கண்டுபிடித்து விடலாம்.

முதலில் மனக் கவலையை அகற்ற காலையில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,076 முறை படிக்கப்பட்டுள்ளது!

அணுமின் உலைகள் செயல்படுவது எப்படி?

இந்திய அணு உலைகள் பாதுகாப்பான முறையில் வடிவமைத்து இயக்கப்படுவதால் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் பாதிப்பு ஏற்படாது,’ என, இந்திய அணுமின் கழகத் தலைவர் எஸ்.கே.ஜெயின் தெரிவித்தார். ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அங்குள்ள அணுஉலைகள் வெடித்துச் சிதறின. இதனால், இந்தியாவிலும் அணுஉலைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணுமின் கழக தலைவரும், நிர்வாக இயக்குனருமான எஸ்.கே.ஜெயின், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ்ராஜ் ஆகியோர் கல்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,399 முறை படிக்கப்பட்டுள்ளது!

என்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்!

மருத்துவக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.

தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

பொதுவாக் 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டு வலி, கை,கால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டது. அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால், நடப்பதே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,616 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிளஸ்-2 தேர்வு கால அட்டவணை -2012

பிளஸ் 2 தேர்வு, மார்ச் முதல் வாரத்தில் துவங்கி விடுவது வழக்கம். ஆனால், வரக்கூடிய பொதுத்தேர்வு ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது.

இது குறித்து, தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறும் போது, “பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, அனுப்பி வைத்தோம். மாணவர்களின் நலன் கருதி, தேர்வுக்கு சிறப்பாக தயாராக வேண்டும் என்பதை மனதில் வைத்து கொண்டு, தேர்வை ஒரு வாரம் தள்ளி வைத்து, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது” என்றார்.

பிளஸ்-2 . . . → தொடர்ந்து படிக்க..