Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,660 முறை படிக்கப்பட்டுள்ளது!

உலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம்!

உலக முஸ்லிம்களில் ஷியா பிரிவினர் வெறும் 10 விழுக்காடு முதல் 13 விழுக்காடுதான். ஷியா முஸ்லிம்களில் 80 விழுக்காட்டினர் உலகில் ஈரான், பாகிஸ்தான், இந்தியா, இராக் ஆகிய நான்கு நாடுகளில் வசிக்கின்றனர்.

ஆக, இஸ்லாம் உலக மதங்களில் இரண்டாவது பெரிய மார்க்கமாகும். கிறித்தவம் – அதன் அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து- உலகின் முதலாவது பெரிய மதமாகும். உலகக் கிறித்தவர்களின் எண்ணிக்கை 202 கோடி ஆகும்.

கடந்த 2010ஆம் ஆண்டு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,816 முறை படிக்கப்பட்டுள்ளது!

கணிப்பொறி அறிவியல் – ஐ.டி – வேறுபாடு என்ன?

வானியல் தொடர்பான படிப்பு என்பது எப்படி டெலஸ்கோப் தொடர்பானது அல்லவோ, அதேபோலவே, கணிப்பொறி அறிவியல் என்பது கணினி தொடர்பான படிப்பு அல்ல.

கணிப்பொறி அறிவியல் பொறியாளர்கள், கம்ப்யூட்டிங் துறையின் பல அம்சங்களில், அதாவது, தனிப்பட்ட மைக்ரோப்ராசசர்(Micro processor) வடிவமைப்பு, தனிப்பட்ட கணினி மற்றும் சூப்பர் கணினி முதல், சர்க்யூட் டிசைன் மற்றும் மென்பொருள் எழுதுதல்(Software writing) போன்ற பணிகள் வரை ஈடுபடுகிறார்கள். மேலும் அவர்கள், ரோபோடிக் ஆராய்ச்சியிலும் ஈடுபட தகுதியுள்ளவர்கள். அந்தப் பணியானது, மோட்டார்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,943 முறை படிக்கப்பட்டுள்ளது!

பி.பி.சி. நிகழ்ச்சியில், சில காட்சிகள் போலி!

பி.பி.சியில் வெளியான ஆவணப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. குறிப்பிட்ட ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் போலியானவைதான் என அதன் தயாரிப்பாளர் மன்னிப்பு கேட்கவுள்ளார்.

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவது தொடர்பான டாக்குமென்ட்ரியில் இடம்பெற்ற சில காட்சிகளே போலி எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் இந்தியாவின் பங்களுரு நகரிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் படம்பிடிக்கப்பட்டதாக ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது.

இதிலுள்ள பெரிய வேடிக்கை என்னவென்றால், குறிப்பிட்ட . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,810 முறை படிக்கப்பட்டுள்ளது!

தமிழக பள்ளி தேர்வு முறையில் கிரேடு அறிமுகம்

தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சி.பி.எஸ்.இ., தேர்வு முறை போன்று, மாநில பாடத்திட்டத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மனப்பாட முறை தேர்வுக்கு பதிலாக சிந்தித்து, கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தேர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தேர்வு மற்றும் மதிப்பீடு முறை (முழுமையான தொடர் மதிப்பீடு முறை) 1 முதல் 8ம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டில் (2012-13) அமல்படுத்தப்படும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,866 முறை படிக்கப்பட்டுள்ளது!

எஸ்எஸ்எல்ஸி யில் புதிய தேர்வுமுறை

“ஈ அடிச்சான் காப்பி’ என்பது போல், காலம் காலமாக பாடப் புத்தகங்களில் இருக்கும் கேள்விகளை, அப்படியே கேட்கும் நடைமுறையை மூட்டை கட்டிவிட்டு, மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ., பாணியில் பத்தாம் வகுப்பு கேள்வித்தாளை, பள்ளிக்கல்வி இயக்ககம் வடிவமைத்துள்ளது. “இந்த புதிய முறையில், மாணவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த அளவில் வரவேற்கக் கூடிய அளவில் இருக்கிறது’ என்று, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,358 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 7

நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்!

எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கின்றது. எத்தனையோ குடும்பங்களில் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் போகின்றது.

நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குவது இயற்கை. சரியான சந்தர்ப்பம் கிடைக்கிற போது அப்படி மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,691 முறை படிக்கப்பட்டுள்ளது!

பற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்

“பல்லுப் போனால் சொல் மாத்திரமல்ல அழகும், சந்தோஷசமும் போய்விடும்”

“எதையும் வரும் முன் காப்பதே திறமை” என்பதற்கு இணங்க சிறு வயதில் குழந்தைகளின் பற்களுக்குச் செய்யும் ஒவ்வொரு சிறு சிகிச்சையும் அவர்களின் வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்பட இருக்கும் பெரும் பிரச்சனைகள் அல்லது விளைவுகளில் இருந்து தடுத்து, அவர்களை நல்ல வலிமையான ஆரோக்கியமான பற்களைக் கொண்டவர்களாக மட்டுமல்லாமல், நல்ல உடல் நலத்தையும், நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்ட மனிதர்களாக உருவாக்க முடியும் என்பதை ஒவ்வொரு குழந்கைளின் பெற்றோர்களும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,199 முறை படிக்கப்பட்டுள்ளது!

இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு

மனித உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் காப்பதே உணவின் பிரதான நோக்கம். ருசியும் மணமும் இரண்டாம் தேவைகளே. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வாழ்க்கையின் அர்த்தங்களும், உணவுகளின் நோக்கமும் மாறிவிட்டன. வறுமைப் பசியாலும், கடன் தொல்லையாலும் ஏற்படும் மரணங்களை விட அளவுமீறிய ஒழுங்கற்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் மரணங்களே அதிகம்.

நமது உணவுகளில் பெரும்பகுதி கார்போ ஹைட்ரேட், இனிப்பு, அடர்கொழுப்பு (Saturated Fats) போன்ற சத்துக்களே அடங்கியிருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,014 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழும் போதே நீ வானத்தை தொட்டுவிடு !

வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்ததொரு ‘இலட்சியம்’ இல்லாவிட்டால் மனிதன், கேவலம் மிருகமாய்ப் போய்விடுவான் என்று சுவாமி விவேகானந்தா கூறிய இந்த வார்த்தைகளை சிறிதளவாவது சிந்தித்துப்பார். மகத்தான செயல்கள் யாவும் முதலில் ‘முடியும்’ என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட வைகள் தான். எனவே தொடங்குவதை ஒழுங்காகத் தொடங்கு முடிவைப்பற்றி நீ கவலைப்படாதே. அதனை என்னிடம் ஒப்படைத்து விடு என்று கிருஷ்ண பரமாத்மா கூறியதை நினைவில் கொள். உன் சரித்திரம், நீ சாதிக்கப்பாடுபடும் சாதனைகள், உன்னை உலகினுக்கே அடையாளம் காட்டும் சாதனைகள், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,610 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்

ஆயிரத்து எண்ணூறு வரை பெரியம்மை நோய் ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகவும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. முகம், கை, கால்களில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருவருப்பான தழும்புகளைப் பெற்றிருந்தனர். கண்களில் இந்நோய் வந்தால் பார்வை பறி போய்விடும் நிலையும் இருந்தது.

எட்வர்டு ஜென்னர் கி.பி. 1800 இறுதியில் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பெரும்பான்மை மக்கள் இந்நோய்க்கு ஆளாகி வந்தனர்.

எட்வர்டு ஜென்னர் 1749 – ஆம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,627 முறை படிக்கப்பட்டுள்ளது!

குழந்தைகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

இந்தக் கேள்வியை ஆழ்ந்து சிந்தித்தால் நமக்கு கிடைப்பது ஏமாற்றமே. குழந்தைகள் பிறக்கின்றனர், வளர்கின்றனர். மனிதர்களாகின்றனர். இதில் என்ன இருக்கிறது என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகள் பழக்கப்படுத்தப்படாத ஜீவன்கள். அவர்களை நாம் தான் பழக்கப்படுத்தவேண்டும். இந்த சமூகத்தில் வாழ்வதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகள் தம் கனவை அடைகாத்து பொரிக்கும் சாதனங்களாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகளை தங்களுடைய பிற்கால வாழ்க்கைக்கான நிரந்தரவைப்பு நிதியாகச் சிந்திப்பவர்களும், அன்றாடச் செலவுக்கான முதலாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,746 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூப்பர் மார்க்கெட் தந்திரங்கள் – 1

இதைப் படிக்கத் தொடங்கும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எந்த நாட்டிலிருந்து படித்தாலும், இதில் கூறப்படும் விஷயம் உங்களுக்குப் பொருந்தும். காரணம், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் பற்றியது.

20 வருடங்களுக்குமுன் மேலை நாடுகளில் மாத்திரமே பிரபலமாக இருந்த சூப்பர் மார்க்கட்கள் இப்போது ஆசிய நாடுகளிலும் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் வந்துவிட்டன. ஒருகாலத்தில் இந்தியப் . . . → தொடர்ந்து படிக்க..