Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2014
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,937 முறை படிக்கப்பட்டுள்ளது!

வென்றவர் வாழ்க்கை

henry ford“கார்களின் காதலர்” ஹென்றி ஃபோர்டு. வெறும் தொழிலதிபராக மட்டும் விளங்கியிருந்தால் காலம் அவரை கவனித்திருக்காது. பல புதுமைகளின் பிறப்பிடமாய் அவரது மெக்கானிக் மூளை இருந்தது. அதனால் அவரது காலகட்டத்தை “ஃபோர்டிஸம்” என்று வரலாறு புகழ்ந்தது.

மிச்சிகன் மாநிலத்தில் பிறந்தவர் ஹென்றி ஃபோர்டு. அவரது பெற்றோர் அயர்லாந்திலிருந்து வந்து குடியேறியவர்கள். ஆறு குழந்தைகளில் மூத்தவர் ஹென்றி. மிகச் சிறிய வயதிலேயே அவரது மூளை ‘மெக்கானிக்’ மூளை என்பது வெளிப் பட்டது. 12 வயதுச் சிறுவனாய் இருக்கும்போது தன் நாளின் பெரும்பாலான நேரத்தை மெக்கானிக்குகளின் பட்டறையில் செலவிட்டுப் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டார்.

1879ல் அவருக்கு பதினாறு வயது. பலரும், தங்கள் காதலியை முதல்முறையாகப் பார்க்கும் வயது. அந்த வயதில், கம்பஸ்டின் என்ஜினை முதல் முறையாகப் பார்த்துக் காதல் கொண்டார் ஹென்றி. அதே வருடத்தில் அப்ரெண்டிஸ் மெக்கானிக்காக, டெட்ராய்ட் மாநிலத்தில் போய் வேலைக்குச் சேர்ந்தார் ஹென்றி ஃபோர்டு.  பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் உழைப்பில் ஊன்றி நிற்கிற உணர்வு அவருக்குள் மேலோங்கியிருந்தது. கேúஸாலின் என்ஜின்களை உற்பத்தி செய்யும் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனத்தில் முதல் முதலாய் வேலைக்குச் சேர்ந்தார் ஹென்றி ஃபோர்டு.  1891ல், எடிஸன் இல்யூமினேடிங் கம்பெனியில் பொறியாளராகப் பணிக்குச் சேர்ந்தார் ஹென்றி ஃபோர்டு. இரண்டே ஆண்டுகளில் தலைமைப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றார். அந்தக் காலகட்டத்தில்தான் கம்பஸ்டின் என்ஜினில் தீவிரமான ஆய்வு மேற்கொள்ள அவருக்கு நேரம் கிடைத்தது.

அதன் விளைவாக 1896ல், தானே உருவாக்கிய குலாட்ரி சைக்கிள் என்ற காரை அறிமுகம் செய்தார். 4-6-1896 அன்று அந்தக் காரின் பரிசோதனை ஓட்டத்தையும் நிகழ்த்தினார். அவர் முதல்முதலாக ஓட்டிய காரும் அதுதான்!!

இந்த முதல் வெற்றிக்குப் பிறகு எடிஸன் நிறுவனத்திலிருந்து விலகிய ஹென்றி, பிற முதலீட்டாளர்களுடன் சேர்ந்து உருவாக்கிய முதல் நிறுவனம் டெட்ராய்ட் ஆட்டோமொபைல் கம்பெனி. ஆனால், இந்த நிறுவனம் மிக விரைவில் நஷ்டத்தைச் சந்தித்தது. இதற்குக் காரணம்

ஹென்றி ஃபோர்டு, கார்களை உருவாக்குவதில் செலுத்திய கவனத்தை, கார்களை விற்பதில் காட்டாததுதான்.   ஹென்றி ஃபோர்டுக்கு ரேஸ் கார்கள் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவரது உருவாக்கமான குலாட்ரி சைக்கிள் காரை ஓட்டிச் சென்று புகழ்பெற்ற கார் ரேஸ் வீரராகிய அலெக்ஸாந்தர் வின்டனைத் தோற்கடித்தார் ஹென்றி ஃபோர்டு. ரேஸ் கார்களில் இருந்த ஆர்வத்தால், பல முதலீட்டாளர்களின் துணையுடன் அவர் தொடங்கிய இன்னொரு நிறுவனம்தான் ஹென்றி போர்டு கம்பெனி.

கார் ரேஸில் ஜெயித்த அவரால் இந்த முறையும் தன் கார் நிறுவனத்தில் ஜெயிக்க முடியவில்லை. பல முதலீட்டாளர்களின் வற்புறுத்தலால் ஹென்றி ஃபோர்டு, வெளியேறிய பிறகு ஹென்றி போர்டு கம்பெனி, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, “காடிலாக்” நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, பதினோரு சக முதலீட்டாளர்களுடன் கைகோர்த்து, 28000 டாலர்கள் முதலீட்டில் தொடங்கப்பட்டதுதான் ஃபோர்டு மோட்டார் கம்பெனி. அங்கே புதிதாக வடிவமைக்கப்பட்ட காரில் ஒரு மைல் தூரத்தை 39.4 விநாடிகளில் கடந்து, வேக சவாரியில் புதிய சாதனை படைத்தார் ஹென்றி ஃபோர்டு.

1908ல் மாடல் ப வாகனத்தை ஃபோர்டு அறிமுகம் செய்தார். ஆனால், அதனை ரேஸ் காராக அறிவிக்க வேண்டுமென்றால் கூடுதலாக 450 கிலோ எடை தேவை என்று விதிகள் கூறின. அதன் பிறகு கார் பந்தயங்களிலிருந்து நிரந்தரமாய் விலகினார் ஹென்றி ஃபோர்டு.

ஃபோர்டு நிறுவனத்தில் பணியாளர் விதிமுறைகள் பற்றி கவனமான விதிமுறைகளை அவர் வகுத்திருந்தார். எட்டுமணி வேலைக்கு 5 டாலர்கள் என்பது 1913ல் கௌரவமான சம்பளம்தான். அதுவும் 1918ல், 6 டாலர்களாக உயர்த்தப்பட்டது. அமெரிக்காவில் அது அப்போது அதிகபட்ச சம்பளம்.   ஆனால், ஹென்றி ஃபோர்டு தொழிலாளர் சங்கங்களை நசுக்குவதில் தீவிரம் காட்டினார். கடும் மோதல்கள் வெடித்ததுண்டு. 1919ல் தன் மகன் எட்ùஸல் ஃபோர்டிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார் ஹென்றி ஃபோர்டு. ஆனால், முக்கிய முடிவுகளை எடுக்கிற அதிகாரம் அவர் வசமே இருந்தது. தந்தையும் மகனுமாகச் சேர்ந்து, பிற முதலீட்டாளர்களின் பங்குகளை வாங்கிக்கொண்டு, நிறுவனத்தின் ஏக போக உரிமையாளர்கள் ஆனார்கள்.   தன் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் கார் டயர்களுக்கான ரப்பரை விளைவிக்க மிகப் பெரிய தோட்டத்தை வாங்கினார் ஃபோர்டு. 1920, பிரேஸிலில் இவர் செய்த முதலீடு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

1920களில், மாடல் ப விற்பனையும் சரியத் தொடங்கியது. புதிய அம்சங்களைக் காரில் அறிமுகப்படுத்த வேண்டுமென்று எட்ஸல் வற்புறுத்தியும் பிடிவாதமாக மறுத்து வந்த ஹென்றி ஃபோர்டு, மெல்ல இறங்கி வந்தார்.   எட்ஸல் செய்த மாற்றங்களின் விளைவாக அறிமுகமான ஃபோர்டு மாடல் ஏ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.   1943ல், எட்ஸல் ஃபோர்டு திடீரென மரணமடைந்தார். தன் மருமகளோடு ஏற்பட்ட மோதலால் தன் 79வது வயதில் கொஞ்ச காலம் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை தானே வகுத்தார் ஹென்றி ஃபோர்டு.

யுத்த காலச் சிரமங்களில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஃபோர்டு நிறுவனத்திற்கு உதவி புரிந்தார்.   ஹிட்லரின் நாஜி இயக்கத்திற்கு ஹென்றி ஃபோர்டு உதவி வந்ததாகப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அது நிரூபிக்கப்படவில்லை. ஆனால், நாஜி ஜெர்மனி, அயல்நாட்டினருக்கு வழங்கும் மிக உயரிய விருதாகிய எதஅசஈ இதஞநந ஞஊ பஏஉ ஞதஈஉத பஏஉ எஉதஙஅச உஅஎகஉ ஃபோர்டுக்கு வழங்கப்பட்டது.  எட்ஸல் உயிரோடிருந்தபோது ஃபோர்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இன்றளவும் அது இயங்கி வருகிறது.

வயது முதிர்ச்சி, நோய் போன்றவற்றால் தளர்ந்துவிட்ட ஹென்றி ஃபோர்டு, தன் பேரனாக ஹென்றி ஃபோர்டு ஐஐ விடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஓய்வு வாழ்க்கையை மேற்கொண்டார்.   83வது வயதில் நிரந்தரமான ஓய்வை மேற்கொண்டார் ஹென்றி ஃபோர்டு. சிகரங்களைத் தொட்ட பிறகும் சறுக்கல்கள் சகஜம் என்பதைக் காட்டுவது அவரது வாழ்க்கை, சறுக்கிய பிறகும் மீண்டும் சிகரம் தொட்டது அவரது வெற்றிகளின் மகுடம்.

 திரிலோக சஞ்சாரி  – நம்பிக்கை