தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2025
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 14,718 முறை படிக்கப்பட்டுள்ளது!

அலர்ஜி – ஒவ்வாமை

அலர்ஜி என்றால் `ஒவ்வாமை’ என்று பொருள். அலர்ஜி என்ற பெயரை முதலில் வைத்தவர், டாக்டர் க்ளெமன்ஸ் ப்ரெய்ஹர் வான் பிர்கியூட். அலர்ஜி என்பது மைக்ரோப், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றால் வரக்கூடிய நோய் அல்ல. நம் உடலின் தற்பாதுகாப்பிற்காக `இம்யூன் சிஸ்டம்’ என்ற ஒரு அமைப்பு உள்ளது. சில நேரங்களில் நம் உடலில் இந்த சிஸ்டம் வேலை செய்யாமல் போய் விடுகிறது. அப்போது சாதாரணமான பொருட்களை சாப்பிட்டாலும் கூட அதைச் சரியாகக் கவனிக்காமல், இது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,424 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3

டி.சி. கரண்ட் (DIRECT CURRENT) – ஏஸி கரண்ட் (ALTERNATIVE CURRENT) டி.சி கரண்ட் என்பது பாட்டரி மற்றும் சோலார் செல், கம்யூடேட்டர் டைப் டைனமோ ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஆகும். டிசி மின்சாரத்தை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அதிக அளவு இழப்பு ஏற்படும். எனவே டி.சி மின்சாரம் இப்பொழுது வீட்டு உபயோகம், தொழில்சாலைகளுக்கு உகந்தது அல்ல.

ஏ.சி மின்சாரம் என்பது ஆல்டர்னேட்டர் அல்லது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,761 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளிலிருந்து விடுதலை

மருந்தில்லா மக்கள் இயக்கம் – பெயரைக் கேட்கவே புதுமையாக இருக்கிறது. மருந்தில்லாத, மருந்துகளைப் பயன்படுத்தாத மக்கள் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இருக்கிறார்களா? அவர்களெல்லாம் நோய் வந்தால் என்ன செய்வார்கள்? உயிர்காக்கும் என்று நம்பப்படுகிற மருந்துகளை ஏன் புறக்கணிக்கிறார்கள்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மத்தியில் தமிழகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களில் மருந்தில்லா மக்கள் இயக்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

1890 களில் இங்கிலாந்தில் ஒரு மக்கள் அமைப்பு உதயமானது. அதன் பெயர் தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம் ( Anti Vaccination . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,102 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2

மின்சார தேவையை கணக்கிடல்

இனி நமக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் மின்சாரம் எவ்வளவு என்பதை கணக்கிட வேண்டும். ஒவ்வொரு சாதனமும் எவ்வளவு மின்சாரத்தை உபயோகப்படுத்தும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

சாதாரண பல்பு மிகவும் அதிகமாக கரண்ட் எடுக்கும். உதாரணத்திற்கு 60 வாட் பல்பு என்றால் ஒரு மணி நேரம் எரிய 60 வாட் சக்தி வேண்டும். அதாவது 0.272 ஆம்பியர் கரண்ட் வேண்டும். அதே வெளிச்சத்தை 13 – 15 வாட் காம்பேக்ட் புளோரசென்ட் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,676 முறை படிக்கப்பட்டுள்ளது!

நரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்

அறுவை சிகிச்சை என்றாலே ஒரு காலத்தில் நோயாளி விழித்திருக்கும் போதே, மயக்க மருந்து இல்லாத நிலையில் அறுவைச் சிகிச்சை மருத்துவர் உடலை கிழித்து எலும்புகளில் இரம்பத்தைப் பாய்ச்சி அறுப்பார். இதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு பெருந்திகில் உண்டாகிறது அல்லவா?.அந்த நோயாளிக்கு எப்படி இருந்திருக்கும்?

நரகவேதனையுடம் கூடிய கடினமான மருத்துவ சிகிச்சை முறையை மாற்றியமைத்து, நோவை உணரா வண்ணம் உணர்ச்சி மயக்கமூட்டுகிற முறையை (Anaesthesia) பயன்படுத்துவதை புகுத்துவதற்கு மூலகாரணமாக விளங்கிய “வில்லியம் டி.ஜி. மோர்ட்டோன்” . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,458 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1

பூமியின் வெப்ப நிலை மாறுபட்டு வருவதால் பருவ மழை இப்பொழுது பொய்த்து வருகிறது. அதனால் நீர் தேக்கங்கள் மூலமாக தண்ணீரின் விசையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் (Hydro Power Plant) மின் உற்பத்தி குறைந்து வருகிறது.

நிலக்கரியை கொண்டு நீரை சூடாக்கி, நீராவியின் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் அணல் மின் நிலையங்களில் (Thermal Power Plant) தயாரிக்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் நிலக்கரி அமுத சுரபி போல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,517 முறை படிக்கப்பட்டுள்ளது!

உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!

‘உடல் உறுப்பு தானம்’ என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

“பொதுவாக நமக்குத் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 10,508 முறை படிக்கப்பட்டுள்ளது!

காகிதம் (பேப்பர்) பிறந்த கதை

காகிதம் (பேப்பர்) பிறந்த கதை – காகிதம் உருவான வரலாறு – History of paper making.

எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,277 முறை படிக்கப்பட்டுள்ளது!

சாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி?

இப்படி நடந்துகொண்டால் மிருகத்துக்கும் உனக்கும் என்ன வேறுபாடு? மிருகத்தனமாக நடந்து கொள்ளும் மனிதர்களைப் பார்த்து பலர் இவ்வாறு கேட்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

மிருகங்களைப் பார்த்து இந்த அளவு பயப்படும் மனிதர்கள், நாயை மட்டும் செல்லப் பிராணியாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதுதான் இன்றுவரை தொடரும் வியப்பு. நன்றியுணர்ச்சிக்கு எடுத்துக் காட்டாகவும், அதனைக் கூறி பெருமிதப்படுகிறார்கள். ஆனால், அந்த நாய்களுக்கு வெறிபிடித்து விட்டால் அவையே மனிதர்களைக் கொல்லும் எமனாக மாறுகின்றன.

நாய்களுக்கு வெறி பிடித்தால்..?

வெறிநாய் ஓரிடத்தில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,177 முறை படிக்கப்பட்டுள்ளது!

மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு

சைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு, History of Bicycle

உலகம் முழுவதிலும் உள்ள கிராமபுறங்களில் வாழும் மனிதர்களுக்கு இன்றளவும் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருப்பது மிதிவண்டி (Cycle) என்று சொன்னால் மிகையில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்த இந்த சைக்கிளை கண்டுபித்தவர்கள் பட்டறையில் உலோகங்களை உருக்கி காய்ச்சி அடிக்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,989 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு

பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு; பிளாஸ்டிக் (Plastic) பிறந்த கதை; History of Plastic

இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,218 முறை படிக்கப்பட்டுள்ளது!

LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு

இப்போது பழைய மாடல் TV வாங்குவது குறைந்து, ப்ளாட் பேனல் டிவிக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. இந்த வகையில் LCD, LED மற்றும் Plasma டிவிக்கள் மார்க்கட்டில் உள்ளன. இதில் அதிகம் உள்ளது எல்.சி.டி. டிவிதான். ஆனால் சில கடைகளில் நம்மைப் பல்வேறு சொற்களைச் சொல்லி குழப்பி விடு கிறார்கள். எனவே ப்ளாட் பேனல் டிவி வாங்குவதில் எதனை வாங்கலாம் என்று பார்ப்போம்.

ஸ்கிரீன் அளவு: முதலில் நாம் வாங்க இருக்கும் டிவி யின் . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்