|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,788 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th October, 2011 இருபது வருடங்கள் கழித்து தன் மகனைப் பார்க்க நிர்மலா சென்னைக்கு வந்திருக்கிறாள். இந்தத் தீர்மானம் அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும் கொடுமையான அனுபவமாக இந்த பயணம் இருக்கப் போகிறது என்பதை அவள் நன்றாகவே அறிவாள். போகும் இடத்தில் மகனால் ஒரு புழுவை விடக் கேவலமாக அவள் பார்க்கப்படுவாள், நடத்தப்படுவாள் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை. ஆனால் எத்தனையோ காலமாய் அவள் சுமந்து கொண்டிருந்த ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைக்காமல் இறக்க அவளுக்கு மனமில்லை என்பதால் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,575 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd October, 2011 சீர்மிகு சித்தார்கோட்டை என்ற, பெயர் பெற்ற நமது ஊரில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன? எத்தனயோ தலை சிறந்த பஞ்சாயத்து தலைவர்களை தந்துள்ளது இந்த சித்தார்கோட்டை. நாம் தேர்ந்தெடுத்து நிறுத்தும் வேட்பாளரை பக்கத்து கிராமத்தினர் மதித்து வாக்களித்தனர். அவர்கள் ஜாதி, மத, இன வேறுவாடு காட்டாமல் பணி செய்தனர். எப்போது நான்கு வேட்பாளர்களை நிறுத்தினோமோ அப்போதே நமது ஒற்றுமையையும் வெற்றியையும் தொலைத்தோம். வேற்றுமையை கலைந்து ஒருவருக்கு வழிவிட்டிருக்கலாம். நம் ஊரில், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,345 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd October, 2011 கூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா? சாபமா?
மக்கள் உணர்ச்சி சமீபத்தில் ஜப்பான், புக்குஷிமாவில் நடந்த அணுமின் நிலைய விபத்து, உலக மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில், அணுகுண்டு வீச்சினால் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த மக்கள், அதைப் பெரிது பண்ணாமல், தங்கள் நாட்டின் மின் தேவையை அணுசக்தி மூலமாகவே பெற முடிவு செய்து, குறுகிய காலத்திலேயே, 25 சதவீதம் வரை நாட்டின் மொத்த உற்பத்தியில் பெறுமளவுக்கு உயர்ந்து, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,458 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd October, 2011 “கும்பிடுரேனுங்க எஜமான்”.
“வாப்பா குப்பா. எப்படியிருக்க?”
“ஏதோ உங்க புண்ணியத்துல புழப்பு ஓடுதுங்க” என்றான் குப்பன்.
“கலியாணங் கட்டிக்கிட்டியே. ஏதாச்சும் விசேஷம் உண்டா!” நலம் கேட்டார் எஜமான்.
“ஒரு ஆம்பிள புள்ளங்க” என்றான் வெட்கத்துடன் குப்பன்.
“குப்பா உன்ன ஏன் கூப்பிட்டேன் தெரியுமா?”
“ஒரு வாரமா மனிதக்கழிவு தொட்டி (செப்டிக் டாங்க்) நிரம்பி வழியது. நாற்றம் தாங்கமுடியல. அத்த சுத்தம் செஞ்சு கொடேன். என்ன வேணும். எவ்வளவு வேணும் உனக்கு” என்று கேட்டார் எஜமான்.
“இரண்டு வாழப்பழமுங்க . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,205 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th October, 2011 பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த நீலச்சட்டைக்காரரைப் பார்த்த போது சத்யமூர்த்தி போலத் தெரிந்தது. கார் அந்த பஸ் ஸ்டாப்பைக் கடந்து சில அடிகள் முன்னோக்கிச் சென்று விட்டிருந்தாலும் காரை நிறுத்தி ஜெயக்குமார் அந்த மனிதரை உற்றுப் பார்த்தார். சத்யமூர்த்தி தான். மனிதர் வேலையில் இருந்த போது எப்படி இருந்தாரோ பார்க்க அப்படியே தான் இப்போதும் தெரிந்தார். எந்தப் பெரிய முன்னேற்றமும் தெரியவில்லை. ஜெயக்குமார் ஏளனமாக நினைத்துக் கொண்டார். “இப்போது பஸ் பயணம் தானா? இது வரை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,443 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th October, 2011 சில வாரங்களுக்கு முன் அமேசான் iCloud Drive சேவையை வெளியிட்டபோதே, அவர்கள் குளிகைக் கணினியைத் தயாரித்துக்கொண்டு இருக்கலாம் என்பதை யூகித்தேன். குளிகை தயாரிக்கும் திட்டம் பற்றி வாய் திறக்காமல் இருந்த அமேசான், இன்னும் சில மாதங்களில் குளிகை வெளியிடப்போவதாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டியாக இருக்கும் என்று பரவலாகப் பேசப் பட்டாலும், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம்?
முக்கியமாக, விலை! இந்தக் குளிகையை ஐ-பேடைவிடக் குறைவான விலையில் விற்றாக வேண்டும். கணிசமாகக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,001 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th October, 2011 ‘அரசுப் பள்ளி’ என்றால் நம்மையும் அறியாமல் ஓர் அலட்சிய மனோபாவம் மனதுக்குள் உட்கார்ந்துகொள்ளும். தேர்ச்சி பெறாத மாணவர்கள், பொறுப்பற்ற ஆசிரியர்கள், அடிப்படை உள் கட்டமைப்புகள் இல்லாத பள்ளிகள் – இவைதான், அரசுப் பள்ளியின் இலக்கணங்கள் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், நீங்கள் உடனடியாக ஆரணி, சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு விசிட் அடிப்பது நல்லது!
இந்த வருடம் தன் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் இப் பள்ளி, 1911-ல் துவங்கப்பட்டபோது, இதன் பெயர், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,112 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th October, 2011 சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை. மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி இருக்கும் 10.4 கிலோ எடையுள்ள “எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி18 ராக்கெட்டுடன் புதன்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.
“எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பற்றி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ராகவ் மூர்த்தி வழிகாட்டுதலின் படி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 7 துறைகளைச் சேர்ந்த 52 மாணவர்கள், கடந்த 2 வருடங்களாகச் செயற்கைக்கோள் உருவாக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,512 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th October, 2011 “மகள் என்னைக் கனடாவுக்கு வரச் சொல்லுறா. இந்தச் சளிக்காரி நான் அங்கை போய் என்ன செய்யிறது”
மூக்கால் சளி சிந்தவில்லை.
வார்த்தைகளில் நம்பிக்கையீனம் ஓட ஓடச் சிந்தியது. அழாத குறையாகச் சொன்னார் அந்த அம்மணி.
இதே அம்மணி சென்ற மாதம் வந்தபோது,
“வாழ வழியே தெரியவில்லை. தனிய கிடந்து மாயிறன். கூப்பிட்ட குரலுக்கு ஏனென்ன யாருமில்லை. என்ன வாழ்க்கை” எனச் சலித்துக் கொண்டார்.
தனியே வாழ்வது சிரமம் எனக் கவலைப்பட்ட அதே அம்மா இப்பொழுது மகளுடன் வாழச் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,316 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th October, 2011 திருமறை நபிமொழி தமிழாக்கப் பணி – ஒரு வரலாற்றுப் பார்வை!
முன்னுரை
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு மொழிபெயர்ப்புத் துறை சிறப்பான பங்காற்றியிருப்பதை நன்றியுடன் நினைவுகூர வேண்டும். அதிலும் குறிப்பாக, அரபி மொழியிலிருந்து தமிழுக்குக் கிடைத்துள்ள அரிய கருவூலங்கள் நினைத்துப் போற்றத் தக்கவை ஆகும்.
அவை இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்குவதுடன், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை முறைப்படுத்துவதிலும், இஸ்லாமிய வரையறைக் குட்பட்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை வழிநடத்துவதிலும் பெரும் பங்காற்றி வருகின்றன.
பொதுவான தமிழ் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,685 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st October, 2011 உலக முஸ்லிம்களில் ஷியா பிரிவினர் வெறும் 10 விழுக்காடு முதல் 13 விழுக்காடுதான். ஷியா முஸ்லிம்களில் 80 விழுக்காட்டினர் உலகில் ஈரான், பாகிஸ்தான், இந்தியா, இராக் ஆகிய நான்கு நாடுகளில் வசிக்கின்றனர்.
ஆக, இஸ்லாம் உலக மதங்களில் இரண்டாவது பெரிய மார்க்கமாகும். கிறித்தவம் – அதன் அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து- உலகின் முதலாவது பெரிய மதமாகும். உலகக் கிறித்தவர்களின் எண்ணிக்கை 202 கோடி ஆகும்.
கடந்த 2010ஆம் ஆண்டு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,840 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th September, 2011 வானியல் தொடர்பான படிப்பு என்பது எப்படி டெலஸ்கோப் தொடர்பானது அல்லவோ, அதேபோலவே, கணிப்பொறி அறிவியல் என்பது கணினி தொடர்பான படிப்பு அல்ல.
கணிப்பொறி அறிவியல் பொறியாளர்கள், கம்ப்யூட்டிங் துறையின் பல அம்சங்களில், அதாவது, தனிப்பட்ட மைக்ரோப்ராசசர்(Micro processor) வடிவமைப்பு, தனிப்பட்ட கணினி மற்றும் சூப்பர் கணினி முதல், சர்க்யூட் டிசைன் மற்றும் மென்பொருள் எழுதுதல்(Software writing) போன்ற பணிகள் வரை ஈடுபடுகிறார்கள். மேலும் அவர்கள், ரோபோடிக் ஆராய்ச்சியிலும் ஈடுபட தகுதியுள்ளவர்கள். அந்தப் பணியானது, மோட்டார்கள் . . . → தொடர்ந்து படிக்க..
|
|