தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,464 முறை படிக்கப்பட்டுள்ளது!

முஹர்ரத்தில் ஏவப்பட்டவைகளும் – விலக்கப்பட்டவைகளும்

முஹர்ரத்தில் ஏவப்பட்டவைகளும் – விலக்கப்பட்டவைகளும். புனித மாதம் வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! திருக்குர்ஆன் 9:36. மேற்குறிப்பிட்ட புனித . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,311 முறை படிக்கப்பட்டுள்ளது!

மலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி

`முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்’ என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதையே கொஞ்சம் மாற்றி, `கொசுவால் உருவாகும் மலேரியாவை, கொசுவின் எச்சிலை வைத்தே விரட்டியடிக்க முடியும்’ என்று சொல்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

உலக அளவில், ஒவ்வொரு வருடமும் சுமார் 30 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் சுமார் 10 லட்சம் பேர் மலேரியாவுக்கு பலியாகிறார்கள். மலேரியாவுக்கு தடுப்பூசி இல்லாதது இந்த மரணங்களுக்கு முக்கிய காரணமாகும்.

மலேரியா கொசுக்களால் பரவுகிறது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,978 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 14

நம் வாழ்க்கையில் பல சமயங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறோம். வாழ்க்கைப் புத்தகத்தில் புதியதொரு பொலிவான பக்கத்தைத் திருப்பி அதிலிருந்து அத்தனையையும் சிறப்பாய் செய்யத் துவங்க விரும்புகிறோம். எத்தனையோ புத்தாண்டு ஆரம்பங்களில் அப்படி ஆரம்பித்தும் இருக்கிறோம். சில நேரங்களில் தவறுகளால் வாழ்க்கையில் அடிபட்டு போதுமடா சாமி இனி கண்டிப்பாய் இப்படி இருக்கக் கூடாது என்று நினைத்தும் இருக்கிறோம். ஆனால் நம்மையும் அறியாமல் ஒருசில நாட்களிலேயே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,967 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோய் தடுக்கும் தாம்பூலம்

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். கிமு 2- ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகா வம்சம் என்னும் நூலில் வெற்றிலை மெல்லுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,179 முறை படிக்கப்பட்டுள்ளது!

பணம் உன்னுடையது… ஆனால் உணவு – பொதுச்சொத்து!

உலகின் வளர்ந்த நாடுகளில் முக்கிய ஸ்தானத்தை வகிக்கிறது ஜெர்மனி. பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற உலகப் புகழ்பெற்ற கார்கள் இங்குதான் தயாராகின்றன. ஸீமன்ஸ் போன்ற கம்பெனிகள் உலகப் புகழ் பெற்றவை. அணு ரியாக்டருக்கு வேண்டிய பம்புகள் இங்குள்ள ஒரு சின்ன ஊரில் தயாராகின்றன. இப்படிப் பல துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ள நாட்டில் மக்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள் என்றுதான் நினைப்போம்? நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன், ஒரு ஸட்டி டூர் என்னை அந்த நாட்டிற்கு இட்டுச் செல்லும் வரையில்

நான் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,800 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது!!

மருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள், ‘தசைகளையும் வளர்க்கிறது’ இப்போது!!

என்னங்க, எல்லாரும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா?

என்ன அப்படி பார்க்குறீங்க?

ஆஹா, இந்த மேலிருப்பான் திரும்பவும் ஆப்பிளோட வந்திருக்கானே….., இந்த முறை என்னத்த சொல்லப்போறானோ அப்படீன்னு பார்க்குறீங்களா?

அட, அது வேற ஒன்னுமில்லீங்க! ஆப்பிள், குறைந்தபட்சம் இருதய நோய் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவாவது மருத்துவரை கண்டிப்பா தூரத்திலே வைக்கக் கூடிய திறன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,218 முறை படிக்கப்பட்டுள்ளது!

இனி எல்லாமே டேப்ளட் பிசி

லேப்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை டேப்ளட் பிசிக்கள் பிடித்து வருகின்றன. குறிப்பாக, வர்த்தகப் பணிகள் மற்றும் நிர்வாக வேலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவர் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, டேப்ளட் பிசிக்களை இயக்கத் தொடங்கி வருகின்றனர். இந்த மாற்றம் தொடர்ந்து பெருகி வருகிறது. பன்னாட்டளவில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எதனால் லேப்டாப் இடத்தில் டேப்ளட் பிசிக்களை விரும்புகிறீர்கள் என்று பலரைக் கேட்டதில், கீழ்க்காணும் சிறப்பியல்புகளை அவர்கள் குறிப்பிட்டுக் கூறுகின்றனர்.

மின்சக்தி பயன்பாடு: இதனைப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,711 முறை படிக்கப்பட்டுள்ளது!

உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 13

நம்மில் பலருக்கு அடுத்தவர்கள் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதாக ஒரு மனத்தாங்கல் இருக்கிறது. அதனால் நமக்கு உரிய கௌரவம் தராமல் இருப்பதாக வருத்தமும் இருக்கிறது. ஆனால் உண்மையில் மிகவும் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் அடுத்தவர் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதோ, நமக்குரிய கௌரவம் தராமல் இருப்பதோ அல்ல. நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு, நம்மை நாமே முழுமையாக கௌரவிக்கத் தவறி விடுவது தான்.

ஒவ்வொரு மனிதனும் தன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,052 முறை படிக்கப்பட்டுள்ளது!

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு.

அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,181 முறை படிக்கப்பட்டுள்ளது!

அஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை

இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி

ஏப்ரல் மாதம். பெங்களூர் ஐ.ஐ.எஸ்-சில் இருந்த அந்தப் பெண்ணின் கண்களில் பட்டன குல்மொஹர் பூக்கள். முதுநிலை பொறியியல் வகுப்பில் இருந்த அந்த ஒரே பெண் தன் சக மாணவர்களுக்கு சளைத்தவரில்லை. சொல்லப் போனால் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டும் இருந்தார்.

அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் வந்திருந்தது. அமெரிக்கக் கனவுகள் அரும்பியிருந்த நேரம்.

கல்லூரி வளாக அறிவிப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,577 முறை படிக்கப்பட்டுள்ளது!

மனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்

இப்பாரினில் வந்து பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளை நீடித்துக் கொள்ளவே விரும்புகின்றான். உலகத்தில் அதிகமான காலங்கள் வாழவே ஆசைப்படுகின்றான். அவ்வடிப்படையில் வாழும் நாம் ஒவ்வொருவரும் இக்கட்டுரையை கவனமாகவும் மிகவும் ஆர்வத்துடனும் வாசித்து இங்கு கூறப்பட்டுள்ள விடயங்களை அணு அணுவாக தானும் பின்பற்றி நடப்பதுடன், மற்றவர்களுக்கும் இதுபற்றி எடுத்துக்கூறியும் ஆலோசனை வழங்கியும் உதவி செய்வோம்.

தற்பொழுது மனித உயிர்களை பலி கொள்ளும் அனேகமான காரணிகளில் முக்கிய 10 காரணிகளை என இனங்கண்டுள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,066 முறை படிக்கப்பட்டுள்ளது!

அறிஞர்கள் போற்றும் பெருமானார்

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். – ஜவஹர்லால் நேரு

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, . . . → தொடர்ந்து படிக்க..