தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,988 முறை படிக்கப்பட்டுள்ளது!

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள்

ஒரு நாட்டின் உண்மையான உயர்வு அந்த நாட்டின் ஒட்டு மொத்த சமுதாயத்தின் உயர்வில் தான் இருக்கிறது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் தான் உண்மையான உயர்விற்கு சரியான அளவுகோல். கோசல நாட்டின் சிறப்பைச் சொல்லும் போது கம்பன் சொல்வான் –

எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை; மாதோ.

மக்கள் அனைவரும் அனைத்து பெருஞ்செல்வத்தையும் அடைந்திருப்பதால் அங்கு இருப்பவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,122 முறை படிக்கப்பட்டுள்ளது!

சாத்துக்குடியின் மருத்துவக் குணங்கள் !

மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது.

தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.

பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,679 முறை படிக்கப்பட்டுள்ளது!

பார்வை – ஒரு பார்வை

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ

 

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (24:30)

இறைவன் மனிதனின் உடலில் அமைத்திருக்கும் அத்துணை உறுப்புகளும் இன்றியமையாதவைதான். ஆனாலும் அதில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,514 முறை படிக்கப்பட்டுள்ளது!

கணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே!

‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்றுதான் தகுதிக்கு மீறி செலவு செய்து பிள்ளைகளுக்கு மணமுடித்து வைக்கிறோம். உற்றாரும் உறவினரும் கூடி வாழ்த்தி அத்தனை சம்பிரதாயங்களோடும் நடைபெறுகிற எல்லாத் திருமணங்களும் வெற்றியடைகின்றனவா என்றால்… இல்லை என்றுதான் வருத்தத்தோடு சொல்லவேண்டி இருக்கிறது.

‘‘சமீப வருடங்களாக விவாகரத்து வழக்குகள் பதிவாவது அதிகரித்து வருகின்றன’’ என்று கவலைப்படுகிறார்கள் குடும்ப நீதிமன்ற வழக்கறிஞர்கள்.

‘‘இந்தக் காலத்து இளம் தம்பதிகளுக்கு பொறுமையே இல்லை. சின்னப் பிரச்னைகளைக்கூட தாங்கமுடியாமல் சட்டென்று கோர்ட் படி ஏறி விடுகிறார்கள்’’ என்று திருமண . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,506 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ நினைத்தால் வாழலாம்

மனம் உள்ளம் மூளை என்கிற மூன்று பாகங்கள் இருக்கின்றன. மனம் என்று நீங்கள் சொன்னது உடலில் எங்கே இருக்கின்றது? அது அறிவாக இருக்கிறதா?

அது மின்சாரம் போல இருக்கிறது. ஃபேன் ஓடுவதும் அதனால்தான். அது உங்கள் கண்களுக்குத் தெரியாது. மூளை என்பது இயந்திரம். அது செயல்பட இரத்தம் தேவை. வேறு சில இரசாயனங்களும் தேவை. சினிமாத்தனமாய் இடப்பக்கம், வலப்பக்கம் தொட்டு பேசுகின்ற இடத்தில் மனம் இல்லை. மனம் நமக்குள் மட்டுமில்லை. நம்மைச் சுற்றியும் இருக்கிறது.

சிந்தனைதான் மனம். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,592 முறை படிக்கப்பட்டுள்ளது!

‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு!

மரபணு மாற்றப்பட்ட பசுக்களை சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தாய்ப் பாலில் உள்ள சத்துகள் அடங்கிய பாலை இந்த பசுக்களே தருமென்று அவர்கள் கூறியுள்ளனர்.

தாய்ப் பால் தருவதற்காக மொத்தம் 300 பசுக்களை மரபணு மாற்றம் செய்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளியாகும் “தி சண்டே டெலிகிராப்’ பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் மரபணு மாற்ற பசுக்களை உருவாக்கிய குழுவின் தலைமை விஞ்ஞானி நிங் லீ கூறியுள்ளது: இந்த பசுக்கள் தரும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,265 முறை படிக்கப்பட்டுள்ளது!

மிரட்டும் மரபணு பயிர்கள்

இன்றைக்கு உலகின் ஹாட் நியூஸ் மரபணு மாற்று பயிர்கள் தான். இப்போ அப்போ என சொல்லிக் கொண்டிருந்த அலாவுதீன் பூதம் இதோ வாசல் வரை வந்து விட்டது. இனிமேல் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். இதை வைத்துப் பயிரிட்டால் ஆஹா..ஓஹோ. பருவமழை பொய்த்தாலும் பரவாயில்லை. நிலம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த விதைகளை பயிரிட்டால் களஞ்சியம் நிரம்பும். இப்படியெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி உண்டியலுடன் முன்னே நிற்பது அதே உலகண்ணன் அமெரிக்கா தான்.

2050ல் உலகின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,183 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊழலுக்கு எதிரான முதல் அடி – அண்ணா ஹசாரே

கடந்த ஆண்டு மெகா ஊழல்கள் ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம், CVC கமிஷனராக தாமஸ் நியமணம் என ஊழல் கொடி கட்டி பறந்தது. இன்னும் அதற்குண்டான தீர்வுதான் எட்டப்படவில்லை. தமிழக தேர்தலிலும், உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியிலும் மூழ்கி திளைத்துவரும் பதிவுலகம், இவரை பற்றி எழுத்தாது ஆச்சரியமே.

ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்ட வரையறையை கொண்டு வரவும், மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்த்தா அமைப்பை நிறுவவும் 73 . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,956 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன?

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,624 முறை படிக்கப்பட்டுள்ளது!

லாபம் தரும் புதினா விவசாயம்

புதினாச் செடிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் என்று கூறப்படுகிறது.

தமிழகச் சமையலில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இல்லாமல் பெரும்பாலான உணவு வகைகள் இல்லை. உடல் ஆரோக்கியத்துக்குச் சிறந்த புதினா இலைகள், நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரிமானம் இல்லாமை போன்ற உடல் கோளாறுகளுக்குச் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.புதினாவை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்தம் சுத்தமாகும்.தொண்டைக் கரகரப்பைப் போக்கும் பல்வேறு மருந்துகள், மிட்டாய்கள் போன்றவற்றில் புதினா எண்ணெய் (மின்ட்) பிரதான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,472 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடமைக்கு எடுத்துக்காட்டு – ஆர்.டி.ஓ., சங்கீதா

போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதிக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு வீடு, வீடாக பணம் வினியோகம் செய்ய அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான உதயகுமார் என்பவருக்கு சொந்தமான, “எம்.ஜே.டி., ஆம்னி’ பஸ்சின் மேற்கூரையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு பணம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவில், திருச்சி ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.

ஆர்.டி.ஓ., சங்கீதா. நள்ளிரவு 2.30 மணி என்றும் பாராமல், அவரது டிரைவர் துரை மற்றும் உதவியாளர் ஒருவர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 70,045 முறை படிக்கப்பட்டுள்ளது!

அட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா – 1

தினமும் இதே சாம்பாரும் சட்னியும்தானா? வாய்க்கு ருசியா ஒரு குருமா, ஒரு கிரேவி… ஒண்ணு கிடையாது நம்ம வீட்டுல!’’ என்று உங்கள் இல்லத்தரசரோ, அருமைப் பிள்ளையோ அலுத்துக்கொள்ள..

‘‘நான் எங்கே போவேன் மசாலாவுக்கும், கிரேவிக்கும்! இது என்ன ஹோட்டலா?’’ என்று அங்கலாய்க்கிறீர்களா?

தூக்கியெறியுங்கள், உங்கள் கவலையை! ஹோட்டல் சுவையைவிடவும் பிரமாதமான கைப்பக்குவத்தில் எல்லா சைடு டிஷ்களையும் நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.

இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, ப்ரெட், பூரி, நாண், பரோட்டா, சாதம் என்று அத்தனைக்கும் தொட்டுக்கொள்ள . . . → தொடர்ந்து படிக்க..