Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,294 முறை படிக்கப்பட்டுள்ளது!

அருகி வரும் நிலத்தடி நீர் – சிக்கல்களும் அறிவியல் தீர்வும்

இவ்வுலகில் உயிரினம் தோன்றுவதற்க்கும் அது வாழ்வதற்க்கும் நீர் இன்றியமையாது.இத்தகைய பெருமைகளை கொண்ட நீரினை பற்றியும் அது இல்லையேல் வரும் விளைவுகள் பற்றியும் அதனை தீர்ப்பதற்கான அறிவியல் தீர்வுகள் பற்றியம் இங்கு காண்போம்.

நீரின் பெருமைகள்

நிலத்தடிநீரின் வகைகள் நிலத்தடிநீரின் பற்றாகுறைக்கான காரணங்கள் நிலத்தடிநீரின் பற்றாகுறையால் ஏற்படும் விளைவுகள் அறிவியல் தீர்வுகள்

நீரின் பெருமைகள்

உலகில் உயிரினம் தோண்றுவதற்க்கு மூலக்காரணம் நீர்தான். இத்தகைய சிறப்புகளைகொண்ட நீரினை நமது அய்யன் திருவள்ளுவர் இவ்வாறு கூறுகின்றார்,

‘நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,757 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹஜ் புனிதப் பயணம் (2011) விண்ணப்பங்கள்

ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹஜ் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.

ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,427 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஜப்பான் கற்றுத் தரும் பாடம்!

மகத்தான தொழில்நுட்ப வல்லமையால் உலகின் பணக்கார நாடு என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது ஜப்பான். அந்த தேசத்துக்கு, ‘செயற்கையான தொழில்நுட்பங்களைவிட நான் வலிமைமிக்க சக்தி’ என்று உணர்த்தியிருக்கிறது இயற்கை. அடுத்தடுத்துத் தொடரும் வலிமையான நிலநடுக்கங்கள், சுழற்றியடித்த சுனாமி, இவற்றின் விளைவுகளால் சீறத் தொடங்கியிருக்கும் எரிமலை என இயற்கை தன் இருப்பை முகம் காட்டி ஞாபகப்படுத்தி இருக்கிறது. சுனாமி எச்சரிக்கைத் தொழில்நுட்பம் ஓரளவுக்கு இருப்பதாலும், நிலநடுக்கங்களைத் தாங்கக்கூடிய கட்டிட அமைப்பாலும், நிலநடுக்கங்களின்போது தற்காத்துக்கொள்வது எப்படி என்பதை அறிந்து வைத்திருந்ததாலும் உயிரிழப்புகளை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,928 முறை படிக்கப்பட்டுள்ளது!

30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் ?

இன்னும் ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு குழந்தை பெத்துக்கக் கூடாது. முதல்ல லைஃப்ல செட்டில் ஆயிடணும். சின்னதா ஒரு அப்பார்ட்மெண்டாவது வாங்கணும். அப்புறம் தான் குழந்தையைப் பற்றி யோசிக்கணும். இது தான் பெரும்பாலான இளசுகளின் சிந்தனை. முன்பெல்லாம் கல்யாணம் முடிந்த பத்தாவது மாதம் கையில் குழந்தை இல்லையென்றால் கொஞ்சம் நக்கலாய்ப் பார்ப்பார்கள். இப்போ நிலமை தலை கீழ். “என்னடா அதுக்குள்ள அப்பாவாயிட்டே” என கிண்டல் தான் வரும்.

திருமணத்தையே முப்பது வயதுக்கு மேல் வைத்துக் கொள்ளத் தான் பலரும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,968 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறுமணத்தை ஊக்குவிப்போம்!

[ ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.]

உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தங்களுக்கான துணையை முறைப்படித் தேடி திருமண பந்தத்தில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இத்திருமணம் வாரிசுகளை உருவாக்கவும், கற்புக்குப் பாதுகாப்பாகவும், உலக இன்பங்களை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,753 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய ரூபாய்க் குறியீடு வடிவமைப்பாளர் திரு. த. உதயகுமார்

உலகளவில் வளர்ந்த நாடுகளுக்குப் போட்டியாக உருவெடுத்து வரும் நம் இந்திய ரூபாய்க்கு தனிக்குறியீடு அவசியம் என்பதை பலரும் உணர்ந்ததின் அடிப்படையில் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது ரூபாய்க்கான புதிய குறியீடு.

உலக நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் வேளையில் நாம் மட்டுமே ஏறுமுகமாக இருந்து வருகிற தருணத்தில் ரூபாய்க்கு தனிக்குறியீடு கண்டிருப்பதின் மூலமாக சர்வதேச அளவில் இனி நம் இந்திய ரூபாய்க்கு தனி மதிப்புக் கிடைக்கப் போகிறது.

அமெரிக்க (டாலர்), ஐரோப்பிய நாடுகள் (யூரோ), . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,772 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹிஜ்ரீ பிறந்த வரலாறு

ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் “ஹி“ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.

நம்மில் மிகப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,054 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிழக்கு கடற்கரை சாலை அமைத்தும் பயணநேரம்!

கிழக்கு கடற்கரை சாலை அமைத்தும் விரைவு பஸ்கள் மூன்று மணி நேர தூத்துக்குடிக்கு 5மணி நேரம் பயணம்

கிழக்கு கடற்கரை சாலையில் தூத்துக்குடி செல்லும் பஸ்கள் பழைய கால அட்டவணை அடிப்படையில் செல்வதாக கூறி, மூன்று மணி நேரத்தில் போகும் இடத்திற்கு ஐந்து மணி நேரமாக்குவதால் பயணிகள் உடல் வலியுடன் அவதிபடுகின்றனர்.ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து தூத்துக்குடிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுன் பஸ்களின் கால அட்டவணை பல ஆண்டுகளுக்கு முன் தயார் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,102 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்

சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

உடல் எடை மிகுந்தவர்களுக்கே மூட்டுவலி, மூட்டு வீக்கம் போன்ற தொல்லைகள் வருகின்றன. இவை வாத நோய்க்கான அறிகுறி என்பதை உணர்ந்து உணவுத்திட்டத்தை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும்.

மூட்டு வீக்கத்திற்கு மேலும் மேலும் மருந்துகள், புது வைத்தியம் என்று பார்ப்பதை விட சரியான சத்துணவு மூலம் மூட்டு வீக்கம், மூட்டு வலி முதலிய துன்பங்களை எளிதில் வென்று இயல்பாக வாழலாம்.

சிவப்பு இறைச்சி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,347 முறை படிக்கப்பட்டுள்ளது!

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் – டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன்

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் ஈமான் என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று துவா செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப்பட்டிருப்போம்.

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என் பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து நான் சேகரித்ததுண்டு. இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான்.

டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,259 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெண்கள் மற்றும் அரவாணிகள் நலத்திட்டங்கள்

பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள பெண்களுக்கு உதவ தமிழக அரசு நலத் திட்டங்ள் பல உள்ளன. குறிப்பாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் மூலம் மணப்பெண்ணின் பெற்றோருக்கு ரூ.20,000/- கிடைக்கும். மணப்பெண் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது போன்று இன்னும் பல திட்டங்கள் உள்ளன.

மற்ற சமூகங்கள் இதனை முறையாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த நாட்டின் முக்கிய அங்கமாக உள்ள முஸ்லிம்கள் இதனைப் பயன்படுத்துவது இல்லை என்பது மிக வருத்தமான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,731 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)!

சோதனைகள் சில சமயங்களில் தனித்து வருவதில்லை. ஒருவர் வாழ்விலேயே அவை கூட்டமாகவும், அடுக்கடுக்காகவும் தொடர்ந்து வந்து விடுகின்றன. அப்படி வருகையில் சிலர் உடைந்து போகிறார்கள், சிலர் தங்கள் சுற்றத்தின் பாசத்தையும், நட்பின் ஆழத்தையும் அளந்து பார்க்கிறார்கள், சிலர் புடம் போட்ட தங்கமாக ஜொலித்து எழுகிறார்கள். அப்படி ஜொலித்து எழுந்த ஒருவர் தான் பாலஸ்தீனிய டாக்டரான இஸ்ஸெல்டின் அப்யுலைஷ் (Izzeldin Abuelaish) என்பவர்.

திடீரென்று மனைவி நோய்வாய்ப்பட்டு இறக்கும் வரை அப்யுலைஷ் வாழ்க்கை அமைதியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. . . . → தொடர்ந்து படிக்க..