தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,752 முறை படிக்கப்பட்டுள்ளது!

மீலாது விழா கொண்டாடலாமா?

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)

நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா: –

ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமைய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,597 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண்மணி

மரக்கரண்டியால் புலியை விரட்டிய மலேசிய பழங்குடி வீரப் பெண்மணி

மலேசியாவை சேர்ந்த ஒரு பழங்குடியினப் பெண், தனது கணவன்மேல் பாய்ந்த புலியை, பெரிய மரக்கரண்டியைக் கொண்டு, தலையிலேயே “நச்’சென அடித்து விரட்டியுள்ளார்.

மலேசிய நாட்டின் வட பகுதியில் அடர்ந்த காடுகள் அதிகம். இங்கு, பாரம்பரிய வேட்டைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜகாய் பழங்குடியினரும் ஒருபகுதியில் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்த டாம்புன் ஜெடியூ என்பவர் நேற்று தனது குடிசைக்கு அருகிலேயே அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,505 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்- 14-02-2011

உலகளவில் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும்(என்.யு.எஸ்) ஒன்று.

சில முக்கிய நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில், இந்த பல்கலையானது, உலகளவில் 35 இடத்திற்குள்ளும், ஆசிய அளவில் 5 இடத்திற்குள்ளும் வருகிறது. இந்த பல்கலை, இளநிலை பட்டங்களுக்கு பலவிதப் படிப்புகளை வழங்குகிறது.

இந்த பல்கலைக்கழகம் வரும் 2011-2012 கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய தரநிலையில் 12 ஆம் வகுப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,521 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோயற்ற வாழ்க்கையா? நோய் பெற்று சிகிச்சையா?

இன்றைக்கு பரபரப்பாகப் பேசப்படும் திட்டம், அரசின், “மருத்துவ காப்பீடு திட்டம்!’ அது ஆட்சியாளர்களின் பெயரிலேயே அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட வருவாய் பிரிவில் உள்ள அனைத்து மக்களையும் கவரும் விதமாக அது உருவாக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய, பல்துறை சிறப்பு மருத்துவப் பிரிவுகள் கொண்ட மருத்துவமனைகளில், பணக்காரர்களுக்கு கொடுக்கப்படும் உயர்தர சிகிச்சைகள் கூட, சாதாரண ஏழைக்கும் கிடைக்கும் என்பது இத்திட்டத்தின், “கவர்ச்சி!’ இதனால், இது பெரும் வரவேற்பைப் பெற்றது ஆச்சரியமில்லை. இதே மாதிரி திட்டங்கள், வேறு சில மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,176 முறை படிக்கப்பட்டுள்ளது!

காதலர்தினம் ஒரு இஸ்லாமியபார்வை

காதலர்தினம் ஒரு இஸ்லாமியபார்வை!!! & காதலர் தினம் எனும் கலாச்சார சீரழிவு

பிப்ரவரி 14 அன்று காதலர்தினம் உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்படுகிறது. காதல் என்றால் ஒரு பெண்ணும்-ஆணும் விரும்புவது என்ற ஒன்றுதான் அர்த்தம் என்ற ரீதியில் அர்த்தம் செய்யப்படுகிறது. ‘லவ்’ என்ற இந்த வார்த்தைக்கு அன்பு, நேசம், காதல் என்ற அர்த்தங்கள் உண்டு. இந்த காதலர்தினம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை முதலில் அறிந்துகொண்டு, இந்த தினம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பார்ப்போம்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,528 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?

அமெரிக்க முறைப்படி எண்களை மில்லியன், பில்லியன், ட்ரில்லியன், க்வாட்ரில்லியன், யின்டில்லியன், என்று துவங்கி சென்டில்லியன் வரை நீட்டிக்கொண்டே போகலாம். (சென்டில்லியன் என்றால் ஒன்று போட்டு 303 ஸைஃபர் போடவேண்டும்).

ஆனால், நம் இந்தியாவிலோ கோடியைத் தாண்டிவிட்டால் பிறகு வேறு வார்த்தை கிடையாது. அதன் பிறகு நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் கோடி, கோடி கோடி என்று கூறித்தான் மக்களைக் குழப்ப வேண்டி யிருக்கிறது. ஒரு காலத்தில் கோடி என்பது மிகப் பெரிய எண்ணாக இருந்ததால், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,067 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் கண்டறிய

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? ஆன்லைன் மூலம் கண்டறிய !

பெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவத்ற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,380 முறை படிக்கப்பட்டுள்ளது!

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!

மௌலவி அலி அக்பர் உமரி

‘இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி எண்: 1082)

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,221 முறை படிக்கப்பட்டுள்ளது!

நல்ல(!) நேரம்

மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும்.

உதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,420 முறை படிக்கப்பட்டுள்ளது!

குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா?

இல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டது தான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத் தரும் வாழ்க்கை முறையை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்காதவர்கள் முஸ்லிமல்லாதவர்கள்.

இந்த அடிப்படையில் நோக்கினாலே திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இக்கேள்விக்கு திருக்குர்ஆன் கூறும் பதிலை கவனித்தாலும் அது உலக மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,753 முறை படிக்கப்பட்டுள்ளது!

கைகள், கால்கள் இல்லை – கவலையும் இல்லை

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை – ஒரு உண்மைக் கதை- நவின்

எனது பெயர் நிக் வியூஜிசிக். இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,054 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்!

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, ‘என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் . . . → தொடர்ந்து படிக்க..