|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,699 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th February, 2015 இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நபரும் தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க விரும்புவார்கள். வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும். உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய், இதய நோய்கள், வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,343 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th December, 2014 யாராவது குண்டக்க, மண்டக்க பேசினால், அவனுக்கு ‘கொழுப்பு’ அதிகமாகி விட்டது என்கிறோம். கொழுப்பு, பேச்சில் அதிகமானாலும், உடலில் அதிகமானாலும் ஆபத்துதான். மனித உடலுக்கு கொழுப்புச் சத்து மிக அவசியம். அது அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். நம் உடலுக்கு கொழுப்பு ‘நல்ல நண்பன்’ (High Density Lipo Protine – HDL) . அதே நேரத்தில் ‘மோசமான எதிரி’ (Low Density Lipo Protine – LDL) .
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,946 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th December, 2014 மேலை நாட்டினரைப் போல் இந்தியர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் திக்கப்படுவதில்லை. இருப்பினும் நம்மில் பலரும் சிற்சில வேளைகளில் இத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக நாகரீக வாழ்க்கை முறையில் மூழ்கித் திளைத்திருக்கும் நகரத்து மக்கள் இதனால் பெரிதும் பாதிப்புறுகின்றனர். ஓய்வில்லாத ஓட்டமும், உணவுக் குறைபாடுகளும், இட நெருக்கடியும், போதிய கழிவறைகள் இல்லாமையும் இதற்குக் காரணங்கள் என்று கூறலாம். அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் மூலநோயிலும் பௌத்திரத்திலும் போய் முடியலாம். மலமிளக்கிகளும், பேதி மருந்துகளும் இதற்கு நிரந்தரமான தீர்வாகாது.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
16,147 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th December, 2014 வைட்டமின் ‘சி’ யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரைகள் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயன்கள்
உடல் சீராக வளர உதவும். எலும்புகளும், பற்களும் உருவாக உதவுகிறது. புரதத்துடன் இணைந்து திசுக்களின் வளர்ச்சியிலும் அமைப்பிலும் பங்கேற்கிறது. உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளில் உண்டாகும் தொற்று நோய்களை தடுக்கிறது. அடிபட்டதால் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,702 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th December, 2014 சின்ன வயது ஆண்கள் நிரந்தர கர்ப்பஸ்த்ரீ மாதிரி அலைவதுகண்டு எழுதுகிறேன். வயிறு அதன் சார்ந்த செரிமான செயல்பாடுகளை தெரிய தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டில் ‘இஞ்சிமரப்பா”விற்கும் மனிதர் விவரமாக சொல்லிவிடலாம். இருப்பினும் இதை சரியாக புரிந்து கொண்டால் இறைவனின் எத்தனையோ அதிசயங்களில் இதுவும் ஒன்றாக தோன்றும். வாய்க்கு பக்கத்திலேயே கெட்ட உணவு / நல்ல உணவு கண்டுபிடிக்கும் ஸ்கேனர் [வாசம் அறியும் மூக்கு] வைத்த இறைவன் சில விதி முறைகளையும் வைக்காமல் இருந்திருக்க மாட்டான்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,261 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th November, 2014 ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். ‘ரோசாசியே’ தாவர குடும்பத்தை சேர்ந்த பேரிக்காயின் அறிவியல் பெயர் ‘பைரஸ் கமியூனிஸ்’. பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் பேரிக்காய்கள் விளைகின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.
பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது. எனினும் ஆப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,289 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd August, 2014 உணவுக்கு சுவையூட்டுவதற்காக நாம் சேர்க்கின்ற உப்பு சோடியம், குளோரைடு என்ற இரு வேதிகளின் சேர்மமாகும். உடலுக்குத் தேவையான ஓரு சத்து என்றாலும் உப்பு அதிகமாகின்ற போது உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. நமது இரத்தத்திலும், உயிர்த் திரவங்களிலும் காணப்படும் இந்த உப்புச் சத்து உடலில் சரியானபடி இருக்கின்ற பணியை நமது சிறுநீரகங்கள் செய்கின்றன. உடலிலுள்ள உப்பைச் சிறுநீர் மூலமாக வெளியேற்றுகின்றன. உப்பில் 40 சதவிகிதம் சோடியம் என்னும் கனிமப்பொருள் இருக்கிறது. அளவில் மிகுந்த சோடியம் இதயத்திற்கும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,574 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd August, 2014 தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதால், இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சராசரியாக ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள், சராசரியாக ஐந்தாண்டு கல்விக் கட்டணமாக (Tution Fees) மட்டும் ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை வசூலிக்கின்றன. உதாரணமாக, சாராய உடையாரின் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ரூ.9 லட்சத்தை ஆண்டு கல்விக் கட்டணமாகவும், பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,321 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th August, 2014 “எனக்கு நேரமே இல்லை! என்னுடைய கடுமையான பணிச்சுமையில், இதற்குநேரம் ஒதுக்க வழியே இல்லை” வேலைகளைத் தள்ளிப் போட இது தான் எல்லாரும் எளிதாக கூறும் சாக்கு. அதற்காக, நாம் வேலைகளே இல்லாத மந்தமான வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உடலும் உள்ளமும் தகுதியாக இருக்க வேண்டுமென்றால், இரண்டுக்கும் போதுமான வேலைகளை உடலுக்கு அளிக்க வேண்டும். நமது பணிச்சுமைகளுக்கிடையில், நமது இயல்பான பணிகளினூடே, நமது உடல்தகுதிக்கான (fitness ) பயிற்சிகளையும், எப்படி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,500 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th August, 2014 பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும்.
ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,066 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th August, 2014 உங்களுக்கு தெரியுமா உலகில் உள்ள நோய்களில் சுமார் 80 சதவீதமான நோய்கள் தானாகவே குணமடையும் தன்மைக் கொண்டவை. அவற்றை குணப்படுத்த எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. ஆனால் நம்மில் சிலர் தொட்டதற்கெல்லாம் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தேவையில்லாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதால் அவர்கள் மிகப்பெரிய பக்க விளைவுகளுக்கு ஆளாகுவதுடன், சில நேரங்களில் அது உயிராபத்தையும் ஏற்படுத்திவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.
நாம் பயன்படுத்தும் எல்லா மருந்துகளும் ஏதோ . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,471 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st May, 2014
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!
சிலர் உணவு . . . → தொடர்ந்து படிக்க..
|
|