Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,300 முறை படிக்கப்பட்டுள்ளது!

எடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்!

தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். `இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்’ என மோரின் மேன்மையை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். கிராமத்து வயல்வெளிகளில் கூலிவேலைக்குச் செல்பவர்கள், பழைய சாதத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மோர் மிளகாய் வகையறாக்களுடன் மதிய சாப்பாடு எடுத்துச் செல்வார்கள். உழைத்துக்களைத்து உச்சி வெயிலில், வயல்வரப்புகளில் அமர்ந்தபடி இந்த உணவை ரசித்து ருசித்து உண்பார்கள்.

மோர்

எந்தவொரு கல்யாணப் பந்தியும் மோர் இல்லாமல் முடிவதில்லை. சாம்பார், காரக்குழம்பு அல்லது வத்தக்குழம்பு, ரசம், மோர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,947 முறை படிக்கப்பட்டுள்ளது!

சென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்!

‘ஒரு காலத்தில் இயல்பாக இருந்த உணவு இன்று இயற்கை உணவாகிவிட்டது’- இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படும் ஒரு வாசகம். ‘மருந்தே உணவு, உணவே மருந்து’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிறுதானியங்களின் மகிமைகள் குறித்துப் ‘பசுமை விகடன்’ இதழிலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். 

பசுமை விகடன் நடத்திய பயிற்சிகள் பலவற்றில் கலந்துகொண்ட நம்மாழ்வார், இயற்கை வாழ்வியல் முறைகள் மற்றும் உணவுகள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,117 முறை படிக்கப்பட்டுள்ளது!

குளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்!

வெயில் காலத்தைவிட குளிர் காலத்தில் அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக குளிர் காலத்தில் சளி, மூக்கடைப்பு பிரச்னைகளில் துவங்கி, தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல் என அடுக்கடுக்காகப் பிரச்னைகள் படை எடுக்கும். இதில் ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். அதேபோல குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,490 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்?

ஒரு பாமரனின் பார்வையில், “மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். மருத்துவமனை என்பது ஒரு சேவை மையம். மருத்துவர் என்பவர் உயிரைக் காக்கும் கடவுள்”. இப்படித்தான் தொடக்கத்தில் மருத்துவமும் பண்டுவ முறைகளும் மருத்துவர்களும் இருந்தனர். அறத்தின் பால் தன்னலம் இன்றி பிறர் உயிர் காத்து, தன்னிடம் வரும் நோயாளிகளைக் குணப்படுத்தும் குணவான்களாக இருந்தனர். சேவைத் துறையில் பணப் புழக்கம் அதிகரித்த போது மருத்துவர்களும் சற்று தடுமாற தொடங்கினர். இதன் விளைவு, தன்னிடம் வரும் நோயாளிகளை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,204 முறை படிக்கப்பட்டுள்ளது!

பற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்!

பல் போனால் சொல் போச்சு என்பார்கள். இந்தப் பொன்மொழி எப்போது தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பல காலமாக பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள். ஏனெனில் பற்கள் தான் ஆரோக்கியத்துக்கான வாசல் என்கிறார் பிரபல பல் மருத்துவமனையில் பல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் தீபாலட்சுமி.

பற்கள் அழகாக இருந்தால், சிரிக்கும் போது நடிகை சினேகா போல் அழகாக இருக்கும். ஒருவரின் சிரிப்பை அழகாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,784 முறை படிக்கப்பட்டுள்ளது!

45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை

பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்னைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல பிரச்னைகளை சந்திப்பார்கள். ஆகவே இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,289 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்!

தேவையற்ற பழக்கங்களை தவிர்ப்பதே இருதயத்திற்கு பலம். புகை பழக்கத்தை நிறுத்துவோம்… இருதயத்தை காப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் இருதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர்.

புகை பழக்கம்: புகை பிடிப்பதன் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் கட்டுரைகளும், நுால்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதும், புகை பிடித்துப் பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை; முதன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,059 முறை படிக்கப்பட்டுள்ளது!

தயிரில் என்னவெல்லாம் செய்யலாம்

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 வீதம் பால்தான் ஜீரணமாகியிருக்கும்.ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 வீதம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,309 முறை படிக்கப்பட்டுள்ளது!

“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்!

காலையில் பீச், பார்க் செல்பவர்களுக்குத் தெரியும், ‘ஜே ஜே’ என்று வாக்கிங், ஜாகிங் செல்பவர்களின் திருவிழாக் கூட்டம் பற்றி! ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,175 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுகப்பிரசவம் சுலபமே!

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது.

ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,214 முறை படிக்கப்பட்டுள்ளது!

டானிக்! டானிக்!! டானிக்!!!

இரும்புக்கு டானிக், இதயத்துக்கு டானிக், மூளைக்கு டானிக், கிட்னிக்கு டானிக் என டானிக் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுவோரின்எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களைக் குறிவைத்து வணிக உலகமும் சாமர்த்தியமாக, வேகமாக விற்பனையாகும் வீட்டு நுகர்பொருட்களை (FMCG-FAST MOVING CONSUMER GOODS), வேகமாக விற்பனையாகும் ஆரோக்கிய உணவுகளாக (FMHG- FAST MOVING HEALTH GOODS) மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறது. கொஞ்சம் அக்கறை; கொஞ்சம் உறுத்தல்; நிறையப் பயம் நிறைந்த நடுத்தர வர்க்கமும், இணையம் மூலமும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,520 முறை படிக்கப்பட்டுள்ளது!

பித்தப் பையில் கல் உண்டாவது ஏன்?

மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.

சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி . . . → தொடர்ந்து படிக்க..