Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,232 முறை படிக்கப்பட்டுள்ளது!

இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு

மனித உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் காப்பதே உணவின் பிரதான நோக்கம். ருசியும் மணமும் இரண்டாம் தேவைகளே. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வாழ்க்கையின் அர்த்தங்களும், உணவுகளின் நோக்கமும் மாறிவிட்டன. வறுமைப் பசியாலும், கடன் தொல்லையாலும் ஏற்படும் மரணங்களை விட அளவுமீறிய ஒழுங்கற்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் மரணங்களே அதிகம்.

நமது உணவுகளில் பெரும்பகுதி கார்போ ஹைட்ரேட், இனிப்பு, அடர்கொழுப்பு (Saturated Fats) போன்ற சத்துக்களே அடங்கியிருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,647 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்

ஆயிரத்து எண்ணூறு வரை பெரியம்மை நோய் ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகவும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. முகம், கை, கால்களில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருவருப்பான தழும்புகளைப் பெற்றிருந்தனர். கண்களில் இந்நோய் வந்தால் பார்வை பறி போய்விடும் நிலையும் இருந்தது.

எட்வர்டு ஜென்னர் கி.பி. 1800 இறுதியில் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பெரும்பான்மை மக்கள் இந்நோய்க்கு ஆளாகி வந்தனர்.

எட்வர்டு ஜென்னர் 1749 – ஆம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,224 முறை படிக்கப்பட்டுள்ளது!

குர்ஆனில் சிலந்தியின் வீடு

குர்ஆன் கூறும் சிலந்தியின் வீடு ஓர் அறிவியல் அற்புதம்

அய்னுஷ்-ஷம்ஸு பல்கலைக்கழகத்தின் விவசாயக்கல்லூரியில் பணியாற்றும் பூச்சிகள் தாவரவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் அல்யம்மீ பின்வரும் தகவலைக் கூறுகிறார்:-

குர்ஆனில் அல்லாஹ் சிலந்தியை உதாரணமாகக் கூறுகிறான்.

مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتاً وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ لَوْ كَانُواْ يَعْلَمُونَ

அல்லாஹ் அல்லாதவற்றை(த் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,599 முறை படிக்கப்பட்டுள்ளது!

3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்

“மை டியர் குட்டிச் சாத்தான்” – எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் 3டி படம் இது தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மனசை ரொம்பவே வியக்க வைத்த படம் இது. இந்தியாவின் முதல் 3டி படம். இந்தப் படம் வெளியான உடனே இனிமேல் எல்லாமே 3டி மயம் தான் என்றார்கள். சாதாரண படங்களெல்லாம் ஓடாது என்றார்கள். ஆனால் அப்படி ஏதும் மாயாஜாலம் நடக்கவில்லை.

அந்தப் படம் படம் வெளியாகி கால்நூற்றாண்டு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,851 முறை படிக்கப்பட்டுள்ளது!

உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில

உலகின் மிகப்பெரிய ஒரு மில்லியன் டொலர் தங்க நாணயம் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் உலகின் மிகப்பெரிய வரைபடம்

உலகின் மிகப்பெரிய வரைபடம் என்றதும் ரொம்ப சாதாரணமாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இது உண்மையில் உலகம் அளவுக்கு மிகப்பெரிய வரைபடம்.

ஸ்டாக்ஹோம் ஓவியரான எரிக் நார்டென்கருக்கு ஒரு வித்தியாசமான ஐடியா உதித்தது. ஜிபிஎஸ் கருவிவின் உதவியுடன், உலகின் மிகப்பெரிய ஓவியத்தை வரைய முடியும் என நம்பினார் அவர்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 13,095 முறை படிக்கப்பட்டுள்ளது!

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே! நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,116 முறை படிக்கப்பட்டுள்ளது!

இரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்!

சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும். இருப்பினும் அமெரிக்காவில் வாழும் ஒருவகை கிளியினம் இதுபோன்ற விஷமுள்ள விதைகளை உணவாக உட்கொள்கிறது. இது மிகவும் வியப்புக்குரிய செயலாகும்! ஏனெனில் தாவரங்களை உணவாக உட்கொள்ளும் மற்ற விலங்கினங்கள் இந்தச் செடியின் பக்கம் தலைகாட்டவே பயப்படும்போது, இந்தப் பறவையினம் மட்டும் தொடர்ந்து விஷமுள்ள இந்த விதைகளை உணவாக உட்கொண்டும் எந்த விதப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,040 முறை படிக்கப்பட்டுள்ளது!

செல்போன் ஆராய்ச்சி…!

இன்றைக்கு பலருக்கும் செல்போன் அவர்களது உடம்பின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் ஒருநாளை ஓட்டுவதை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. உலக அளவிலான ஓர் ஆய்வு அதை உறுதிபடுத்துகிறது. பலர், தங்கள் செல்போனை இழப்பதைவிட பர்ஸை இழக்கவும் தயார் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட, சந்தை ஆய்வு நிறுவனமான `சைனோவேட்’, இன்று வாழ்க்கைக்கான `ரிமோட் கண்ட்ரோலாக’ செல்போன் உள்ளது என்று தெரிவித்துள்ளது. தற்போது செல்போன் எல்லா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,584 முறை படிக்கப்பட்டுள்ளது!

நில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்

பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் நியூசிலாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் அலூசியன் ஆகிய எரிமலைத் தீவுகளிலும், ஓரிகன், கலிபோர்னியா, மெக்சிகோ, பெரு, மற்றும் சிலி ஆகிய நிலப்பகுதிகளிலும் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுகிறது. குறிப்பாக பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த எரிமலைத் தீவுகளிலும், நிலப்பகுதிகளிலும் ஐநூற்றி அறுபத்தி இரண்டு எரிமலைகள் சீறிக்கொண்டு இருக்கின்றன.

கடந்த 2004-ம் ஆண்டு பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்திருக்கும் வட அமெரிக்காவின் ஓரிகன் நகரக் கடல் பகுதியில் பத்தே நாளில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,380 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்

படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி ஒரு சதவீதம். வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம். தாமஸ் ஆல்வா எடிசன் (1847–1931)

“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம். தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

படிக்காத மேதை ! பட்டம் பெறாத மேதை !

‘எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ‘ என்று ஒருவர் கேட்டதும், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,557 முறை படிக்கப்பட்டுள்ளது!

நட்சத்திரங்களின் மரணங்கள்

சந்திரா என்பது நாசாவின் விண்வெளி டெலஸ்க்கோப்பு. ஆகாயத்தின் மிதந்தபடி பேரண்டத்தைப் படம் பிடிக்கிறது. லாரா லோபெஸ் என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (சான்ட்டா க்ரூஸ்) பயிலும் பேரண்டவியல் மாணவி. இவரது வேலை நட்சத்திரங்கள் தமது வாழ்நாள் இறுதியில் எப்படி வெடித்து மடிகின்றன என்பதை வகைப்படுத்துவது.

நட்சத்திரங்கள் தம்மையே எரித்து பிரகாசிக்கின்றன. அவற்றின் எரிபொருள் தீர்ந்து போகும் தருவாயில் மிகப் பெரிய தெர்மோ நியூக்ளியார் வெடிப்புக்கு உள்ளாகி ஹைட்ரஜன் பாம் போல வெடித்துச் சிதறுகின்றன. அந்த சிதறலை சூப்பர் நோவா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,422 முறை படிக்கப்பட்டுள்ளது!

‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு!

மரபணு மாற்றப்பட்ட பசுக்களை சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தாய்ப் பாலில் உள்ள சத்துகள் அடங்கிய பாலை இந்த பசுக்களே தருமென்று அவர்கள் கூறியுள்ளனர்.

தாய்ப் பால் தருவதற்காக மொத்தம் 300 பசுக்களை மரபணு மாற்றம் செய்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளியாகும் “தி சண்டே டெலிகிராப்’ பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் மரபணு மாற்ற பசுக்களை உருவாக்கிய குழுவின் தலைமை விஞ்ஞானி நிங் லீ கூறியுள்ளது: இந்த பசுக்கள் தரும் . . . → தொடர்ந்து படிக்க..