|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,452 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th April, 2013 பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ் (பழச்சர்க்கரை). விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. கனியக் கனிய விட்டமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
15,613 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th April, 2013 தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன
இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.
தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,803 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th April, 2013 உலகம் முழுவதும் மொபைல் போன்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. மொபைல் போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதே மொபைல் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. விலைகுறைந்த போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை அனைத்து மொபைல்களுக்கும் தேவையான ஒரு அடிப்படை விஷயம் சார்ஜ் போடுவது. இப்பொழுது அனைவரும் மின்சாரம் மூலம் தான் போடுகிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம் மொபைலை சார்ஜ் போடாமல் உபயோகிக்க முடியாத நிலை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,668 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th April, 2013 கடற்பாசி எண்ணெய் மூலம் பெரிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் ஆய்வுகள் தொடங்கியுள்ளன. உலகிலேயே பெரிய கடற்கரை பரப்பை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிலும் 3வது பெரிய கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் மின்பற்றாக்குறை நிலவி வருவதால், கடற்பாசி எண்ணெய் மூலம் மின்உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், வல்லுனர்களும் வலியுறுத்துகின்றனர்.
காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்திற்கு கொடுக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
15,163 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st April, 2013 உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடாக உள்ளதால் கடும் மின்வெட்டு ஏற்பட்டுகிறது. இதனால் பொது மக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை வாங்கி வேண்டா வெறுப்பாக பயன்படுத்தி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,448 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st March, 2013 கால்வாய் ஓரங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி வளர்க்கப்படும்
நம்முடைய பாரம்பரிய விஞ்ஞானம் கொடுத்திருக்கும் பச்சிலை பொக்கிஷங்களின் அருமையை நன்குணர்ந்த தமிழக முதல்வர் கொசுக்களைக் கட்டுப்படுத்த மகத்தான மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடிகளை வளர்ப்பதின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறது.
நொச்சி பச்சிலையின் மகத்தான மருத்துவ குணம் ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும். பழங்காலம் தொட்டு இன்று வரை வேப்பிலை மற்றும் நொச்சி இலை போட்டு (புகைமூட்டி) கொசுக்களை விரட்டுவது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,562 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th March, 2013 கி. பி. 2139, ஏப்ரல்-5
விண்வெளிப் பயண அனுமதிக்கூடம் எந்த பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது. நேரம் 11-03. செக்-இன் பகுதியில் M 192030 தன் அடையாள அட்டையை செலுத்தி நுழைவு அனுமதிச் சீட்டுக்காக காத்திருந்தான். சில நொடிகள் கழிந்து 11-08க்கு உள்செல்ல அனுமதி கிடைத்தது. பின் W 649122 தன் கார்டை செலுத்தினாள். 11-10க்கு நுழையலாம் என பதில் வந்தது. இருவரும் தங்கள் ஆவணங்களை சரிபார்த்தனர். CC கேமரா . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,652 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th March, 2013 வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடின் (CO2) அளவை கட்டுப்படுத்தி புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதில் கடல் (Sea) எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்று முந்தைய பதிவின் வாயிலாக பார்த்தோம்! முந்தைய பதிவை வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இப்பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் தோன்றியதற்கு உயிர்க்கோளம், முக்கிய காரணமாக இருந்தாலும் இன்றுவரை புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்க்கு ஓசோன் படலமும் (Ozone Layer) ஒரு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,204 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th March, 2013 பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தன. இவர்கள் உடல் சிறப்பாக இயங்கியது. பழைய விஷயங்களைக்கூட இவர்கள் சரியாக ஞாபகப்படுத்தி சொன்னார்கள்.
ஆனால் பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் அநியாயத்திற்கு மறதிக்கு பெயர் போனவர்களாக இருந்தார்கள். பல விஷயங்கள் இவர்களது ஞாபகத்திற்கு வரவில்லை. வீட்டைச் சரியாகப் பூட்டினோமோ? என்று பஸ்ஸில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,572 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th February, 2013 உலகின் மிகப்பெரிய நதியான அமேசன் 7 மில்லியன் சதுர கிலோமீற்றர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பில் பரவியுள்ளது. மிகவும் விசாலமான இந்த நதியின் பிரமாண்டத்தினை முழுதாக இதுவரை எவரும் பார்க்கவில்லை. அமேசன் நதியின் அரைவாசியைத்தான் இதுவரை உலகம் கண்டு வியந்திருக்கிறது என்பதே உண்மையாகும்.
இப்படி பிரமாண்டமான அமேசன் நதியின் கீழ் இன்னுமொரு நதியிருப்பதை பிறேஸில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமேசன் நதிக்குள் கீழ் 4 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நதிப்படுக்கை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,024 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd December, 2012 பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் செய்தால் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
இலங்கையில் பாம்புக்கடியினால் வருடந்தோறும் அதிகளவான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதே நிலைமையே காணப்படுகிறது. மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுமிடத்து தேவையற்ற மரணங்ககையும், உபாதைகளையும் தவிர்க்கமுடியும்.
இலங்கையிலும் சரி யாழ்ப்பாணத்திலும் சரி இங்கு காணப்படுகின்ற அனைத்துப்பாம்புகளும் கொடிய விஷம் உள்ள பாம்புகள் என எண்ணுவது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,407 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th December, 2012 21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா? ஆராய்ச்சிக்கட்டுரை
உலக அழிவு- மிக அபத்தமானது
நம் முன்னே இருக்கும் தவிர்க்க இயலாத அபாயம் சூரியன் முழுமையாக எரிந்துபோவது மட்டுமே
ஜோதிடர்கள், கிளி ஜோதிடர்கள் மற்றும் போலி விஞ்ஞானிகள் ஆகியோர் டிசம்பர் 21-ம் தேதி உலகம் கடுமையான அழிவைச் சந்திக்கும் என கணித்துள்ளனர். மீசோ அமெரிக்கன் ஆண்டு சுற்று 5125-ன் இறுதி நாளாக இந்த தினம் வருகிறது. கருந்துளை, விண் கற்கள், விண்மீன்கள் . . . → தொடர்ந்து படிக்க..
|
|