|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,538 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th July, 2006 பூகம்பம், எங்கோ ஓரிடத்தில் பிறந்து சில நொடிகளில் உலகையே உலுக்கச் செய்யும் அற்ப ஆயுள் கொண்ட குழந்தையை என்ன சொல்வது? “பூகம்பம்” என்ற பெயர் கொண்ட அரக்கக் குழந்தை பிறந்து கண்ணை மூடி திறப்பதற்குள் பல உயிர்கள் மூடிவிடுகின்றன. ஏழை, பணக்காரர்கள், பச்சிளங்குழந்தைகள், முதியவர்கள், குடிசை, மாட மாளிகைகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் தன் அகோரப்பசிக்கு உணவாக்கிக் கொள்கிறது.
மனித சமுதாயத்தையே நிலைகுலையச் செய்கிறது. இயற்கை அவ்வப்பொழுது ஆடும் ருத்ரதாண்டவங்களில் மிகக் கொடியதான ஒன்றாக பூகம்பம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,874 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th July, 2006 நியூ மெக்சிகோ மாகாணத்தில் சாண்டியா தேசிய ஆய்வுக் கழகம் வி2 என்றழைக்கப்படும் மைட்டி மவுஸ் (Mighty Mouse) எனப்படும் ரோபோட்டை தயாரித்துள்ளது. இந்த ரோபோட் அணுகுண்டுகளால் ஏற்படும் கதிர்வீச்சுக்களைத் தாங்கக்கூடிய அளவிற்கு தனிச் சிறப்புடன் ரோபோட்டை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 40 பேரைக் கொல்லக்கூடிய (பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்தாலும்) காமா கதிர்வீச்சுக்களையும் தாங்கும் சக்தி கொண்ட இந்த ரோபோட்டின் தனித்தன்மை சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது. இவ்வகைக் கதிர்கள் ரோபோட்டில் உள்ள எலக்ட்ரானிக் கருவிகளையும் அழிக்கக்கூடியது. 600 பவுண்டு எடை மற்றும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,357 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th June, 2006 பனிக்காலங்களில் அதிகாலையில் இலைகளில் பனி நீரும் அவற்றை கதிரவன் மெல்ல மெல்ல துயில் எழுப்பும் அழகும் காண கண் கோடி வேண்டும். பனிக்காலம் என்பது பருவக்காலங்களில் அதிரம்மியமான காலம் என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த காலங்களில் பல்வேறு நாடுகள் தன் விழாக்களை, விளையாட்டுக்களை நடத்துவது உண்டு. பனிப்பிரதேசங்களில் பனிக்கட்டி சிற்பம், சறுக்கு விளையாட்டு என பலவகையான பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்துவதுதான் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,300 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th June, 2006 மூளையில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சி
மனிதர்களாக பிறந்த யாவரும் `தான்’ என்று சொன்னாலே அது கண்டிப்பாக ஆன்மாவுடன், மூளையுடன், தனிமனிதனுடன் தொடர்புடையதுதான். இப்பொழுது திரைப்படங்களில் மனநிலை சம்பந்தப்பட்ட கதைகளை பற்றித்தான் பார்க்கிறோம். `பன்மடங்கு ஆளுமை முறையின்மை’, `அம்னீஷியா’ எனப்படும் மறதி நோய் இப்படிப் பலவகைகளில் ஏதோ காரண காரணியங்களால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளன. இதுமட்டும் தான் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் இதைப்பற்றி அறிவியல் அறிஞர்கள் தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,155 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd June, 2006 “நான் ராஜபரம்பரையிலிருந்து வந்தவன்”, “நாங்கள் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்; கை நீட்டிப் பழக்கப்படவர்கள் இல்லை!” இவையெல்லாம் சினிமா வசனங்களில் பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. நிறைய தொடர்பு உண்டு. “அப்படியே இவன் அப்பனை உரிச்சு வச்சிருக்கான்”. இந்தப் பண்புகளையெல்லாம் பரம்பரை பரம்பரையாக கடத்தி வருவது ஜீன் எனப்படும் மரபணுதான்.
ஒருவருடைய மரபுப் பண்புகளை அப்படியே அவரது வாரிசுகளுக்கு இந்த “ஜீன்” கடத்துகிறது. சிலபேர் இடதுகை பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். அப்படியே அவருடைய பிள்ளைகளுக்கும் அந்தப் பழக்கம் இருக்கும். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,320 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th May, 2006 “வெட்டவெளிதனை மெய் என்றிருப்பாருக்கு பட்டயமேதுக்கடி குதும்பாய்” என்று குதும்பை சித்தர் வெட்டவெளி பிரபஞ்சம் பற்றி பாடி, ஆனந்தம் அடைந்தார்.
விண்வெளி பற்றி ஆராய்ந்தால் எல்லையில்லாத இன்பம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் கண்டறியப்படாதது எவ்வளவோ இருக்கிறது. சூரியக் குடும்பத்திலிருந்தே இன்னும் புது புதுத் தகவல்களும் வந்து கொண்டுதானிருக்கிறது. அந்தக் காலத்தில் முன்னோர்கள் வான் மண்டலத்தைப் பற்றி பேசினாலே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு கதை வைத்திருப்பார்கள். அறிவியல் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட விண்வெளியில் நம் பூமி ஓர் அணுவைப் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,734 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th May, 2006 இது கம்யூட்டர் காலமாகிவிட்டது. சாதாரண கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை கம்யூட்டர் பயன்படுத்தாத இடமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு கம்யூட்டர் ஆக்கிரமிப்பு பெருகிவிட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கும் கம்யூட்டர் கல்வி எல்.கே.ஜி முதல் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு கம்யூட்டர் கல்வி முக்கியத்துவம் பெற்று விட்டது.
இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் கம்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான புஜிட்சூ, நவீன கம்யூட்டர் மேசை ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த மேசை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களில் எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
10,031 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd May, 2006 சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா? `காத்ரீனா’, `ரீட்டா’, `வில்மா’ இதெல்லாம் ஏதோ பிரபல டென்னிஸ் வீராங்கனை பெயர்கள் போல் எண்ண தோன்றுகிறதா?. அதுதான் இல்லை. இவைகளெல்லாம் சமீபத்தில் அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடிய சூறாவளிகள். `ஊரை அடித்து உலையில் போடவேண்டும்’ என்று சொல்வது இதற்குத் தான் பொருந்தும். இந்த துக்கத்திலிருந்து மீள்வதற்குள் அடுத்த பேரிடியாக பாகிஸ்தான், காஷ்மீர் பூகம்பங்கள்.
உலகின் அனுதாபப் பார்வை நியூ ஆர்லியன்ஸிலிருந்து ஆசியாவின் பக்கம் திரும்பி விட்டன. முன்பெல்லாம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,275 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th April, 2006 இரண்டு சக்கர வாகனங்கள் என்றாலும் நான்கு சக்கர வாகனங்கள் என்றாலும் அவர்களது மிகப்பெரிய கவலை டிராபிக்ஜாம். 15 நிமிடங்களில் கடக்க வேண்டிய இடங்களை யெல்லாம் ஒன்றரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய நிலைமை.
அவசரமாக அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை. மோட்டார் கண்டுபிடித்த காலங்களில் வாகனத்தை அதிசயமாக மூக்கின் மீது விரல் வைத்து பார்த்த மக்கள் அதில் பயணம் செய்யவே பயபட்டார்கள். எங்கேயாவது மோதி விடுமோ? கவிழ்ந்து விடுமோ? என்ற அச்சம். விமானத்தில் செல்லவே பயப்பட்டார்கள். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,358 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th March, 2006 மருத்துவ தொழில்நுட்பங்களின் நூதன முறைகளை கையாளப்படுவது குறித்து ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக இதயநோய் சிகிச்சை முறையில் கணக்கிலடங்கா சாதனைகளை நிகழ்த்தி வருகிறது விஞ்ஞானம். முன்பெல்லாம் சாதாரண மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை என்றால்கூட மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, சிகிச்சைக்குட்படுபவரின் நிலை, அதற்காகும் நாட்கள், உறவினர்களின் பதட்டம் இப்படியாகயிருந்த இவைகளெல்லாம் சாதாரணமாக தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதுபோல் ஆகிவிட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மக்களின் சிரமங்கள், பண விரயம், கால விரயம், பதட்டம், சிகிச்சை முறை கருவிகள் இவைகளை குறைத்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,831 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th March, 2006 மனிதனின் உடல் உறுப்புகள் சரியாக இயங்குகிறதா? என்பதை அறிய பல்வேறு வகையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதயம் நன்றாக உள்ளதா? என்பதை அறிய இ.சி.ஜி மற்றும் மூளை மற்றும் பிற நரம்புகள் சரியாக வேலை செய்கிறதா? என்பதை அறிய இ.ஈ.ஜி மற்றும் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மனிதனுக்கு பல் வேறு பரிசோதனைகள் செய்யப்படுவது போல பூமிக்கும் அதன் `நாடி’த்துடிப்பு பற்றிய பரிசோதனை செய்யமுடியும்.
குளிர், கோடை, மழை காலம் இவைகளை பற்றி முன் அறிவிப்பு, மலேரியா . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,302 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th February, 2006 காந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்மனித சமுதாயத்தை நிலை குலையச் செய்யும் கொடிய நோய்கள் பல உள்ளன. இவை மனித சமுதாயத்திற்கு அவ்வப் போது பல சவால்களை எழுப்புகின்றன. தொழில் நுட்பங்கள் வளர வளர இவற்றின் சவால்கள் சாமர்த்தியமாக முறியடிக்கப்பட்டு வரப்படுகின்றன. இதற்காக பல மருத்துவ வல்லுனர்கள் தங்களது சீரிய ஆராய்ச்சிப்பணிகள் மூலம் மனித சமுதாயத்திற்கு பல தொண்டுகள் ஆற்றி வருகின்றனர். அம்மை, மலேரியா, காச நோய்கள் போன்ற கொடிய நோய்கள் பல மருத்துவர்களின் அயராத பணிகளால் . . . → தொடர்ந்து படிக்க..
|
|