|
|
அச்செடுக்க
5,750 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th November, 2011 கழுத்தில் கறுத்த வெல்வெட் தோல் நீரிழிவிற்கு கட்டியம் கூறுகிறதா? (Acanthosis Nigricans)
அழகான இளம் பெண்ணான அவள் சற்றுக் குண்டாவனவளும் கூட. கழுத்து, கைகள், நெஞ்சு, வயிறு எங்கும் தாராளமான கொழுப்பு விளைச்சல் கண்டிருந்தது. எனது பார்வை அவளது முகத்தை விட்டு விலகி கழுத்தில் மேய்ந்தது.
எனது பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டதை அவள் வாய் திறந்து பேச ஆரம்பித்ததும் நோயை உறுதிபடுத்த முடிந்தது.
‘ஓம் டொக்டர்… இது கொஞ்சம் அசிங்கமாகக் கிடக்குத்தான். . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
4,178 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st November, 2011 அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்து சென்றதைப் பற்றி நாம் பெருமையாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு தமிழரைப் பற்றி வியப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தானே!
அந்தத் தமிழர் பெயர் கே.ஆர். ஸ்ரீதர். இவர், சாதாரண தமிழர் அல்ல.. மின்சாரத் தமிழர். சற்று பீடிகையாக இருந்தாலும் மேலே படியுங்கள்… நீங்களும் பாராட்டத் தொடங்கி விடுவீர்கள்…
உலகம் முழுவதும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
5,473 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st November, 2011 கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு
சில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா? கால்களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,761 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd October, 2011 கூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா? சாபமா?
மக்கள் உணர்ச்சி சமீபத்தில் ஜப்பான், புக்குஷிமாவில் நடந்த அணுமின் நிலைய விபத்து, உலக மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில், அணுகுண்டு வீச்சினால் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த மக்கள், அதைப் பெரிது பண்ணாமல், தங்கள் நாட்டின் மின் தேவையை அணுசக்தி மூலமாகவே பெற முடிவு செய்து, குறுகிய காலத்திலேயே, 25 சதவீதம் வரை நாட்டின் மொத்த உற்பத்தியில் பெறுமளவுக்கு உயர்ந்து, . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,572 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th October, 2011 இரவில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம். அவைகளுக்கும் மனிதர்களைப் போல் பிறப்பு, முதுமை, இறப்பு உண்டு. நட்சத்திரங்களின் ஆயுட்காலத்தில் அவற்றின் நிறம் மாறுகிறது. பிரகாசம் மாறுகிறது. பரிமாணமும் மாறுகிறது. நட்சத்திரம் ஒன்றின் ஆயுட்காலம் பல நூறு கோடி ஆண்டு அளவிலுள்ளது.
நட்சத்திரங்கள் எப்படி பிறக்கின்றன? அதாவது அவை எப்படி உருவாகின்றன?
அண்டைவெளியில் நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள இடத்தில் ஒன்றுமில்லை என்று தோன்றலாம். உண்மையில் அப்படியில்லை. நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையிலுள்ள காலியிடங்களில் வாயு, தூசு . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
5,414 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th October, 2011 சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி?
நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,859 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th October, 2011 சில வாரங்களுக்கு முன் அமேசான் iCloud Drive சேவையை வெளியிட்டபோதே, அவர்கள் குளிகைக் கணினியைத் தயாரித்துக்கொண்டு இருக்கலாம் என்பதை யூகித்தேன். குளிகை தயாரிக்கும் திட்டம் பற்றி வாய் திறக்காமல் இருந்த அமேசான், இன்னும் சில மாதங்களில் குளிகை வெளியிடப்போவதாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டியாக இருக்கும் என்று பரவலாகப் பேசப் பட்டாலும், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம்?
முக்கியமாக, விலை! இந்தக் குளிகையை ஐ-பேடைவிடக் குறைவான விலையில் விற்றாக வேண்டும். கணிசமாகக் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,871 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th October, 2011 “சுட்டால் பொன் சிவக்கும், சுடாமல் கண் சிவந்தேன்” என்று நம் தமிழ் சினிமா பாடல்கள் பண்பலை வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில் உலகம் முழுவதும் உள்ள வளிமண்டல விஞ்ஞானிகள் புவி வெப்பம் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருப்பதை பற்றி பதட்டத்துடனும் பயத்துடனும் விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அனைத்து நாடுகளுக்கிடையேயான தட்பவெப்ப மாறுதல்களுக்கான அமைப்பு (Inter Governmental Panel on Climate Change -IPCC) தன்னுடைய நான்காவது அறிக்கையில் ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் பிளவு, கடல் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,485 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th October, 2011 சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை. மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி இருக்கும் 10.4 கிலோ எடையுள்ள “எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி18 ராக்கெட்டுடன் புதன்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.
“எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பற்றி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ராகவ் மூர்த்தி வழிகாட்டுதலின் படி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 7 துறைகளைச் சேர்ந்த 52 மாணவர்கள், கடந்த 2 வருடங்களாகச் செயற்கைக்கோள் உருவாக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,188 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th October, 2011 ஸ்ரீவத்ஸன் மெடிக்கல் ரிப்போர்ட்டில் இருந்த, உச்சரிக்கக் கஷ்டமான அந்த வார்த்தையை வெறித்துப் பார்த்தான். “Lymphangioleiomyomatosis”. சிவப்பு எழுத்துக்களில் இருந்த அந்த வார்த்தையில் எமன் தெரிந்தான். அவன் மனைவி வைஷ்ணவியை அந்த வார்த்தை மூலமாக எமன் நெருங்கிக் கொண்டிருந்தான்.
டாக்டர் அவனுக்கு அந்த வியாதியைப் பற்றி விளக்க முயன்றது அரையும் குறையுமாகத் தான் அவன் மூளைக்கு எட்டியது. “…இதை LAMன்னு சுருக்கமா சொல்வாங்க. இதுக்கு இது வரைக்கும் சரியான மருந்து கண்டுபிடிக்கலை. இது ஒரு அபூர்வமான வியாதி. இது . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
5,615 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th September, 2011
மனித உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் காப்பதே உணவின் பிரதான நோக்கம். ருசியும் மணமும் இரண்டாம் தேவைகளே. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வாழ்க்கையின் அர்த்தங்களும், உணவுகளின் நோக்கமும் மாறிவிட்டன. வறுமைப் பசியாலும், கடன் தொல்லையாலும் ஏற்படும் மரணங்களை விட அளவுமீறிய ஒழுங்கற்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் மரணங்களே அதிகம்.
நமது உணவுகளில் பெரும்பகுதி கார்போ ஹைட்ரேட், இனிப்பு, அடர்கொழுப்பு (Saturated Fats) போன்ற சத்துக்களே அடங்கியிருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
4,020 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd September, 2011 ஆயிரத்து எண்ணூறு வரை பெரியம்மை நோய் ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகவும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. முகம், கை, கால்களில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருவருப்பான தழும்புகளைப் பெற்றிருந்தனர். கண்களில் இந்நோய் வந்தால் பார்வை பறி போய்விடும் நிலையும் இருந்தது.
எட்வர்டு ஜென்னர் கி.பி. 1800 இறுதியில் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பெரும்பான்மை மக்கள் இந்நோய்க்கு ஆளாகி வந்தனர்.
எட்வர்டு ஜென்னர் 1749 – ஆம் . . . → தொடர்ந்து படிக்க..
|
|