|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,974 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th December, 2016 ‘ஒரு காலத்தில் இயல்பாக இருந்த உணவு இன்று இயற்கை உணவாகிவிட்டது’- இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படும் ஒரு வாசகம். ‘மருந்தே உணவு, உணவே மருந்து’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிறுதானியங்களின் மகிமைகள் குறித்துப் ‘பசுமை விகடன்’ இதழிலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.
பசுமை விகடன் நடத்திய பயிற்சிகள் பலவற்றில் கலந்துகொண்ட நம்மாழ்வார், இயற்கை வாழ்வியல் முறைகள் மற்றும் உணவுகள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,518 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th December, 2016 ஒரு பாமரனின் பார்வையில், “மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். மருத்துவமனை என்பது ஒரு சேவை மையம். மருத்துவர் என்பவர் உயிரைக் காக்கும் கடவுள்”. இப்படித்தான் தொடக்கத்தில் மருத்துவமும் பண்டுவ முறைகளும் மருத்துவர்களும் இருந்தனர். அறத்தின் பால் தன்னலம் இன்றி பிறர் உயிர் காத்து, தன்னிடம் வரும் நோயாளிகளைக் குணப்படுத்தும் குணவான்களாக இருந்தனர். சேவைத் துறையில் பணப் புழக்கம் அதிகரித்த போது மருத்துவர்களும் சற்று தடுமாற தொடங்கினர். இதன் விளைவு, தன்னிடம் வரும் நோயாளிகளை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,760 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th December, 2016 இயற்கை வாழ்வியல், நஞ்சில்லா உணவு ஆகியவை குறித்த விழிப்பு உணர்வு மிக வேகமாகப் பரவி வருகிறது. இளம் வயதிலேயே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் மரம் வளர்ப்பு, தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளை மாணவர்களைக் கொண்டு செய்து வருகிறார்கள். அத்தகைய சிறப்பான பள்ளிகளில் ஒன்றுதான், சென்னை, அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆபிஸர்ஸ் அசோசியேஷன்) பள்ளி. இப்பள்ளியில், மாடித்தோட்டம் அமைத்து மாணவர்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,500 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th December, 2016
‘கறுப்புப் பணம்… கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து, வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் பொதுமக்களின் கூட்டம் இன்னமும் அலைமோதுகிறது. தினக்கூலித் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வியாபாரிகள், மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், சிறிய அளவில் வியாபாரம் செய்யும் நடுத்தர வர்க்கத்தினர், ஒழுங்காக வரி செலுத்தும் வியாபாரிகள் ஆகியோர்தான் வங்கிகளிலும் ஏ.டி.எம் வாசல்களிலும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,289 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th December, 2016 பணமதிப்பு நீக்கம் மோடியின் நாடகமா? அல்லது பயனுள்ள நடவடிக்கையா?- மாறுபடும் அமெரிக்க நிபுணர்கள் கருத்து
இரண்டு அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் ரூ.500, 1000 பணமதிப்பு நீக்க நடவடிக்கை பயனுள்ளதா இல்லையா என்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹார்வர்ட் பல்கலைக் கழக பொருளாதார நிபுணர் கென்னத் ரோகாஃப் வரி ஏய்ப்பு, ஊழல் ஆகியவற்றை இந்த நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள முடியும் என்று கூறுகிறார்.
ஆனால், கலிஃபோர்னியா . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,212 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd December, 2016 ஆழிப்பேரலையின் அகோரப் பசிக்கு ஏராளமான உயிர்களைப் பறிகொடுத்து, பேரழிவின் சாட்சியாக விரிந்துகிடக்கிறது தனுஷ்கோடி.
1964-ம் ஆண்டுக்கு முன்பு, கொண்டாட்டம் மிகுந்த நகரமாக விளங்கி, இன்று சிதைவுகளாக மிஞ்சியிருக்கும் இந்தப் பகுதி, 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழத் தொடங்கியுள்ளதுதான் மகிழ்ச்சியான செய்தி.
இந்திய நாட்டின் தென்கோடி எல்லை, தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லைப் போன்ற வடிவம்கொண்ட நிலப்பகுதி என்பதால், இதற்கு `தனுஷ்கோடி’ என்ற பெயர் வந்ததாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,034 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th November, 2016 செவ்வாடு… கண்டுகொள்ளப்படாத ஆட்டினம் – அங்கீகாரம் வாங்கித் தந்த ஆராய்ச்சியாளர்!
ஆடு வளர்ப்பு
ஆடு, மாடு போன்றவற்றை அவை வாழும் பகுதியை வைத்தே தனி ரகமாக அடையாளம் காணுவது வழக்கம். மாடு வகைகளில் பர்கூர் மாடு, காங்கேயம் காளை, புலிக்குளம் மாடு… என இருப்பது போல, செம்மறி ஆட்டு வகைகளில் ராமநாதபுரம் வெள்ளை, சென்னைச் சிவப்பு, திருச்சிக் கறுப்பு என வாழும் பகுதியை அடிப்படையாகக் கொண்டு ரகங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,684 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st October, 2016 இந்தியாவின் ஏற்றுமதி 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இறங்குமுகத்தில் இருக்கிறது என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், உலகளாவிய பொருளாதார மந்த நிலை என்பது வெளிப்படை. நாம் வழக்கமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை தற்போது நம் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலையில் இல்லை.
நல்ல வேளையாக, 18 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் முதல், நம் ஏற்றுமதி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,006 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th July, 2016 ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள, கடலாடி அனல் மின் நிலைய திட்டத்திற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாராகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி என்ற இடத்தில், தமிழ்நாடு மின் வாரியம், 4,000 மெகாவாட் திறன் உடைய, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா, 2015 செப்டம்பரில், சட்டசபையில் வெளியிட்டார். இதையடுத்து, இத்திட்டம் குறித்த, முதல்கட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த நிறுவனம், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,460 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th July, 2016 இரு வாரங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 23 பேரில் 20 பேரின் பார்வை முற்றிலுமாகப் பறிபோயிருக்கிறது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், 300 ரூபாய் கையூட்டு தர மறுத்த ராஜேந்திர பிரசாத் என்ற வலிப்பு நோய் கண்ட 18 வயது இளைஞர், அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தப்பட்டதால் இறந்தே போய்விட்டார். இந்தக் கொடுமை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,240 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th June, 2016 கேள்விக்குறி வாழ்க்கை ஆச்சரியக்குறியானது!
இங்கிலாந்து இளவரசர் சார்லசிடமிருந்து, சிறந்த தொழில் முனைவோருக்கான விருது பெற்ற, ஹாஜா புன்யமின்:
15 ஆண்டுகளுக்குமுன்… ஒரு வானலி, அடுப்பு மட்டுமே வைத்துக்கொண்டு சமோசா விற்றவர், இன்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் இவர் ஆறாவது வரை மட்டுமே படித்தவர்.
“எந்தவொரு தொழிலாக இருந்தாலும், அதில் ஒரு ஆத்மார்த்தமான தேடல் இருந்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும். தொழில் செய்பவருக்கும் தொழிலதிபருக்கும் இடையே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,257 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th June, 2016 இரும்புக்கு டானிக், இதயத்துக்கு டானிக், மூளைக்கு டானிக், கிட்னிக்கு டானிக் என டானிக் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுவோரின்எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களைக் குறிவைத்து வணிக உலகமும் சாமர்த்தியமாக, வேகமாக விற்பனையாகும் வீட்டு நுகர்பொருட்களை (FMCG-FAST MOVING CONSUMER GOODS), வேகமாக விற்பனையாகும் ஆரோக்கிய உணவுகளாக (FMHG- FAST MOVING HEALTH GOODS) மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறது. கொஞ்சம் அக்கறை; கொஞ்சம் உறுத்தல்; நிறையப் பயம் நிறைந்த நடுத்தர வர்க்கமும், இணையம் மூலமும் . . . → தொடர்ந்து படிக்க..
|
|