Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,453 முறை படிக்கப்பட்டுள்ளது!

சட்டம் தன் கடமையைச் செய்யும்

மும்பையில் உள்ள புலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலி என்ற பெண் சமீபத்தில், புறநகர் ரயிலில் பயணித்துள்ளார். மஹாலட்சுமி ரயில் நிலையத்தில் இறங்கிய அவரிடம் பயணச்சீட்டு பரிசோதகர்கள், பயணச்சீட்டு கேட்டுள்ளனர். ஆனால், அவர் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்துள்ளார். இதனால் 260 ரூபாய் அபராதம் செலுத்துமாறு பயணச் சீட்டு பரிசோதகர்கள் கூறியுள்ளனர்.

அந்த அபராதத்தைச் செலுத்த மறுத்த அவர், வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி தப்பித்துச் சென்ற, தொழிலதிபர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,841 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்று எரிபொருள்: தயக்கம் ஏன்?

இந்திய மக்கள்தொகை 127 கோடியைக் கடந்து விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை மிஞ்சிவிடும் என்று கூறுகிறார்கள். அதற்கு ஏற்றார் போல, விண்ணைத் தொடும் அளவுக்கு விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது. இதற்கு மூலகாரணம் நாம் அன்றாடும் பயன்படுத்தும் எரிபொருளாகும் (பெட்ரோல், டீசல்).

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தைப் பொருத்து பயணச் சீட்டின் கட்டணம் உயர்கிறது. வியாபாரிகள் லாரியின் வாடகை மற்றும் காய்கறிகளின் வரவுகளை வைத்து விலையை நிர்ணயம் செய்கிறார்கள். இதற்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,871 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரூ.3 லட்சம் பலே வருமானம் தரும் பால் காளான்!

இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு… அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.

‘பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது… . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,553 முறை படிக்கப்பட்டுள்ளது!

வங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்

பல வங்கிகளிடம் 7,000 கோடி ரூபாய் அளவில் கடன் பெற்று, அதை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர் என்று பட்டியலிடப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சமீபத்திய லண்டன் பயணம்தான் வங்கி துறையில் இப்பொழுது பரபரப்பு செய்தியாகப் பேசப்படுகிறது.

2004 முதல் 2010 வரை 17 வங்கிகள் மல்லையாவின் பெயரை முன்னிறுத்திய கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு 7,000 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகையை வழங்கியிருக்கின்றன. இதில், 90% அளவுக்கான கடன் தொகை, ஸ்டேட் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,959 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிங்கப்பூரில் குடிநீர் பிரச்னை தீர்ந்தது எப்படி?

ஒரு மாநகரத்தின் மக்கள் தொகைக்கேற்ப, அதன் அடிப்படை வசதிகள் திட்டமிடப்பட வேண்டும். திட்டமிடப்படாமல், நகரத்தை விரிவாக்கினால், இயற்கை வளங்கள் அழிவதோடு, பஞ்சமும், இயற்கைப் பேரழிவும் உண்டாகும்,” என்கிறார், அறம் முருகேசன், 50. அவர், பத்தாண்டுகளுக்கும் மேல், சிங்கப்பூரில் கட்டட வடிவமைப்பாளராக பணியாற்றியவர்.

சிங்கப்பூரில் எப்படி?

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சிங்கப்பூரை பொறுத்தவரையில், 5 கி.மீ.,க்கு ஒரு இடத்தில், மிகப்பெரிய மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,354 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய மருத்துவம்..

“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து (950).”

நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, என நான்கும் மருத்துவத்தின் அங்கங்கள் என்று வள்ளுவ பெருந்தகை 2000 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தை விவரித்துள்ளார்.

இக்கால அல்லியல் மருத்துவம் [ அல்லோபதிக் மெடிசின் / Allopathic Medicine (அ) வெஸ்டர்ன் மெடிசின் / Western Medicine ], தற்கால அறிவியல் ஆய்வோடு வளர்ந்திருந்தாலும், இதன் பெரும்பாலான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,890 முறை படிக்கப்பட்டுள்ளது!

மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்!

எண்பத்தொரு வயதான ஒரு டாக்டர்,நோயாளிகளுக்கு தொண்டு செய்வதே என் பாக்கியம் என்று வாரத்தின் ஏழு நாளும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும் ஆனால் அதுதான் உண்மை.

அடுத்து ஒரு உண்மை அவர் பார்க்கும் வைத்தியத்திற்கு காசு என்று கைநீட்டி வாங்குவது இல்லை போகும்போது ஐந்து ரூபாயை மேஜையின் மீது வைத்துவிட்டு செல்கின்றனர், அதுவும் இல்லாதவர்கள் ‘நன்றி’ என்று சொல்லி கும்பிடு மட்டும் போட்டுவிட்டு செல்கின்றனர்.

இந்தக்காலத்தில் இப்படி ஒரு டாக்டரா? . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,254 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்!

மருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்! நெகிழ்வூட்டும் உண்மைக் கதை!

தாய் – மகள் உறவுக்கு இணையானது… மாமியார் – மருமகள் உறவு. ஆனால், பெரும்பாலான வீடுகளில் இந்த உறவு இணக்கமாக இருப்பதில்லை என்பதுதானே எதார்த்தம். அதேசமயம், அனைத்திலும் எங்காவது விதிவிலக்கு இருக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட விதிவிலக்குகளால்தான் அந்த உறவு… இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. ஆம், சாதாரண சட்னி விஷயத்தில்கூட மருமகளுடன் சண்டையிடும் மாமியார்களுக்கு மத்தியில்… மருமகளுக்காக தனது கிட்னியையே தானம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,778 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்! உண்மை சம்பவம்

பலர் தங்களது பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஊர், உறவு குடும்பம் என்று அணைத்தையும் துறந்து செல்கின்றனர். பெரும்பாலும் வெளிநாடு சென்றவர்கள் முடிந்த வரை தங்களது கடின உழைப்பால் நன்றாக சம்பாரிக்கின்றார்கள்.

தங்களது குடும்பத்தின் நிலமையை மனதில் வைத்து தங்களது உறக்கம் ஓய்வு மற்றும் உள்ள ஆசைகளைத் துறந்து பார்ட் டைம் ஓவர் டைம் என்று சம்பாரிக்கிறார்கள். சம்பாரித்த பணத்தை அப்படியே தன் பெற்றோருக்கோ மனைவிக்கோ அனுப்பி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,593 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்று இன்று! கான்க்ஷா -Gonxha

அவர் பெயர் கான்க்ஷா. 1910ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்பத்தில் மிகவும் இளையவர். இவர் தந்தை நிக்கோலா ஒரு காண்ட்ராக்டர். அரசியலில் மிகுந்த தீவிரத்தோடு பங்கு கொண்டிருந்தார். கான்க்ஷாவிற்கு 8 வயதாக இருந்தபோது இவர் தந்தை இறந்தார். அன்று முதல் கான்க்ஷாவையும் அவருடன் பிறந்த மற்ற இரண்டு சகோதரர்களையும் பார்க்கும் பொறுப்பும் அவருடைய இளம்தாய்க்கு வந்தது, அவர்களுடைய குடும்ப சூழ்நிலை ஒரே இரவில் முற்றிலுமாக மாறியது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,596 முறை படிக்கப்பட்டுள்ளது!

அந்தரத்தில் பிறந்த ஆயிஷா! உண்மைக் கதை

அந்தரத்தில் பிறந்த ஆயிஷா… கைவிட்ட அப்பா! – மனதை உருக்கும் உண்மைக் கதை

அந்த விமானம் உயரே, இன்னும் உயரே சென்றது. இருபக்கமும் சாய்ந்து, நேராகி சமநிலையில் பறந்தது. திடீரென ஒரு பெண் அலறும் சத்தம். அனைவரும் திரும்பிப் பார்க்க, மேடிட்ட வயிற்றுடன் ஒரு பெண் விமானத்தில் உருண்டு, புரண்டு அழுதார். அனைவரும் பதற, அடுத்து உள்ள விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,243 முறை படிக்கப்பட்டுள்ளது!

பத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா!

நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது பெற்றவர்களில் ஒருவர் தான் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா ஆவார்கள். எண்பத்தெட்டு வயதாகும் இவர் இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார். சென்னை மயிலாப்பூரில், 1927ல், பிறந்த சாந்தா, 1949ல், “மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்’ல், மருத்துவ . . . → தொடர்ந்து படிக்க..