Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,190 முறை படிக்கப்பட்டுள்ளது!

காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு கமாண்டோ படையினர், இரவும், பகலும் சிறப்பாக பணியாற்றி, கைக்குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என, மொத்தம், 500 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களின் சேவையை சக போலீசாரும், பொதுமக்களும் மனதார பாராட்டி வருகின்றனர்.

கனமழைக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானது. தாம்பரம், முடிச்சூர், வரதராஜ புரம், மணிமங்கலம் பி.டி.சி., குடியிருப்பு, திருநீர்மலை, திருமுடிவாக்கம், கவுல்பஜார், அனகாபுத்துார், பொழிச்சலுார், கொளப்பாக்கம் உள்ளிட்ட . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,478 முறை படிக்கப்பட்டுள்ளது!

குவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி!

தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு நாளும் குவிகிற குப்பைகளின் அளவு 14,000 மெட்ரிக் டன்! இது ஜஸ்ட் ஒருநாள் கணக்குதான். ஒருமாதத்திற்கு… ஒரு வருடத்திற்கு.. பத்து ஆண்டுகளுக்கு என கணக்கிட்டால் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் கூட உண்டாகலாம்!! குப்பையின் அளவு இன்று பத்தாயிரமாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது பனிரெண்டாயிரமாக பத்து நூறாக நூறு ஆயிரமாக உயரும்..! அதை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா?

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,767 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறைக்கப்பட்ட தமிழனின் கண்டுபிடிப்பு

மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் ‘மூலிகை பெட்ரோலை’ உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர். அதன் பிறகு ராமர்பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு அலைக்கழிப்புகள்ஸ தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.

இதற்கிடையே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,113 முறை படிக்கப்பட்டுள்ளது!

வேண்டும் இங்கே ஒரு கல்வி புரட்சி!

இன்று, உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், வர்த்தக நிறுவனங்களின் உயர் பதவிகளை, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய உதாரணம், பிரபல கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற உயர்ந்த ஸ்தானத்தை எட்டியிருக்கும் தமிழரான சுந்தர் பிச்சை.

இருந்தும் உலகளவில் தரம் வாய்ந்த, 200 பல்கலைகளின் வரிசையில், இந்தியாவிலுள்ள ஒன்று கூட இடம் பெறவில்லை.இன்று, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் கல்விமுறை தான், உலகிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,535 முறை படிக்கப்பட்டுள்ளது!

விவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.

ஏன் எப்படி என்று தெரியாது ஆனால் சிறிய வயதிலேயே மாதவனுக்கு செடிகள் வளர்ப்பதில் ஈடுபாடு.செடிகொடிகள் வளர்ப்பது என்பது விவசாயத்தின் ஒரு பகுதி என்பது புரிந்தபிறகு நானும் விவசாயம் செய்யப்போகிறேன் என்று சொன்ன மாதவனுக்கு வீட்டில் எதிர்ப்பு.

ஒழுங்கா படிக்கிற வேலையாப்பாரு என்ற பெற்றோரின் கட்டளையை மீறமுடியாமல் உச்சபட்ச படிப்பான ஐஐடியில் மெக்கானிக்கல் என்ஜீனியர் படித்து முடித்தார். கையோடு மத்திய அரசு நிறுவனத்தில் உயர்பதவி, லகரங்களில் சம்பளம்.

இது எதுவுமே மாதவனின் மனதை ஈர்க்கவில்லை அவரது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,244 முறை படிக்கப்பட்டுள்ளது!

மது போதையில் சிக்கும் மாணவியர்!

பள்ளி மாணவியரும் மது போதையில் சிக்கும் விபரீதம், தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. கோவையில், பள்ளிச் சீருடையில் மாணவி நடத்திய ரகளையால், இது அம்பலமாகியுள்ளது. கலாசார சீரழிவைத் தடுக்க, பெற்றோர், ஆசிரியர் மட்டுமின்றி, அரசும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ கடைகளின் வரவு, இளைஞர்களை மது போதைக்கு அடிமையாக்கி வருகிறது. அதையும் தாண்டி, பள்ளி மாணவியரும் போதை பழக்கத்துக்கு ஆளாகும் அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. கோவையில் நடந்த சம்பவமே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,693 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான்.

இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர்.

இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே.

இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,399 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆதார் எண், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு காஸ் துண்டிப்பு!

சமையல் காஸ் மானியம் பெற, ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு விவரம் அளிக்காத வாடிக்கையாளர்களுக்கு, காஸ் வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் துண்டித்து உள்ளன; இதனால், நுகர்வோர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

‘சமையல் காஸ் சிலிண் டர் கேட்டு, பதிவு செய்ய, தானியங்கி சேவையை தொடர்பு கொள்ளும்போது, காஸ் சிலிண்டர் வேண்டும் கோரிக்கை பதிவாகாமல், ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணை, காஸ் முகமையிடம் உடனடியாக அளிக்க வேண்டும்’ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,760 முறை படிக்கப்பட்டுள்ளது!

10 & 12ஆம் வகுப்புக்களுக்கான‌ பொதுத் தேர்வு 2015

10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான‌ பொதுத் தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்க‍கம் வெளியி ட்டுள்ள‍து. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2015 மார்ச் 5ஆம் தேதி தொடங்கும் என

அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன. மார்ச் 5 ஆம் தேதி தொடங்கும் 12ஆம் பொதுத்தேர்வுகள் மார்ச் 31ம்தே தி வரை முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்

மேலும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,011 முறை படிக்கப்பட்டுள்ளது!

மண்புழு விஞ்ஞானி!

மண்புழு விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில்

புதுக்கல்லூரியின் பயோடெக்னாலஜி துறையின் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயிலின் நாற்பது ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பணியினை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மையத்தின் சார்பாக, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் இம்மாதம் 24ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட்டது. (24-11-2014)

உயிரி அறிவியல் ஆராய்ச்சி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,461 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய அமெரிக்கப் பேராசிரியருக்கு கெளரவம்!

அமெரிக்காவில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அறிவியலுக்கான தேசிய விருது, அங்கு வசிக்கும் தாமஸ் கைலாத் (வயது 79) என்ற இந்தியருக்கு வழங்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்தவர், தாமஸ் கைலாத்(79). அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் 1956-இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,069 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிரதமர் -ஆஸ்திரேலியா – அதிர்ச்சியான ஒரு தகவல்…

ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது. அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் மோடிஜியின் நெருங்கிய நண்பர். குஜராத்தில் பல முதலீடுகளைச் செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர்) கௌதம் அதானி.

இவரது கம்பெனிக்கு ஆஸ்திரே லியாவில் . . . → தொடர்ந்து படிக்க..