|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,914 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th January, 2018
பயணம் செய்ய முக்கியமான தேவை பணமா, நேரமா, மனமா என்பதை நாம் எல்லோருமே நண்பர்களுடன் விவாதித்திருப்போம். அப்படியொரு வாட்ஸ்அப் விவாதத்தில் நண்பரொருவர் சொன்னது “வெரைட்டியான இடங்கள்”. மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு செல்வது போர் என்றார் அவர்.
உண்மைதான். இப்போது, வார இறுதி வந்தாலே எதாவது ஒரு மலைக்கு சென்று விடும் கூட்டம் அதிகரித்திருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் அவர்கள் லிஸ்ட்டிலே இருக்காது. அதிக காலடிகள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,481 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd November, 2017 மனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,202 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st November, 2017 அது என்ன கடக்நாத் சிக்கன்? மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா? வாங்க பார்க்கலாம்.
மத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை. இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.
இந்தக் கோழியைச் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,713 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th November, 2017 கனமழையினால் கனத்துப்போயிருக்கிறது மக்களின் உள்ளம். உயிரைக் காத்துக்கொண்டாலும் உடைமைகளை இழந்தவர்கள் பலபேர். இழந்த உடைமைகளுக்காக இன்னும் பல வருடங்கள் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமையை ஏற்படுத்தி சென்(றுகொண்டிருக்)றிருக்கிறது வெள்ளம்.
உடைமைகளை இழந்தபின் எஞ்சியிருப்பது இப்போது வீடு மட்டுமே. வெள்ளம் வடிந்து மக்கள் தத்தம் வீடுகளுக்கு திரும்பும்முன் மேற்கொள்ளப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ‘டிப்ஸ்’ இங்கே….
வெள்ள பாதிப்பிற்குள்ளான வீட்டிற்கு முதலில் ஆண்கள் நுழைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,617 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd November, 2017
சமையல் பாத்திரங்கள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன. தொடக்கத்தில், மண் பாத்திரங்களில் சமையல் செய்தார்கள். அதன்பிறகு எவர்சில்வர், பித்தளை, செம்புப் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. உதாரணமாக, ஒருகாலத்தில் கல்லால் செய்த தோசைக்கல்தான் வழக்கத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு எண்ணெய் பயன்படுத்தாமல், பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்கும் `நான்ஸ்டிக்’ சமீபத்திய டிரெண்ட் ஆகிவிட்டது.
சமைக்கும் பாத்திரங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் நாம் சாப்பிடப் பரிமாறப்படும் பாத்திரங்களிலும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,344 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th October, 2017 மருந்து, துணை மருந்து, ஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி!
’கஞ்சி’ என்றால் காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவு. இப்படித்தான் பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. உண்மையில், கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல, உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவாகவும் நம் மரபில் பயன்பட்டிருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது ஊட்ட உணவாகவும், நோய் பாதித்த நிலையில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாகவும் கஞ்சி வகைகள் உதவுகின்றன.
பட்டினப்பாலையில்…
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,770 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th October, 2017 ஒரு ஏக்கர்… ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம் லாபம்! – அள்ளிக் கொடுக்கும் அகத்தி…
சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பர்ய வைத்திய முறைகளைக் கையாளும் மருத்துவர்களாக இருந்தாலும்சரி, நவீன அலோபதி முறை மருத்துவர்களாக இருந்தாலும்சரி ‘உணவில் கீரையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லாத மருத்துவர்களே இருக்கமாட்டார்கள். ‘உயிர்ச்சத்துகள் மற்றும் தாதுச் சத்துகளுக்காகத் தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்’ எனப் பரிந்துரைக்கப்படுவதால் கீரைகளுக்கு எப்போதுமே சந்தையில் நல்ல கிராக்கி உண்டு. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,185 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th June, 2017
“சுகர் பீரி’ சீனித் துளசி மூலிகையை சாகுபடி செய்து சர்க்கரை நோயை விரட்டலாம் என, காந்திகிராம பல்கலை தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் “ஸ்டீபியா ரொபோடியானா’ என்ற சீனித்துளசி மூலிகை உள்ளது. இவற்றின் இலையை மென்று தின்றால் இனிப்பாக இருக்கும். கலோரி அற்றது. இவை வெல்லம், சக்கரையை (சீனி) விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோய் வராது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,898 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th June, 2017 தோசை 10… மதிய உணவு 15… மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்!
ஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேடின. ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் ஒரு கடை இருந்தது. அந்தக் கடையின் பெயர் மூலிகை உணவகம் என் எழுதப்பட்டிருந்தது. கடையில் சென்று . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,007 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th December, 2016 ‘ஒரு காலத்தில் இயல்பாக இருந்த உணவு இன்று இயற்கை உணவாகிவிட்டது’- இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படும் ஒரு வாசகம். ‘மருந்தே உணவு, உணவே மருந்து’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிறுதானியங்களின் மகிமைகள் குறித்துப் ‘பசுமை விகடன்’ இதழிலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.
பசுமை விகடன் நடத்திய பயிற்சிகள் பலவற்றில் கலந்துகொண்ட நம்மாழ்வார், இயற்கை வாழ்வியல் முறைகள் மற்றும் உணவுகள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,780 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th December, 2016 இயற்கை வாழ்வியல், நஞ்சில்லா உணவு ஆகியவை குறித்த விழிப்பு உணர்வு மிக வேகமாகப் பரவி வருகிறது. இளம் வயதிலேயே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் மரம் வளர்ப்பு, தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளை மாணவர்களைக் கொண்டு செய்து வருகிறார்கள். அத்தகைய சிறப்பான பள்ளிகளில் ஒன்றுதான், சென்னை, அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆபிஸர்ஸ் அசோசியேஷன்) பள்ளி. இப்பள்ளியில், மாடித்தோட்டம் அமைத்து மாணவர்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,237 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th September, 2016 பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது.
ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய . . . → தொடர்ந்து படிக்க..
|
|