|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,479 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd January, 2016 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மணப்பாடு, குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் ஏராளமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் சுமார் 60 திமிங்கலங்கள் இறந்துவிட்டன.உயிருக்குப் போராடிய பல திமிங்கலங்களை மீனவர்களும், அதிகாரிகளும் இணைந்து கயிற்றில் கட்டி, படகு மூலம் இழுத்துச் சென்று கடலில் ஆழமான பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். மர்மான முறையில் கூட்டமாக வந்து இறந்த திமிங்கலங்களை பார்க்க போனவர்கள் பதற்றமும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம், மற்ற மீன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,611 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th January, 2016 கண்நீர் கதைகள்…
நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு. சட்டத்தின் இருட்டறைக்கு வெளிச்சம் ஏற்றப் பயின்ற, கறுப்பு அங்கி வழக்கறிஞர்கள், தங்களின் வாதங்களுக்கு வலுச்சேர்க்க, தடித்த புத்தகங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டிருந்தனர். நீதிமன்ற ஊழியர்கள் பரபரத்துக் கிடந்தனர். செய்தியாளர்களும் வழக்கைக் கவனிக்க வந்த பொதுமக்களும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் மூழ்கிப்போய் இருந்தனர். அங்கு நிலவிய ஒருவிதமான இறுக்கம், குளிரூட்டப்பட்ட அந்த அறையை ஒருவிதமான புழுக்கத்தில் வைத்திருந்தது.
இத்தனைப் பதற்றங்களுக்கும் பரபரப்புக்கும் காரணம், அன்றைக்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,437 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th January, 2016 மனிதனின் ஆதித் தொழில்களில் ஒன்றான விவசாயம் எப்படித் தோன்றியது?
ஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியும் காய், கனி போன்றவற்றைச் சேகரித்தும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். பிறகு காட்டு விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்குகளாகப் பழக்கி மேய்க்க ஆரம்பித்தார்கள். ஒரே இடத்தில் குழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், தங்களைச் சுற்றியிருந்த நிலத்திலிருந்தே உணவைப் பெற முயற்சித்தனர். அந்த முயற்சிதான், மனித இனம் பெரிய அளவில் முன்னேற உதவியது.
ஆனால், அப்போது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,331 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th January, 2016 சுருக்கத்தைப் போக்கும் மாதுளை முத்து!
எல்லா சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து! கூந்தலை வளப்படுத்துவதுடன் அழகுக்கும் கை கொடுக்கும் மாதுளையின் மகத்துவத்தை பார்ப்போம்..
சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.
புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.
3 டீஸ்பூன் வெந்தயம், 2 . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,523 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd December, 2015 பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்!
சென்னை மக்கள் இதுவரைக் கண்டிடாத இயற்கைப் பேரிடரைச் சந்தித்துள்ளனர். நவம்பர் 28, 29, 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில்… இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால், தமிழ்நாட்டின் தலைநகரான சிங்காரச் சென்னை, தண்ணீரில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. சாதி, மத பேதம்; ஏழை, பணக்கார வர்க்க பேதம்… என எதுவுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் நிர்கதியாக்கி உணவுக்கும் தண்ணீருக்கும் தவிக்க வைத்து விட்டது, இயற்கை. இயற்கை உபாதைகளைக் கழிக்கக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,046 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th December, 2015
பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை நீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இதற்கு அவற்றை ஊற வைத்து சாப்பிடுவதால், அவற்றின் சுவை அதிகம் இருப்பதோடு, எளிதில் செரிமானமாகும் என்பதால் தான். ஆனால் நட்ஸ்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால், இன்னும் அதிகப்படியான உடல்நல நன்மைகள் கிடைக்கும். நட்ஸ்களின் தோலில் ஒருசில அமிலங்கள் மற்றும் நச்சுமிக்க பொருட்கள் இருக்கும். இதனை அப்படியே சாப்பிட்டால், அதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். எனவே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,908 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th December, 2015 காலையில் பீச், பார்க் செல்பவர்களுக்குத் தெரியும், ‘ஜே ஜே’ என்று வாக்கிங், ஜாகிங் செல்பவர்களின் திருவிழாக் கூட்டம் பற்றி! ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,171 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th November, 2015 டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம். மேலும் அப்போது சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்திருக்கமாட்டோம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.
சந்தன ஃபேஸ் பேக் :-
சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,993 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th November, 2015 தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை…..
தேனீ… உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?
முதலில்… ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,435 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th August, 2015 உலகில் 80 சதவீதம் பேர், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறோம். முதுகுத் தண்டு வடம், ஒன்றன் மீது ஒன்று அமைந்த வகையிலான சிறிய முள்ளெலும்புகளால் ஆனது. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள நீரும், வழுவழுப்பான சதையும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று தேயாமல் தடுக்கின்றன. இவை, முதுகு தண்டு வடத்துடன் ஒட்டிய சதை மற்றும் ஜவ்வுகளின் ஆதரவுடன் செயல்படுகின்றன.
நாம் நிமிர்ந்து நிற்கும் போது, தண்டுவடத்தின் கீழ் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,206 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st April, 2015 உங்களுக்கு தெரியுமா கடல்களும் மரங்களை போல் கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்கிறது என்று?; சுற்றுப்புறசூழல் சீர்கேடும் குறைந்துகொண்டிருக்கும் புவியின் வாழ்நாளும்;
அனைவருக்கும் வணக்கம் (இரண்டாவது உயிர்க்கோளம் அதாவது இரண்டாவது பூமி பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இந்த பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் உருவாக அடிப்படை காரணமாக விளங்கிய உயிர்கோளம் (Biosphere) கிட்டத்தட்ட 3.5 பில்லியன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,348 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th December, 2014 யாராவது குண்டக்க, மண்டக்க பேசினால், அவனுக்கு ‘கொழுப்பு’ அதிகமாகி விட்டது என்கிறோம். கொழுப்பு, பேச்சில் அதிகமானாலும், உடலில் அதிகமானாலும் ஆபத்துதான். மனித உடலுக்கு கொழுப்புச் சத்து மிக அவசியம். அது அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். நம் உடலுக்கு கொழுப்பு ‘நல்ல நண்பன்’ (High Density Lipo Protine – HDL) . அதே நேரத்தில் ‘மோசமான எதிரி’ (Low Density Lipo Protine – LDL) .
. . . → தொடர்ந்து படிக்க..
|
|