Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,460 முறை படிக்கப்பட்டுள்ளது!

சமூக முன்னேற்றத்திற்கான ‘மேம்பாட்டுப் படிப்புகள்’

கடந்த சில வருடங்களாக, மேம்பாடு என்ற வார்த்தையானது, இந்தியாவின் அதிளவிலான மக்களிடையே, ஒரு தொழில்முறை சார்ந்த வார்த்தையாக மாறியுள்ளது.

மேலும் பல காலமாகவே, மேம்பாட்டுப் படிப்புகள் (Development Studies) என்பது பல பரிணாமங்களைப் பெற்று வளர்ந்து வருகிறது. இந்த வார்த்தையைப் பற்றி விவாதிக்காமல், எந்த பொது விவாதமும் நிறைவுப் பெறுவதில்லை எனுமளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஆனால் மேம்பாட்டுப் படிப்பு என்பதன் தோற்றம், பல பத்தாண்டுகளுக்கு முன்பேயே நிகழ்ந்துவிட்டது.

பொருளாதாரம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,392 முறை படிக்கப்பட்டுள்ளது!

காலேஜ் கார்னர் – செல்வி ஹலிமா

செல்வி ஹலிமா – அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி

தங்கள் வாழ்க்கையை, வலியை, இழப்புகளை, அவமானங்களை, புறக்கணிப்புகளை என்று வாழ்வின் பெரும்பகுதியை கடந்துவிட்ட அங்கன்வாடி ஊழியரின் மகள் அமெரிக்க பல்கலையில் படித்துவந்துள்ள நிகழ்வுகள் தான் இந்த மாதக் காலேஜ் கார்னரில் பார்ப்பது. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் பாத்திமா. அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா. வயது 20. நெலலை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3ம் ஆண்டு பயில்கிறார்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,283 முறை படிக்கப்பட்டுள்ளது!

எத்தனை தடவை சொன்னாலும்…

இன்றைய பெற்றோர் பலரின் பிரச்சினையே, `எத்தனை தடவை சொன்னாலும் பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டவே மாட்டேங்கிறாங்க’ என்பதாகத்தான் இருக்கிறது. பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் உள்ள வீட்டில் இந்த ஆதங்கக்குரல் சற்று அதிகமாகவே கேட்கிறது.

இத்தனைக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்கி நடக்கும் கட்டாயத்தில் உள்ளவர்கள் தான். அவர்களிடம் நல்ல தன்மையாக சொன்னாலே கேட்டுக் கொள்வார்கள்.

ஆனால் என்ன நடக்கிறது? அவர்கள் செய்யும் சின்னத்தவறும் விசாரணை என்ற பெயரில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,629 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிளஸ்-2 தேர்வு கால அட்டவணை -2012

பிளஸ் 2 தேர்வு, மார்ச் முதல் வாரத்தில் துவங்கி விடுவது வழக்கம். ஆனால், வரக்கூடிய பொதுத்தேர்வு ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது.

இது குறித்து, தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறும் போது, “பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, அனுப்பி வைத்தோம். மாணவர்களின் நலன் கருதி, தேர்வுக்கு சிறப்பாக தயாராக வேண்டும் என்பதை மனதில் வைத்து கொண்டு, தேர்வை ஒரு வாரம் தள்ளி வைத்து, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது” என்றார்.

பிளஸ்-2 . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,983 முறை படிக்கப்பட்டுள்ளது!

அடுத்த கல்வியாண்டில் இருந்து முப்பருவ கல்வித் திட்டம் அமல்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, நேற்று அரசாணை வெளியிடப் பட்டது.

நடைமுறையில் உள்ள தேர்வு முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தருவதை தவிர்க்கவும், உடலியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், புதிய முறையிலான தேர்வு திட்டம் மற்றும் கல்வித் திட்டத்தை, கடந்த ஆக., 26ம் தேதி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,095 முறை படிக்கப்பட்டுள்ளது!

வியாபாரத்தினால் விபரிதமான கல்வி

வெளிநாட்டுப் பொருள்களை வாங்காதீர், உள்நாட்டுப் பொருள்களை வாங்குவீர்’ “வெள்ளையனே வெளியேறு’ போன்ற வாசகங்களைக் கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, நம் நாட்டின் விடுதலைக்காகப் பல போராட்டங்களை நடத்தி, உயிர்த் தியாகம் செய்து அதில் வெற்றியும் கண்டனர் நம் நாட்டின் தியாகிகள்.

இத்தகைய நாட்டில், முக்கியமாகத் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கோரி ஆசிரியர்கள் வீதிகள்தோறும் தட்டிகளை ஏந்தியும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

ஏன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,781 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறப்பிடம் தரும் சி.எஃப்.ஏ.! நிதித்துறை படிப்பு

சி.எஃப்.ஏ. (Chartered Financial Analyst)

நிதி சார்ந்த படிப்புகளுக்கு எப்போழுதுமே ஒரு தேவை இருக்கிறது. தினமும் புதுவிதமான நிதி சேவைகள் வந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் நிதியை கையாளுவதற்கே தனியே ஒரு திறமை வேண்டும் என்பது தான் இதற்கு காரணம்.

சார்ட்டட் ஃபைனான்ஸியல் அனலிஸ்ட் என்று சொல்லக்கூடிய சி.எஃப்.ஏ.களுக்கு தேவையும் அதிகம், அதற்கான சம்பளமும் அதிகம். இந்தியாவில் திரிபுரா பல்கலைக்கழகம் மட்டுமே இந்த படிப்பை அளிக்கிறது ( அமெரிக்க சி.எஃப்.ஏ. என்று தனியாக ஒரு படிப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,995 முறை படிக்கப்பட்டுள்ளது!

இதுதான் மாதிரிப் பள்ளி! – ஆரணி அதிசயம்

‘அரசுப் பள்ளி’ என்றால் நம்மையும் அறியாமல் ஓர் அலட்சிய மனோபாவம் மனதுக்குள் உட்கார்ந்துகொள்ளும். தேர்ச்சி பெறாத மாணவர்கள், பொறுப்பற்ற ஆசிரியர்கள், அடிப்படை உள் கட்டமைப்புகள் இல்லாத பள்ளிகள் – இவைதான், அரசுப் பள்ளியின் இலக்கணங்கள் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், நீங்கள் உடனடியாக ஆரணி, சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு விசிட் அடிப்பது நல்லது!

இந்த வருடம் தன் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் இப் பள்ளி, 1911-ல் துவங்கப்பட்டபோது, இதன் பெயர், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,832 முறை படிக்கப்பட்டுள்ளது!

கணிப்பொறி அறிவியல் – ஐ.டி – வேறுபாடு என்ன?

வானியல் தொடர்பான படிப்பு என்பது எப்படி டெலஸ்கோப் தொடர்பானது அல்லவோ, அதேபோலவே, கணிப்பொறி அறிவியல் என்பது கணினி தொடர்பான படிப்பு அல்ல.

கணிப்பொறி அறிவியல் பொறியாளர்கள், கம்ப்யூட்டிங் துறையின் பல அம்சங்களில், அதாவது, தனிப்பட்ட மைக்ரோப்ராசசர்(Micro processor) வடிவமைப்பு, தனிப்பட்ட கணினி மற்றும் சூப்பர் கணினி முதல், சர்க்யூட் டிசைன் மற்றும் மென்பொருள் எழுதுதல்(Software writing) போன்ற பணிகள் வரை ஈடுபடுகிறார்கள். மேலும் அவர்கள், ரோபோடிக் ஆராய்ச்சியிலும் ஈடுபட தகுதியுள்ளவர்கள். அந்தப் பணியானது, மோட்டார்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,827 முறை படிக்கப்பட்டுள்ளது!

தமிழக பள்ளி தேர்வு முறையில் கிரேடு அறிமுகம்

தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சி.பி.எஸ்.இ., தேர்வு முறை போன்று, மாநில பாடத்திட்டத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மனப்பாட முறை தேர்வுக்கு பதிலாக சிந்தித்து, கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தேர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தேர்வு மற்றும் மதிப்பீடு முறை (முழுமையான தொடர் மதிப்பீடு முறை) 1 முதல் 8ம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டில் (2012-13) அமல்படுத்தப்படும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,881 முறை படிக்கப்பட்டுள்ளது!

எஸ்எஸ்எல்ஸி யில் புதிய தேர்வுமுறை

“ஈ அடிச்சான் காப்பி’ என்பது போல், காலம் காலமாக பாடப் புத்தகங்களில் இருக்கும் கேள்விகளை, அப்படியே கேட்கும் நடைமுறையை மூட்டை கட்டிவிட்டு, மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ., பாணியில் பத்தாம் வகுப்பு கேள்வித்தாளை, பள்ளிக்கல்வி இயக்ககம் வடிவமைத்துள்ளது. “இந்த புதிய முறையில், மாணவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த அளவில் வரவேற்கக் கூடிய அளவில் இருக்கிறது’ என்று, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,180 முறை படிக்கப்பட்டுள்ளது!

யாருக்கு வேலை இல்லை?

படித்துள்ளேன், ஆனால், வேலை மட்டும் கிடைக்கவில்லை. இது பெரும்பாலான இளைஞர்களின் புலம்பல்.

தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன், மொழிப்புலமை ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் வேலை கிடைக்காததற்கான அடிப்படைக் காரணங்கள்.

அதேபோல, மாணவப் பருவத்தில் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் இல்லாமல், நாட்டு நடப்புத் தெரியாத தலைமுறை உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தலைமுறையினருக்கு இணையதளம் மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. ஆனால், இணையதளத்தில்

வெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே நம்பகத்தன்மையுடையவை அல்ல என்பதை . . . → தொடர்ந்து படிக்க..