Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,967 முறை படிக்கப்பட்டுள்ளது!

குப்பை போடலாமா?

இறைவா! உண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்; தின்னவாயும்; விழுங்க நாவும்; வைத்தாய்! ஆனால்!…. நாங்கள்…. தோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம்! பழத்தை இங்கே! நாவின் ருசியில் விரல்கள் மறந்தன! அதனால்…………. சாலையில் நடந்த சடுகுடு கிழவர் வைத்தார் காலை! நேரமும் காலை! வாழையின் தோலோ கிழவரைக் கண்டதா? வழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை! அவரோ! தாளாக் கால்வலி தன்னை வாட்ட வைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில் பழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார்! முன்னம் கால்வலி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,081 முறை படிக்கப்பட்டுள்ளது!

பயணித்துத்தான் பார்க்கலாமே! கவிதை

படகுகள் காத்திருக்கின்றன கரையோர கனவுகளை கலைத்து விட்டு பயணத்தை துவக்கு முன் பற்றிய பயமேன்?

படகுகள் காத்திருக்கின்றன கரை சேர்க்கும் கடமையுடன் அசைந்து அசைந்து உனை அழைக்கையில் அச்சமேன்?

படகுகள் காத்திருக்கின்றன ஒருவேளை உன் துயர் தீரலாம் ஒருக்கால் உன் பாரம் குறையலாம் ஏறிச் சென்றால் ஏற்றம் கிடைக்கலாம் ஏனில்லை நம்பிக்கை, எதற்கிந்த தயக்கம்?

படகுகள் காத்திருக்கின்றன உபயோகிக்க கற்றுக் கொள் உதறி விட்டால் உன் பயணம்தான் ரத்து. மற்றபடி படகுகள் மற்றொருவருக்காய் பயணிக்கும்

அதனால் பயணித்துத்தான் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,033 முறை படிக்கப்பட்டுள்ளது!

வேரை மறந்த விழுதே … கவிதை

உன்னில் என்றும் தன்னைக் கண்டனள் தன்னில் அதிகம் உன்னை உயர்த்தினள் கண்ணே மணியே பொன்னே என்று விண்வரை உன்னை வைத்தே போற்றினள்.

ஊட்டிய பாலுக்கு விலை வைத்ததில்லை கொட்டிய பாசத்தை கணக்கிட்டதில்லை நீட்டிய போதுன் விரல் வாசலை நோக்கி தீட்டிய கத்தியில் குத்தவள் உணர்ந்தனள்.

தனியாய் பயணம் கிளம்பிய போதும் தவியாய் அவள்மனம் தவித்திட்ட போதும் விதியாய் எண்ணி நொந்தனள் தவிர சதியாய் கண்டுனை சபித்திட நினைத்திலள்.

தேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ? பார்வைகள் மாறியே பாசமும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,730 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்றங்கள் – கவிதை

கருவறையில் இருக்கையிலே இருட்டறை தான் என்றாலும் உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை. வெளிச்சமும் பிடிக்கவில்லை வெளியுலகம் வருவதற்கோ துளியளவும் விருப்பமில்லை. உள்ளேயே இருப்பதற்கா கருவாய் நீ உருவானாய் என்றே பரிகசித்தே படைத்தவன் பாரினில் பிறக்க வைத்தான்.

அழுதே நாம் பிறந்தோம் பாதுகாப்பை இழந்தே நாம் தவித்தோம். பிறந்தது இழப்பல்ல பெற்றது ஒரு பேருலகம் என்றே பிறகுணர்ந்தோம். சிரிக்கவும் பழகிக் கொண்டோம் உறவுகளை நாம் பெற்றோம் நண்பர்களைக் கண்டெடுத்தோம் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.

ஒன்றை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,598 முறை படிக்கப்பட்டுள்ளது!

யாருக்குப் பெருநாள்?

உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை. பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை. காலையில் எழுந்து டீ / காஃபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை. புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை. இவருக்குத்தான் இனிய பெருநாள்…! தன் ஆணவத்தை அடக்கி அலட்சியப் போக்கை அழித்து பகலில் பட்டினி கிடந்து இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு பசி, தாகத்தால் இச்சையை வென்று இறை கடமைகளை நிறைவேற்றி தானத்தால் ஏழைகளின் கண்களை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,365 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரு பக்க நியாயம் – ஹிஜாப்

உடையவர் காணும் உடல் உறுப்பை; அந்நியர் காண்பது சரியா; அரித்தெடுக்கும் பார்வைக்காகத் திரையிடச் சொல்வதுப் பிழையா!

விழிக் காணும் சருமம் விரல் தொடத் தூண்டாதா; உணர்ச்சிக்கு உரம் இட்டப் பின்னேப் படித்தாண்டத் தோன்றாதா!

பார்வை மட்டும்தானே; அழகைப் பார்க்கட்டும்; என விழிகளுக்கு விருந்து வைப்பது முறையா;

பசிக்கும் பார்வைக்கு அணைப்போடச் சொல்லித் திரைப்போடச் சொல்வது சிறையா!

மரத்துப்போன மனதினால் மரித்துப்போன வெட்கம்; கறுத்துப் போன உள்ளத்தை மீட்டெடுப்பதில் என்ன தயக்கம்!

மற்றவர் அணிந்தால் வாய் மணக்க உரைக்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,052 முறை படிக்கப்பட்டுள்ளது!

தன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்

புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே

நம்பிக்கையை நம்புபவனே நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு

நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும் நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்

உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்

நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால் அதைத் துப்பி விடாதே

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,812 முறை படிக்கப்பட்டுள்ளது!

போர்க்களமா வாழ்க்கை? கவிதை

போர்க்களமா வாழ்க்கை? பார்க்கலாமே ஒரு கை! சோர்ந்து விடாதே! இதுதானா வாழ்க்கை என்று கோழைகளின் பட்டியலில் சேர்ந்து விடாதே! 

இல்லையென்பார், இருப்பதைக் கொடுப்பாய்; இன்னமும் என்பார் இதுதான் முடியும் என்பாய்!

மறுகணமே கஞ்சப் பிரபு என புறம் கூற புரண்டு நிற்கும் பஞ்சப் பிரபுவின் நாக்கு!

கொடுத்ததை திரும்பக் கேட்டால் கோமாளி என்பான்; இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ ஏமாளி என்பான்!

நாம் இழைக்கும் தவறுகளிலே கதைப் பேசி பிழைக்கும் கூட்டங்கள்

இந்த நயவஞ்சக நாக்கினைக் கண்டு; கதற . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 11,061 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுத்தம் சிந்திப்போம்!

இறைவா!

உண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்;

தின்ன வாயும்; விழுங்க நாவும் வைத்தாய்!

ஆனால்…! நாங்கள்…!!

தோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம்!

பழத்தை இங்கே!

நாவின் ருசியில் விரல்கள் மறந்தன!

அதனால்…

சாலையில் நடந்த சடுகுடு கிழவர்

வைத்தார் காலை! நேரமும் காலை!

வாழையின் தோலோ கிழவரைக் கண்டதா?

வழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை!

அவரோ!

தாளாக் கால்வலி தன்னனை வாட்ட

வைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில்

பழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார் !

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,970 முறை படிக்கப்பட்டுள்ளது!

தண்ணீர்!! தண்ணீர்!! தண்ணீர்!!

நீ அதிசயம் மட்டுமல்ல … நீ ஆச்சரியமான ஆசான் …. உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே …. உன் பாகுபாடில்லாத அணுகு முறையால் நீ போகும், நிற்கும், நடக்கும், ஓடும் இடமெல்லாம் சுகமே ….

நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை அதனால் நீ தளர்வதுமில்லை பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும் உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ….

சுத்த தங்கமாக நீ வலம் வந்து மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும் நீ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,097 முறை படிக்கப்பட்டுள்ளது!

யதார்த்த மயக்கம்! – கவிதை

படுப்பதுவோ… போர்த்துவதுவோ… கண்ணடைப்பதுவோ அல்ல உறக்கம்,நடந்ததுவும்… நடப்பதுவும்… நடக்க இருப்பதுவும்- என நர்த்தனமாடும் மனச் சலனங்கள் ஓய்வதே… உறக்கம்!

திறந்த கண்களும்… பரந்த பார்வையும்… உரத்த நோக்கும் அல்ல விழிப்பு,

பிறர் வலி உணர்தலும்… உணர்ந்து நீக்கலும்… நீக்கி இருத்தலுமே விழிப்பு!

காண்பதும்… கேட்பதும்… நுகர்தலும்… மூச்சிழுத்து விடுவதும் அல்ல வாழ்க்கை

நினைப்பதும்… செய்வதும்… செய்ததை உலகம் நினைத்திருக்கச் செய்வதுமே வாழ்க்கை!

உயிர் கழிதலும்… உணர்வழிதலும்… மெய் வீழ்தலும்… அல்ல மரணம்,

உயிர்களுக்கு உதவாமல்… இல்லாமலிருத்தல்போல்… . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,828 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெற்றி வந்து குவியும்

மனதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் – ஒவ்வொரு தினமும் “பயிற்ச்சி” செய்து செய்து வெற்றி கொள்ள வேண்டும்!

தீமை செய்யும் பகைவன் எங்கோ தூரத்தில் இல்லை – மனதில் சேரும் “குழப்பச் சிந்தை” வழியில் நேரும் பகையில் தொல்லை!

யாரும் நமக்குச் செய்யும் கேட்டை தடுத்து நிறுத்த முடியும் – மனம் “போகும் பாதை” தெரிந்து கொண்டால் வெற்றி வந்து குவியும்!

உலகில் மனிதர் வெற்றி கொண்டால் உழைப்பு மட்டும் இல்லை – ஓடும் . . . → தொடர்ந்து படிக்க..