Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,489 முறை படிக்கப்பட்டுள்ளது!

செயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை

செயற்கை கருவூட்டல் சிகிச்சை பெறும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி.. முட்டையில் இருந்து முட்டைக்கு! மரபணு சாதனை

பெண்ணின் கரு முட்டை போதிய தரமாக இல்லை என்றால், வேறு ஒரு பெண்ணிடம் இருந்து கரு முட்டையைத் தானமாகப் பெற்று குழந்தைப்பேறு அடையவைப்பதுதான் ஒரே தீர்வாக இதுவரை இருந்தது. இதில் குழந்தையின் மரபணுவில் தாயின் மரபணுவுக்குப் பதில் ‘அந்த வேறு ஒருவரின் மரபணுதான் இருக்கும். தன் வயிற்றில் வளர்த்துப் பெற்றாலும், அது வேறு ஒருவரின் குழந்தை என்ற . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,039 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறுநீர் கசிவா? இதோ உங்களுக்கான தீர்வு

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண்களை மிகுந்த தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும் இந்தப் பிரச்சனைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீர் கசிவு மற்றும் மகளிர் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.

* முதுமையில் நான்கில் ஒரு பெண்ணுக்கு சிறுநீரை அடக்க முடியாத பிரச்சனை இருக்கிறது. ஒரு காலத்தில் வயதானவர்களின் பிரச்சனையாக இருந்த இது, இன்று இளம் வயதினரையும் தாக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது 30 பிளஸ்சில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,354 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெண்கள் கவனத்திற்கு…

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 17,987 முறை படிக்கப்பட்டுள்ளது!

முகம் பளபளப்புடன் திகழ..

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்கமின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,711 முறை படிக்கப்பட்டுள்ளது!

மனைவியைப் புரிந்து கொள்ளுங்கள்

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க மனைவி சொல் அப்படியே கேட்க வேண்டும் என்பது பற்றி?

ஒரு மனைவி, தன் கணவனிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள்….? விதவிதமான பட்டுப்புடவைகளா? தங்கம், வைரம் என்று நகைக் குவியலா? பெரிய பங்களா, ஏ.சி.கார் என்று ஆடம்பர விஷயங்களா….? நிறைய சம்பளமும், ஏகப்பட்ட பேங்க் பேலன்ஸும் வேண்டுமென்றா? அல்லது தன் கணவன் மன்மதன் போல் அழகாக இருக்க வேண்டுமென்றா?

இல்லவே இல்லை…! மனைவியின் எதிர்பார்ப்பே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 16,771 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..

இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 28,242 முறை படிக்கப்பட்டுள்ளது!

தங்கம், வெள்ளி, முத்து, பவளம்,வைரம் ஓர் அலசல்!

ஆபரணங்கள்… சீர், பிறந்த வீட்டின் பெருமை சொல்லும் அடையாளம், ஸ்டேட்டஸ் சிம்பல், சென்ட்டிமென்ட், அன்பு பரிசின் நினவுச் சின்னம், அழகு என்று நம் கலாசாரத்திலும், வாழ்விலும் நம் கூடவே ஒட்டி உறவாடும் உலோக உறவுகள் என்று சொன்னால், அது மிகையில்லை!

தங்கம், வெள்ளி, பிளாட்டினம், முத்து, பவளம், வைரம் என அவற்றில் நம் பயன்பாடுகளின் பட்டியலும் நம் வசதி, பொருளாதாரம் காரணமாக நீண்டுகொண்டே இருக்கிறது. வீட்டில் கஷ்டமான சமயங்களில் ஆபத்பாந்தவனாக கைகொடுத்துக் காப்பாற்றுவதுகூட இந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,644 முறை படிக்கப்பட்டுள்ளது!

கண்ணாடிகள் கவனம்!

நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,263 முறை படிக்கப்பட்டுள்ளது!

வீட்டிலேயே செய்யலாம் பிசினஸ்!

தகிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க குளிர்பான கடைகளில் குவிகிறது கூட்டம். மக்களின் இந்தத் தேவையையே தனது பிசினஸூக்கான அஸ்திவாரமாக்கி ஜெயித்தவர்தான் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த சௌமியா.

கிட்டத்தட்ட சென்னை முழுக்க பல கடைகளுக்கும் சப்ளை ஆகின்றன, இவர் கைகளால் தயாராகும் பிரிசர்வேட்டிவ் ஜூஸ் வகைகள்!

”குடும்பம், குழந்தைகள்னு இயல்பா நகர்ந்துட்டு இருந்துச்சு வாழ்க்கை. குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் எனக்குள்ள பிசினஸ் ஆசை முளை விட்டுச்சு. அந்த ஆசைக்கு நான் காலேஜ் படிச்சப்ப கத்துக்கிட்ட இந்தத் தொழில் ‘ஜூஸ்’ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,880 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை ரவை ரெசிபிகள்!

ரசிக்க.. ருசிக்க.. – 30 வகை ரவை ரெசிபிகள்! இல்லத்தரசிகளின் ஆபத்பாந்தவன் ரவை. திடீரென்று தோழி-களோடு வந்து ‘‘ம்மா பசிக்குது..’’ என்று ஹாலிலிருந்து கூப்பாடு போடும் மகளை ஒரு பக்கம் திட்டிக் கொண்டே இன்னொரு பக்கம் ரவை டின்னைத்தான் கையில் எடுப்பீர்கள். ஆனால், அந்த அவசரத்துக்கு உப்புமாவோ கேசரியோ மட்டுமே செய்ய முடிந்து, ‘நல்லா செஞ்சு போட முடியலையே..’ என்கிற ஒரு குற்ற உணர்வும் உள்ளுக்குள் வாட்டி எடுக்கும். இனி அதற்கெல்லாம் அவசியமே இல்லை. உங்களுக்காகவேதான் ரகம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 78,315 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை டயட் சமையல்

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.

“நாலுபடி ஏறுனதுக்கே இப்படி மூச்சு வாங்குது. ‘வெயிட்டக் குறைங்க, வெயிட்டக் குறைங்க’னு டாக்டர் சொல்றாரு. என்னென்னமோ செஞ்சுப் பாத்துட்டேன்… வெயிட் குறைய மாட்டேங்குது” நம்மில் பலர் இப்படி புலம்பிக் கொண்டும்…

“இவ மட்டும் எப்பப் பார்த்தாலும் ‘சிக்’னு இருக்காளே… என்ன மாயா ஜாலம் பண்றா?” என்று சிலரைப் பார்த்து ஏங்கிக் கொண்டும் இருக்கிறோம்.

உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து மற்றும் சில . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,056 முறை படிக்கப்பட்டுள்ளது!

குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? உஷார்

குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் குழந்தை அழும்போது பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் குறைந்து போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மனநலம் பாதிக்கும்

குழந்தைகள் அழுவது பசியை தாய்க்கு உணர்த்தவே என்பது எல்லோரும் அறிந்தது. உடலில் உள்ள நோய்களையும், தனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், தாய்க்கு . . . → தொடர்ந்து படிக்க..