Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,825 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்று எரிபொருள்: தயக்கம் ஏன்?

இந்திய மக்கள்தொகை 127 கோடியைக் கடந்து விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை மிஞ்சிவிடும் என்று கூறுகிறார்கள். அதற்கு ஏற்றார் போல, விண்ணைத் தொடும் அளவுக்கு விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது. இதற்கு மூலகாரணம் நாம் அன்றாடும் பயன்படுத்தும் எரிபொருளாகும் (பெட்ரோல், டீசல்).

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தைப் பொருத்து பயணச் சீட்டின் கட்டணம் உயர்கிறது. வியாபாரிகள் லாரியின் வாடகை மற்றும் காய்கறிகளின் வரவுகளை வைத்து விலையை நிர்ணயம் செய்கிறார்கள். இதற்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,533 முறை படிக்கப்பட்டுள்ளது!

வங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்

பல வங்கிகளிடம் 7,000 கோடி ரூபாய் அளவில் கடன் பெற்று, அதை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர் என்று பட்டியலிடப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சமீபத்திய லண்டன் பயணம்தான் வங்கி துறையில் இப்பொழுது பரபரப்பு செய்தியாகப் பேசப்படுகிறது.

2004 முதல் 2010 வரை 17 வங்கிகள் மல்லையாவின் பெயரை முன்னிறுத்திய கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு 7,000 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகையை வழங்கியிருக்கின்றன. இதில், 90% அளவுக்கான கடன் தொகை, ஸ்டேட் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,221 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்தியா ஏழை நாடா ?

இந்தியா வளரும் நாடு, மூன்றாம் உலக நாடு, என்று அனைவரும் கூறுகிறார்கள். இது உண்மையா? ஏன் இந்த நிலை ?

இந்தியா சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 9 நாட்கள் ஆகின்றன. இந்திய அரசின் கணக்குப் படி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான அளவுகோல், மாதத்துக்கு ரூபாய் 300க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கின்றனர். இவ்வாறு மாதத்துக்கு ரூபாய் 300க்கும் கீழே சம்பாதித்து, வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் இந்தியர்களின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,060 முறை படிக்கப்பட்டுள்ளது!

பண்டைய இந்தியப் பொருளாதாரம்

நமது நாட்டுக்கு என பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம்.

நமது நாட்டுக்கு என பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக உலகப் பொருளாதார அரங்கில் ஐரோப்பாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் முன்னிலையில் இருந்து வருகின்றன. ஆகையால், அதை வைத்துக் கொண்டு வரலாற்றுக்காலம் முழுவதும் அப்படியே இருந்திருக்கலாம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,260 முறை படிக்கப்பட்டுள்ளது!

புன்னகை என்ன விலை?

மருந்து கடை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். முதல் வரிசை முழுக்க, கடையின் அகல முழுவைதயும் அடைத்துக் கொண்டிருக்க, நான் பின் வரிசை மனிதனாகநின்றேன்.. கடையிலோ உரிமையாளர் மட்டுமே (அப்படித்தான் தெரிந்தார்) இருந்தார். ஊகும்! காத்திருந்து கட்டுபடியாகாது, அடுத்த கடைதான் என்று மெல்ல நான் நழுவப் பார்த்த வேளையில் சார் ஒரு நிமிஷம் வந்துடேன் என்றார் என்னைப் பார்த்து ஒரு புன்னகைக் கலப்போடு. அதன் பிறகு நான் காத்திருந்தது ஏழு நிமிடங்களுக்கு மேல். அந்தப் புன்னகை அந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,653 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாகனத்தில் எரிபொருள் சேமிக்க…!

பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!

வருமானம் உயர்கிறதோ இல்லையோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாகி விட்டது. சென்ற வருடத்தில் 11 மாத காலத்தில் 11 முறை, சராசரியாக மாதத்துக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மொத்தமாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.

அதாவது பெட்ரோலின் விலை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 28% அதிகரித்துள்ளது. இந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,405 முறை படிக்கப்பட்டுள்ளது!

வித்தியாசப்படுத்தினால் வெற்றி!

சீனர்கள் பெரும்பாலும் அசப்பில் ஒருவர் போலவே அனைவரும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சீனர்கள் யாரையாவது தேடிக் கண்டு பிடிக்க நேர்ந்தால் தொலைந்தோம். தேடித் தேடி நமக்கும் மூக்கு சின்னதாகிவிடும்.

சீனர்களை விடுங்கள். திருப்பதியில் மொட்டையடித்த பக்தகோடிகள் அனைவரும் ஒன்று போல் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அங்கு மொட்டையடித்த குறிப்பிட்ட நபரைத் தேட நேர்ந்தால் தேடித் தேடி நாமும் மொட்டையாக வேண்டியதுதான்.

இதே கதைதான் மார்க்கெட்டில், மார்க்கெட்டிங்கில், மார்க்கெட்டர்களிடம். விற்கும் பிராண்டை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,668 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரயிலில் கிடைத்த பாடம்!

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும், மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு! தென் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,685 முறை படிக்கப்பட்டுள்ளது!

என் பள்ளி! தன்னம்பிக்கை!!

என் பள்ளி காரமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. அங்கு தான் ஏழைத் தொழிலாளியன் மகனாக 8ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு படிப்பில் பெரிய அளவில நாட்டம் இருந்தது இல்லை. ஒரு கட்டத்தில் பள்ளியில் இருந்து இடைநின்றுவிடலாம் என்றுகூட நினைத்தேன்.

அந்த நேரத்தில் எங்கள் பள்ளிக்கு புதிதாக திருமதி சுசீலா என்ற ஆசிரியை வந்து சேர்ந்தார். அவருடைய வருகை என் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆசிரியப்பணி மகத்தானது மட்டுமல்ல பொறுப்பானதும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,674 முறை படிக்கப்பட்டுள்ளது!

வறுமை ஒழிப்பில் இஸ்லாம் (V)

வறுதை ஒழிப்பு என்ற வார்த்தை பல காலமாக பல இடங்களில் முழங்கி கொண்டே வந்துள்ளது. சோசலிசம் என்ற கொள்கை மக்கள் அனைவரும் சமம் – ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு கூடாது என்ற அடிப்படையில் செயல்பட்டது. சோசலிசக் கொள்கையை வளர்த்திட பல திட்டங்களை நடைமுறைபடுத்தி இறுதியில் தோல்வியடைந்ததை நாம் கண் முன்னே பார்க்கலாம். ஆனால் இஸ்லாம் இந்த கொள்கையை ஆதரிக்கவில்லை. காரணம் பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு இல்லாமல் இந்த உலகம் இயங்க இயலாது. ஆனால் அல்லாஹ் அருளிய இந்த தீனுல் இஸ்லாம் வறுமைக்கு அழகிய தீர்வை வழங்கி உள்ளது. வறுமையில் வாடும் மக்களும் சிறந்து வாழ பல வழிகளை இஸ்லாம் காட்டியது. முஹம்மது நபியவர்களும் அவர்களது தோழர்களும் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்த போதும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். போதுமென்ற மனதுடன் வாழ்ந்தனர். எனவே நபியவர்களிடம் எவ்வளவோ பொருளாதாரம் வந்த போதும் ஏழை எளியவர்களுக்கு அத்தனை செல்வத்தையும் உடனே வழங்கி மகிழ்ந்தார்கள். அவர்களது தோழர்களும் அப்படியே கடைபிடித்தனர். இஸ்லாம் ஜகாத் 2.5 சதம் ஏழைகளுக்கு வழங்க உத்தரவிடுகிறது. வணக்கங்களில் ஏற்படும் தவறுகளுக்கு பகரமாக ஏழைகளுக்கு உணவு அளித்திட சொல்கின்றது. அது மட்டுமல்லாது அதிகமாக ஏழைகளுக்கு உதவிட ஊக்குவிக்கின்றது (சதகா). மேலும் விவரமறிய சகோதரர் முஜாஹித் அவர்களின் உரையைக் கேட்கவும்…. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,841 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூழ்குவது இந்திய நீர்மூழ்கிகள் மட்டும்தானா?

ஆண்டுக்கு ஓரிரு முறை அரிதாகப் பத்திரிகைகளில் வரும் படங்களோடு முடிந்துவிடும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மீதான கவனம், இப்போது தொடர்கதைபோல ஆகியிருக்கிறது. காரணம், கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களில் மூன்று விபத்துகள். அத்துடன் உயிரிழப்புகள். கடற்படைக் கப்பல்களின் விபத்துகளுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று, இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாகப் பதவி விலகியிருக்கிறார் கடற்படைத் தளபதி. நீர்மூழ்கிக் கப்பல் வீரர்களின் மரணம் பெரும் செய்தி ஆகியிருக்கிறது. இத்தகைய சூழலிலும்கூட இந்திய ஊடகங்கள் விவாதிக்காத ஒரு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,989 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு!

மீன் வளர்ப்பு பயிர் விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்புடன் சேர்த்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைத்துச் செய்யும்போது வளங்கள் நன்கு பயன்படுத்தப்படுவதோடு, இருக்கும் குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும். தற்போது அதிகரித்து வரும் மீன் பொருட்களின் விலையினாலும், பயிர்களுக்கு இடும் உரம் அதிக விலையாக இருப்பதாலும் நெல் போன்ற பயிர்களின் வயலில் மீன் வளர்ப்பது பற்றிவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்குக் குறைந்த செலவில் நல்ல மீன் புரதங்கள் . . . → தொடர்ந்து படிக்க..