Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,883 முறை படிக்கப்பட்டுள்ளது!

வட்டி – ஒரு சமுதாயக் கேடு!

“(அதிகமானோர்) வட்டியை உண்ணக் கூடிய அல்லது அதனுடை புழுதியாவது படியக் கூடிய ஒரு காலம் மக்கள் மீது வரும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவப்பது அபூ ஹுரைர (ரலி) அவர்கள். (நஸாயீ)

இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்நபி மொழி நூற்று நூறு பொருந்தி வருவதை தெளிவாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வட்டியின் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது என்று முடிவு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,007 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி

கிவி பழம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது?

இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,150 முறை படிக்கப்பட்டுள்ளது!

பத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்திய மக்கள் இழந்தது ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில்லாமல் கருப்பு நிறத்தில் குவிந்திருக்கும் இந்தியப் பணம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் குவிந்துள்ள சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய். அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், மத நிறுவனங்களும் நம் மக்களைச் சுரண்டி குவித்த பணம். இதே இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் மாத வருமானம் இன்னும் ஆயிரம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,930 முறை படிக்கப்பட்டுள்ளது!

நிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டியன!

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,090 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொழிலை எப்படி இருமடங்காக்குவது 1

1. தொழிலின் ஜீவன்

மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டி தொழில் நுணுக்கங்களை ஆராய்ந்து 3 புத்தகங்கள் எழுதக் காரணமாயிருந்தது. இப்புத்தகங்கள் அமெரிக்காவில் பிரசுரமாகியுள்ளன. மூன்றாவதாக வெளியிடப்பட்ட புத்தகத்தை Garry Jacobs உம் Robert Macfarlane உம் சேர்ந்து எழுதியுள்ளார்கள். இலாபத்தை இரட்டிப்பது எப்படி, தொழிலை இருமடங்காக்குவது எவ்விதம் என்பதே புத்தகத்தின் முக்கிய கருத்துகள். Vital Corporation என்பது புத்தகத்தின் பெயர்.

அப்புத்தகத்தின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு திரு. P.V. சங்கர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,616 முறை படிக்கப்பட்டுள்ளது!

உணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்

போன மாசம்தான் வாங்கின பருப்பு… அதுக்குள்ள வண்டு விழுந்திடுச்சு…”,

”புளி கெட்டுப் போச்சு… இனி அடுத்த சீஸனுக்குத்தான் புதுப்புளி கிடைக்கும்…”

– சமையலறைகளில் அடிக்கடி கேட்கும் புலம்பல்கள் இவை. வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி, அவற்றைப் பராமரிக்காமல் விட்டால்… இந்தப் புலம்பல்கள்தான் மிஞ்சும்.

”பண்டைய தமிழர்கள், உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் வல்லவர்கள். பரண், குலுமை, கருவாடு, உப்புக்கண்டம், ஊறுகாய் என்று அவர்களின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,308 முறை படிக்கப்பட்டுள்ளது!

தங்கம் விலை மேலும் குறையும்

சர்வதேச அளவில், தங்கம் விலை மேலும் சரியும் என, அமெரிக்காவை சேர்ந்த தரகு நிறுவனமான மெரில் லின்ச் எச்சரித்துள்ளது.

இந்நிறுவனத்தின்,உலோக திட்டப் பிரிவு ஆய்வாளர் மைக்கேல் விட்மர் கூறியதாவது:லண்டன் உலோக சந்தையில், கடந்த இரண்டு மாதங்களில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 300 டாலர் வரை சரிவடைந்து உள்ளது.

சைப்ரஸ் நாடு : கடந்த 12 ஆண்டுகளாக உயர்ந்து வந்த தங்கம், தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில், நிதி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,979 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரெடிமேடு பிரியாணி மிக்ஸ்

பரபரப்பான வாழ்க்கை முறையில் பல பெண்களுக்கு ஆற அமர சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கும் பேச்லர்களுக்கும் பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடிகள். அந்தவகையில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ் போன்றவற்றை தரமாக தயாரித்து விற்றால் கைநிறைய காசு பார்க்கலாம். நன்கு சமைக்க தெரிந்த பெண்கள், இந்த தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்’ என்று கூறுகிறார் கோவை பீளமேடு பாவை மசாலா நிறுவன உரிமையாளர் சாவித்திரி (49). அவர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,908 முறை படிக்கப்பட்டுள்ளது!

தூள் கிளப்பும் பிரியாணி பிஸினஸ்

எந்த பார்ட்டியா இருந்தாலும்… ‘பிரியாணி உண்டா?’ என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. வேறு எந்த விருந்திலும் திருப்தியாகாத பலரும் ஒரு பிளேட் பிரியாணியில் சமாதானமடைந்து விடுவதைப் பார்க்கலாம். அதிலும் இஸ்லாமியர் செய்கிற பிரியாணிக்கு மவுசே தனி! சைவ,அசைவ பிரியாணி செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த ஃபாத்தி முத்து ஜோஹரா. ‘‘எட்டாவதுக்கு மேல படிக்கலை. கல்யாணத்துக்குப் பிறகு கணவரோட சம்பளத்துல குடும்பம் நடத்தறது சிரமமா இருந்தது. எங்க இனத்துல சின்ன விசேஷத்துலேர்ந்து நிக்ஹா வரைக்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,300 முறை படிக்கப்பட்டுள்ளது!

முயல் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்..!

வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பது போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம.

முயல் குட்டியானது சுமார் ஒரு மாசம் வரை தாயுடன் கட்டாயம் இருக்க வேண்டும்.. அப்போதுதான் நல்ல ஆரோக்கியமான முயல்குட்டிகள் நமக்கு கிடைக்கும். நன்றாக வளர்ந்த முயல்களை கிலோ ஒன்றிற்கு தரத்திற்கு தகுந்தாற்போன்று 300 முதல் 350,400,500,600 என ரூபாய் வரைக்கும் விற்கலாம்..இதற்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,802 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6

முந்தைய பதிவில் இறுதியாக பேட்டரி பேங்க் பற்றி விளக்கியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக சில விபரங்களை பார்ப்போம்.

பாட்டரியில் சேமிக்கப்பட்டிருக்கும் டி.சி கரண்ட்(ஆம்பியர்) -ஐ ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக உபயோகப்படுத்த முடியாது. பேட்டரி கரண்டில் 50% தான் பயன் படுத்தலாம். அதிகமாக பயன்படுத்தினால் பேட்டரி டிஸ்சார்ஜ் லெவலுக்கு கீழே போய்விடும். இதனால் பாட்டரியின் வாழ்நாள் குறைந்து விடும். எனவே இன்வெர்ட்டர் தானாகவே அந்த லெவலுக்கு கீழே போனால் மின் இணைப்பை துண்டித்து விடும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,394 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி

தற்போது கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கிரானைட் என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகிறது என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கிரானைட் தயாராவது எப்படி:

கிரானைட் பாறைகள், மலைகளை குடைந்து, வெட்டி அல்லது வெடிவைத்து தகர்த்து எடுக்கப்படுகின்றன. முதலில் கிரானைட் கல்லின் அளவு திட்டமிடப்படுகிறது. அப்போது தான், வெட்டும் போது கற்கள் வீணாவது தடுக்கப்படும். வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் . . . → தொடர்ந்து படிக்க..