|
|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,809 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd September, 2009 நம் மீது இரக்கமுள்ள அல்லாஹ் நமது இம்மை வெற்றிக்கு சம்பாதித்துக் கொள்வதற்காக இன்னொரு ரமலானைத் தந்து இன்னருள் பாலித்திருக்கிறான்!
வருடம் முழுக்க அழுக்கேறியிருந்த கல்பை சுத்தி செய்துகொள்ளும் வாய்ப்பாக்கித் தந்திருக்கிறான்!
சில வருடங்களாக நாம் ஒவ்வொரு ரமலானிலும் ஒரு சங்கல்பம் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம்!
அதனை ஒட்டி இதோ நம் பார்வைக்கு ஓர் ஆலோசனை!
நமது குடும்பவாழ்வியல் சமீப காலமாக பலவிதமான நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. பொருளாதார மந்தம் ஒருவகை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதென்றால், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,718 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st September, 2009 நடந்து முடிந்த நாட்டின் பதினைந்தாம் பொதுத்தேர்தல் அனைத்து ஊடகக் கணிப்புகளையும் தகர்த்து விட்டு ஒரு புதிய ராஜபாட்டைக்குச் சாளரம் திறந்திருக்கிறது! மதமாச்சரிய சக்திகள் வீறுகொண்டெழும் என்று எந்த முன்னுரைப்பும் அறியத்தராவிட்டாலும், மாறிய கூட்டணிக் காட்சிகளும், கொள்கையற்ற கோஷ்டி சேரல்களும் வாக்குச் சிதறலுக்கு வழியமைத்து உறுதியான அரசமைவுக்கு இடைஞ்சலாகிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. இடதுசாரிகள் திடீரென ஞானோதயம் வந்ததுபோல திசைமாறிப் பயணித்தது வேறு நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களை அலைக்கழித்தது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் வடக்கே எந்த முன்னேற்றத்தையும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,850 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th August, 2009 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 1
* சீர்மிகு சித்தார்கோட்டை. வந்தாரை வாழ வைக்கும் சித்தார்கோட்டை * சித்தார்கோட்டை என்று சொன்னாலே உள்ளத்தில் உவகை பொங்கும்.
சின்ன ஊராகயிருந்தாலும் சுற்றுப்புற ஊர்களில் இதன் மதிப்பு அதிகம். குறிப்பாக மலேசியாவில் ‘சபாக்பெர்னம்’ என்ற ஊரையும் பர்மாவில் ‘உவாக்கேமா’ என்ற ஊரையும் ‘சின்ன சித்தார்கோட்டை’ என்று குறிப்பிடுவது வழக்கம். அந்த இரு ஊர்களிலும் இவ்வூர் மக்கள் தொழில் நிமித்தமாக அதிக அளவில் குடியேறியுள்ளார்கள்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,325 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th August, 2009 டில்லி சக்கரவர்த்தி பகதுர்ஷாவின் பிரதான சமஸ்தா கவிவாணர் தாமே ஒரு தேசிய கீதத்தை இயற்றினார். அந்த கீதத்தை அப்போது பாடாதவர்களே இல்லை எனலாம். பொது வைபவங்கள் எல்லாவற்றிலும் அதைப் பாட வேண்டும் என்று டில்லி சக்கரவர்த்தியே நேரில் கட்டளைப் பிறப்பித்தார். அந்த கீதமானது இந்தியர்களின் பண்டைய வீரச் செயல்களை விளக்கியதுடன், தற்போதைய வீழ்ச்சியையும் கேட்பவர் மனம் உருகும்படி சித்தரித்தது. வீரசாவர்க்கர்,எரிமலை. பக்கம் 63.
எறிந்த கல் ஏலம் போனது
குமரி மாவட்டத்தில் மைலாடி என்னும் ஊரில் காங்கிரஸ் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,238 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th August, 2009 இன்றைய தலைமுறையினர்கள், ஏன் முந்தைய தலைமுறையினர்கள் பலர் அறியாத பல வரலாற்றுச் சம்பவங்களையும், செய்திகளையும் நமதூர் பெரியார் – ஆசிரியர் சி. அ. அ. முஹம்மது அபுத்தாஹிர் அவர்கள் சுவைபட எழுதியுள்ளார்கள். தான் அறிந்த இந்த சம்பவங்களை உலகத்தினர் அறியட்டும் என்ற நன்நோக்கில் சித்தார்கோட்டை.காமில் வெளியிட முன்வந்துள்ளார்கள்.
உண்மையில் சிரமமான இந்த ஆய்வு பாராட்டத்தக்கதாகும். இந்த அறிய சேவைக்காக நாம் அனைவரும் அவர்களுக்குக் கடமைப் பட்டுள்ளோம்.
இந்த ஆய்வுக்கட்டுரை சிறப்பாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன். கட்டுரை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,223 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd August, 2009 வஅலைக்குமஸ்ஸலாம், ஹுஸைன் முபாரக் ஒபாமா!
கெய்ரோவில் பல்கலைக்கழக வளாகத்தில் உலக முஸ்லிம்களுக்கு நீங்கள் நிகழ்த்திய உரையில் கூறிய சலாத்துக்கு எங்களது பதிலை ஏற்றுக் கொள்ளுங்கள்!
இந்த பதிலைச் சொல்வதற்கு முன் நாங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
உரையை நேரடி ஒளிபரப்பில் கேட்டது மட்டுமல்லாமல், திரும்பவும் இருமுறை கேட்டு, முழுமையான உரையை எழுத்தில் படித்து, அவ்வுரையின் சாதக பாதகங்களை அலசிய தேர்ந்த ஆய்வாளர்களின் கருத்துக்களை கவனமாக ஆய்ந்து, இந்த பதிலை உங்களுக்கு நாங்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,939 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th July, 2009 அறிஞனின் பேனா
”போர்க்களத்தில் வாள்முனையில் சிந்தப்படும் ரத்தத்துளிகளை விட ஒரு அறிஞனின் பேனாவின் மைத்துளி வலிமை மிக்கது!” – என்றார் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இந்த வலிமையை இம்மண்ணின் விடுதலைக்காகப் பயன்படுத்திய அறிஞர் ஒருவர் உண்டு.
1912 – இல் உருது மொழியில் வெளிவரத் தொடங்கிய அல்- ஹிலால் பத்திரிகை மிக வேகமாக சுதந்திரம் பற்றிய பொதுஜன அபிப்பிராத்தை உருவாக்கியது. அது புதிதாக உபதேசித்த சக்தி வாய்ந்த தேசியம்இமக்களைப் பெரிதும் கவர்ந்தது. பாமர மக்களிடையே புரட்சிகரமான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,295 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th July, 2009 இன்று அன்று ஊரில் பங்களா ஊரைச்சுற்றி நிலபுலங்கள்! டவுனில் கமிஷன்மண்டி டஜன்டஜனாய் வாகனங்கள்! பேங்கு லாக்கரில் பேல்பேலாய் நகைநட்டு! அந்தக் காலத்தில் அரசாண்ட மன்னருக்கு ஒப்பான சொத்துக்கள் ‘ஓடையடி சுலைமானுக்கு! அந்தச் செல்வந்தரின் அழகான பங்களா சோகத்தில் மூழ்கி சோர்ந்து கிடந்தது! மகன் மஹ்மூது மலைத்துபோய் நின்றான்! மக்கள்; பேரன்கள் மாடிவீட்டு உறவினர்கள் மண்டிக் கிடந்தார்கள்! மவுனமாய் அழுதார்கள்! எல்லா டாக்டர்களும் ‘இறைவன் விட்ட வழியென்று’ இங்கிதமாய்ச் சொல்லி இங்கனுப்பி விட்டார்கள்! ‘நேர எதிர்பார்ப்பில்’ நேரம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,207 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th July, 2009 ஆறாம் நம்பர்: தஃவத் தப்லீக்.
தஃவத் தப்லீக் என்பது உயர்தரமான அமல். இது நபிமார்கள் செய்துவந்த வேலை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நபிமார்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவற்றில் எவ்வித கூட்டலோ குறைத்தலோ மாற்றமோ இன்றி மக்களை அதன்பக்கம் அழைத்தார்கள். அதன் பிரகாரமே இறுதி நபியான எங்கள் முஹம்மது (ஸல்) அவர்களும் இஸ்லாமியப் பணி செய்து விட்டு மரணிக்கும் போது தனது உம்மத்தான எம்மிடம் அப்பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்கள். இது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,041 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st July, 2009 …மலாயில் நான் ஜப்பானியரிடம் கதியற்ற கைதியாக இருப்பதை விட இந்தியரின் உயிர், சொத்து, மானம் ஆகியவற்றைக்காப்பாற்ற கையில் துப்பாக்கியுடன் இருந்தால் என் நாட்டுக்கு மிக உபயோகமாக இருப்பேன் என்பதால் இந்திய தேசிய ராணுவத்தில இணைந்தேன். டெல்லி, செங்கோட்டை வழக்கு விசாரணையில் INA கேப்டன் ஷாநவாஸ்கான்.
என் பெயர் விடுதலை ! தேச விடுதலைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1922 – இல் சிந்து மாகாணம் மட்லி நகரில் ஒரு சிறுவன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியைத் தூண்டும் விதத்தில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,142 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd June, 2009 1987 – ல் சுறுசுறுப்பான எழுத்துலகப் பிரவேசம் . 89 -ல் வெளியூர்களிலிருந்து விழாக்களுக்கான அழைப்புகள்! மாவட்டத்துக்குள் மட்டுமே விழாக்களில் கலந்து கொள்ள முடியும் என்ற தொழில்சார்ந்த சூழல்! ஆனால் ஓர் எல்லையில் வெளிமாவட்டங்களுக்கும் சென்றாகவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. காரணம், விழாவுக்கு அழைத்தவர்கள் சமுதாய முன்னோடித் தலைவர்கள் அல்லது மிக நெருக்கமான வாசகர்கள்.
சமுதாய விழாக்களில் மறக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டங்கள் கூடுவது தஞ்சை மாவட்டத்து பள்ளிவாசல் திறப்பு விழாக்களில்தான். எனக்குக் கிடைத்த அத்தகைய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,029 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th June, 2009 எண்பதுகளின் கடைசிப் பகுதி. கதாசிரியனாகி – அங்கீகாரமும் பெற்று பரவலான வாசகப் பரப்பை எட்டியிருந்த நேரம். ஒரு நாளைக்கு நான்கு ஐந்து வாசகர் கடிதங்களாவது வரும். சில இதழ்களில் இருந்து வாசகர் கடிதங்கள் கட்டுக் கட்டாகவும் வந்து சேரும். வாசகர் கடிதங்கள் எந்த அளவுக்கு ஓர் எழுத்தாளனுக்கு உந்துவிசையாக உதவ முடியும் என்பதை அனுபவப் பூர்வமாக அறிந்து கொண்டிருந்த நேரம் அது!
ஆரம்பத்தில் கதைகளைப் பற்றி பாராட்டி எழுதிக்கொண்டிருந்த வாசகர்கள் ஒரு விசயத்தை ஒன்று சொன்னாற் போல . . . → தொடர்ந்து படிக்க..
|
|