தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,234 முறை படிக்கப்பட்டுள்ளது!

அந்தத் தோற்றம்! உரை லாவகம்! அத்துடன் ..

1987 – ல் சுறுசுறுப்பான எழுத்துலகப் பிரவேசம் . 89 -ல் வெளியூர்களிலிருந்து விழாக்களுக்கான அழைப்புகள்! மாவட்டத்துக்குள் மட்டுமே விழாக்களில் கலந்து கொள்ள முடியும் என்ற தொழில்சார்ந்த சூழல்! ஆனால் ஓர் எல்லையில் வெளிமாவட்டங்களுக்கும் சென்றாகவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. காரணம், விழாவுக்கு அழைத்தவர்கள் சமுதாய முன்னோடித் தலைவர்கள் அல்லது மிக நெருக்கமான வாசகர்கள்.

சமுதாய விழாக்களில் மறக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டங்கள் கூடுவது தஞ்சை மாவட்டத்து பள்ளிவாசல் திறப்பு விழாக்களில்தான். எனக்குக் கிடைத்த அத்தகைய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,102 முறை படிக்கப்பட்டுள்ளது!

கதையெல்லாம் விக்யாதுங்க தம்பி..

எண்பதுகளின் கடைசிப் பகுதி. கதாசிரியனாகி – அங்கீகாரமும் பெற்று பரவலான வாசகப் பரப்பை எட்டியிருந்த நேரம். ஒரு நாளைக்கு நான்கு ஐந்து வாசகர் கடிதங்களாவது வரும். சில இதழ்களில் இருந்து வாசகர் கடிதங்கள் கட்டுக் கட்டாகவும் வந்து சேரும். வாசகர் கடிதங்கள் எந்த அளவுக்கு ஓர் எழுத்தாளனுக்கு உந்துவிசையாக உதவ முடியும் என்பதை அனுபவப் பூர்வமாக அறிந்து கொண்டிருந்த நேரம் அது!

ஆரம்பத்தில் கதைகளைப் பற்றி பாராட்டி எழுதிக்கொண்டிருந்த வாசகர்கள் ஒரு விசயத்தை ஒன்று சொன்னாற் போல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,120 முறை படிக்கப்பட்டுள்ளது!

திருமண அறிவிப்பு 12-06-2009 K. செய்யது அப்துல் காதர் ரியாஸ் – A. நிஃமத் நிஷா

நாள்: 12-06-2009 மணமகன்: K. செய்யது அப்துல் காதர் ரியாஸ் மணமகள்: A. நிஃமத் நிஷா இடம்: ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் ஜும்ஆ பள்ளி, சித்தார்கோட்டை

ஜனாப் கிஸார் முகம்மது அவர்களின் புதல்வன் தீன்குலச்செல்வன் K. செய்யது அப்துல் காதர் ரியாஸ்

ஜனாப் அப்துல் காதர் அவர்களின் புதல்வி தீன்குலச்செல்வி A. நிஃமத் நிஷா

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,921 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….

மேலே சுட்டெரிக்கும் வெய்யில்! ஜனத்திரளின் அடர்த்தியில் வெப்பத்தின் தகிப்பு. பின்னால் வருபவர்களீன் உந்துதலில் முன்னால் செல்பவர்களுடன் மோதிக்கொண்டு எறும்பு ஊர்வதுபோல் நடைப் பயணம். இடுப்பில் ஒரு துண்டு. தலையில் சுமார் 10 -15 கிலோ எடைகொண்ட ஒரு பை. இரு கைகளையும் உயர்த்தி பையை உறுதியாகப் பிடித்துக் கொண்டதால் தான் கீழே விழுந்து விடுவதிலிருந்து காப்பாற்ற முடியும். கீழ்த்துண்டு மெல்ல அவிழ்ந்தால்கூட அதைக் கட்டிக்கொள்ள கையும் இல்லை. அதற்கு முண்டித் தள்ளும் கூட்டம் அவகாசமும் தரா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,605 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்

பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் 29 – இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.*

ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார். (* B.l Grover,S.grover,A New Look At Modern Indian History,P.426.)

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,734 முறை படிக்கப்பட்டுள்ளது!

சகோதர பாசம்

இன்று அன்று சக்தி உள்ளவரை சளைக்காமல் உழைத்ததனால் சத்தார் ராவுத்தருக்கு சொத்துக்கள் ஏராளம்! இரண்டே பிள்ளைகள் இருவருமே ஆண்மக்கள்! இருவருக்கு மிடையில் ஈராறு வருடங்கள்! பெரியவன் அமீர் பின்னவன் அன்வர் அலி! மனைவி மரியம் மௌத்தாகி விட்டதனால் அமீரின் அரவணைப்பில் அன்வரை விட்டுவிட்டு அத்தா சத்தாரும் அல்லாஹ்வின் அழைப்பேற்றார்! அண்ணன் அமீரும் அவன்மனைவி ஆஷிக்காவும் சின்னவன் அன்வரை சித்திரவதை செய்தார்கள்! பள்ளிக்குச் சென்றுவந்த பாலகனாம் அவனின் படிப்பை நிறுத்தி பலவேலையும் கொடுத்து அடித்துக் கண்டித்து அன்றாடம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,352 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெல்டன் மை பாய்!

1965 – ஆம் வருடம். சென்னை லொயோலா கல்லூரியில் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு தாவரவியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. அலுவலகப் பியூன் என் வகுப்பறைக்கு வந்து என் பெயரைச் சொல்லி பிரின்ஸிபால் அழைப்பதாகப் பேராசிரியர் அவர்களிடம் சொன்னார். லொயோலா மிகவும் கண்டிப்பான கல்லூரி. கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாடுகள்! லொயோலா மாணவர்களை “லொயோலோவின் அடிமைகள்” (ஸ்லேவ்ஸ் ஆஃப் லொயோலா) என்று பிற கல்லூரி மாணவர்கள் கேலி பேசுவதுண்டு. பிரின்ஸிபால் அறைக்கு அழைப்பு என்பது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,364 முறை படிக்கப்பட்டுள்ளது!

இதிலென்ன வெட்கம்?

திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது; திருமண நாளும் நெருங்கிவிட்டது. மணமகளின் அண்ணன் சில உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அஸர் தொழுகைக்காக ஒரு பள்ளியில் நுழைகிறான். அந்நகரின் அந்த மஹல்லாவில்தான் மணமகனின் வீடும் இருக்கிறது. தொழுது முடித்து, துஆ செய்துவிட்டுத் திரும்பும்போது முகத்துக்கெதிரில் மணமகனே நிற்கிறார்.ஸலாம் சொல்கிறார். பரஸ்பரம் கைகொடுத்துக் கொள்கிறார்கள். “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்கிறார் மணமகன்.

அவரது முகத்தில் தேங்கிக் கிடக்கும் சோகத்தை அவர் பெரும் முயற்சி செய்து பிரதிபலிக்கும் புன்னகையால் மறைத்துவிடமுடியவில்லை. பள்ளி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,747 முறை படிக்கப்பட்டுள்ளது!

நெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்!

ராமநாதபுரம் பாரதி நகரின் பள்ளிவாசலுக்குப் பின் அந்த பங்களா வீடு உள்ளது.குறிப்பிட்ட அந்த நாள் முழுவதும் அந்த வீட்டைச் சுற்றி ஜனத்திரள்!

அத்தனை பேரும் அழுகையும் கண்ணீருமாய் இருள் சூழ்ந்துவிட்ட நிலையிலும் ‘ஜனாஸா’வந்து சேரவில்லை. அப்பகுதியின் அத்தனை சமுதாயப் பிரமுகர்களும் சோகமே உருவாக நின்று அளவளாவிக்கொண்டு கடைசியாக அந்த இளைஞரின் ஜனாஸாவை – திருநெல்வேலியில் இறந்து போன அந்த குலக்கொழுந்தின் மரித்த உடலைச் சுமந்துவந்த வேன் வந்து சேர்ந்தது!

ஆஜானுபாகுவான – அழகும் கம்பீரமும் – அறிவுத் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,921 முறை படிக்கப்பட்டுள்ளது!

திருமண அறிவிப்பு 15-05-2009 முகம்மது சுல்தான் ஹாரிஸ் – கதீஜா பானு

நாள்: 15-5-2009 மணமகன்: முகம்மது சுல்தான் ஹாரிஸ் மணமகள்: கதீஜா பானு இடம்: சின்னப் பள்ளிவாசல், சித்தார்கோட்டை

VNK சுல்தான் அவர்களின் பேரனும் நிஜாம் PET – ரஹ்ஸானா பேகம் ஆகியோரின் தீன்குலச் செல்வன் முகம்மது சுல்தான் ஹாரிஸ் மற்றும் மண்டபம் முஹம்மது அலி ஜின்னா – ரைஹானத்துல் பதவியா அவர்களின் தீன்குலச்செல்வி கதீஜா பானு

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,403 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்

முதல் மக்கள் இயக்கம்

காந்திஜியின் வருகைக்குப் பின்னர்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு வெகுஜன இயக்கமாக – மக்கள் இயக்கமாக மாறியது. இதற்கு முன்னோடியாக 19-ஆம் நூற்றாண்டில் சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பெரய்ஸி இயக்கம்(Farizis Movement) என்ற மக்கள் இயக்கததைக் கூட்டியவர் கிழக்கு வங்காளத்தில் வாழ்ந்த ஹாஜி ஷரியத்துல்லா (Haji.Shariathullah) ஆவார்.

வங்காளத்தின் வடக்கு மாவட்டங்களில் 1820-களில் கரம்ஷா (Karam Shah) வும் அவர் மகன் திப்பு (Thipu)வும் நடத்திய ஆன்மிக – அரசியல் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,148 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள்ளதைக்கொண்டு

இன்று அன்று “பாத்துச்செய் பஷீரு! பத்து நாள்ல திருப்பித் தாரேன்” பரக்கத்து கெஞ்சினான் பஷீர் கோபித்தான். “என்னடா பரக்கத்து என்னதான் செலவுனக்கு? சின்னக் குடும்பம் சீரான வியாபாரம்! சொந்த வீடு; சொத்துப் பத்தும் உண்டுதான்! கடன் கடன்னு கண்டபடி வாங்கினா கட்டுக்குள் நிக்குமோ? கடைசியில் சிரமமாச்சே?” “அப்புறமாப் பேசலாம் அதப்பத்தி பஷீரு! இப்ப எனக்குத்தேவை இருபத்தி ரெண்டாயிரம்! மானப் பிரச்சினை மனசுவச்சுத் தந்துடுப்பா” “இருந்தாத் தந்துடுவேன் இப்ப இல்லை; எனை நம்பு!” கறாராய்ச் சொல்லிவிட்டான் கான்ட்ராக்டர் . . . → தொடர்ந்து படிக்க..