தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,780 முறை படிக்கப்பட்டுள்ளது!

கழிவுத்தொட்டியில் பேக்டிசெம்!

கழிவுத்தொட்டியில் (செப்டிக்டேங்க்), ‘ஆக்டிசெம்’ என்ற நுண்ணுயிர்க் கலவையைப் போட்டால் துர்நாற்றம் வீசாது.

மனித மலம் சேகரமாகும் கழிவுத்தொட்டியில் (செப்டிக்டேங்க்), ‘ஆக்டிசெம்’ என்ற நுண்ணுயிர்க் கலவையைப் போட்டால் துர்நாற்றம் வீசாது. அதுமட்டுமல்ல… அந்தத் தொட்டியிலிருக்கும் நீரை செடிகளுக்குக்கூடப் பயன்படுத்தலாம் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா… விளக்கம் தேவை?” என்று தர்மபுரி மாவட்டம், பாளையத்தானூர், ராமு. வள்ளுவர் கேட்டுள்ளார். சுற்றுச்சூழல் ஆய்வாளர் பி. சதீஷ் இக்கேள்விக்குப் பதில் சொல்கிறார்.

“ஆக்டிசெம் என்பது ஆஸ்திரேலியா நாட்டில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,224 முறை படிக்கப்பட்டுள்ளது!

இனி எல்லாமே டேப்ளட் பிசி

லேப்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை டேப்ளட் பிசிக்கள் பிடித்து வருகின்றன. குறிப்பாக, வர்த்தகப் பணிகள் மற்றும் நிர்வாக வேலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவர் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, டேப்ளட் பிசிக்களை இயக்கத் தொடங்கி வருகின்றனர். இந்த மாற்றம் தொடர்ந்து பெருகி வருகிறது. பன்னாட்டளவில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எதனால் லேப்டாப் இடத்தில் டேப்ளட் பிசிக்களை விரும்புகிறீர்கள் என்று பலரைக் கேட்டதில், கீழ்க்காணும் சிறப்பியல்புகளை அவர்கள் குறிப்பிட்டுக் கூறுகின்றனர்.

மின்சக்தி பயன்பாடு: இதனைப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,716 முறை படிக்கப்பட்டுள்ளது!

உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 13

நம்மில் பலருக்கு அடுத்தவர்கள் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதாக ஒரு மனத்தாங்கல் இருக்கிறது. அதனால் நமக்கு உரிய கௌரவம் தராமல் இருப்பதாக வருத்தமும் இருக்கிறது. ஆனால் உண்மையில் மிகவும் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் அடுத்தவர் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதோ, நமக்குரிய கௌரவம் தராமல் இருப்பதோ அல்ல. நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு, நம்மை நாமே முழுமையாக கௌரவிக்கத் தவறி விடுவது தான்.

ஒவ்வொரு மனிதனும் தன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,058 முறை படிக்கப்பட்டுள்ளது!

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு.

அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,185 முறை படிக்கப்பட்டுள்ளது!

அஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை

இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி

ஏப்ரல் மாதம். பெங்களூர் ஐ.ஐ.எஸ்-சில் இருந்த அந்தப் பெண்ணின் கண்களில் பட்டன குல்மொஹர் பூக்கள். முதுநிலை பொறியியல் வகுப்பில் இருந்த அந்த ஒரே பெண் தன் சக மாணவர்களுக்கு சளைத்தவரில்லை. சொல்லப் போனால் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டும் இருந்தார்.

அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் வந்திருந்தது. அமெரிக்கக் கனவுகள் அரும்பியிருந்த நேரம்.

கல்லூரி வளாக அறிவிப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 11,496 முறை படிக்கப்பட்டுள்ளது!

குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!

திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

உலகில் ஆண்களால் 40 சதவிகிதமும், பெண்களால் 40 சதவிகிதமும், மற்ற காரணங்களால் 20 சதவிகிதமும் குழந்தைப் பேறு இல்லாமை ஏற்படுகிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும், குழந்தை இல்லாமையைப் போக்கும் அளவுக்கு நவீன சிகிச்சைகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சாபம் அல்ல!

குழந்தை இல்லாமைக்கு முற்பிறவியில் செய்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,356 முறை படிக்கப்பட்டுள்ளது!

எழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே!

நட்பினால் உயர்ந்தோர் பலர் இருக்க, அதனால் தாழ்ந்தோரும் அதிகம் உள்ளனர். நட்பு என்றால் என்ன என்பதை புரிவதுதான் இங்கே முக்கியம்.

“உன் நண்பனைக் காட்டு நீ யாரென்று சொல்கிறேன்”

“நல்ல நண்பர்களைப் பெற்றவன் இவ்வுலகையே வெல்வான்”

“கூடா நட்பு கேடாய் முடியும்”

“நட்பு அனைத்து எல்லைகளையும் கடந்த ஒன்று”

போன்ற பலவித புகழ்பெற்ற பொன்மொழிகள் நட்பைக் குறித்து சொல்லப்பட்டவை.

இந்த உலகின் சக்தி வாய்ந்த அம்சங்களில் ஒன்று நட்பு. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,582 முறை படிக்கப்பட்டுள்ளது!

மனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்

இப்பாரினில் வந்து பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளை நீடித்துக் கொள்ளவே விரும்புகின்றான். உலகத்தில் அதிகமான காலங்கள் வாழவே ஆசைப்படுகின்றான். அவ்வடிப்படையில் வாழும் நாம் ஒவ்வொருவரும் இக்கட்டுரையை கவனமாகவும் மிகவும் ஆர்வத்துடனும் வாசித்து இங்கு கூறப்பட்டுள்ள விடயங்களை அணு அணுவாக தானும் பின்பற்றி நடப்பதுடன், மற்றவர்களுக்கும் இதுபற்றி எடுத்துக்கூறியும் ஆலோசனை வழங்கியும் உதவி செய்வோம்.

தற்பொழுது மனித உயிர்களை பலி கொள்ளும் அனேகமான காரணிகளில் முக்கிய 10 காரணிகளை என இனங்கண்டுள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,070 முறை படிக்கப்பட்டுள்ளது!

அறிஞர்கள் போற்றும் பெருமானார்

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். – ஜவஹர்லால் நேரு

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,620 முறை படிக்கப்பட்டுள்ளது!

நீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்

கழுத்தில் கறுத்த வெல்வெட் தோல் நீரிழிவிற்கு கட்டியம் கூறுகிறதா? (Acanthosis Nigricans)

அழகான இளம் பெண்ணான அவள் சற்றுக் குண்டாவனவளும் கூட. கழுத்து, கைகள், நெஞ்சு, வயிறு எங்கும் தாராளமான கொழுப்பு விளைச்சல் கண்டிருந்தது. எனது பார்வை அவளது முகத்தை விட்டு விலகி கழுத்தில் மேய்ந்தது.

எனது பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டதை அவள் வாய் திறந்து பேச ஆரம்பித்ததும் நோயை உறுதிபடுத்த முடிந்தது.

‘ஓம் டொக்டர்… இது கொஞ்சம் அசிங்கமாகக் கிடக்குத்தான். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,068 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 11

ஒரு நகரத்தில் ஒரு வணிகர் இருந்தார். அவர் படிப்பறிவில்லாதவர். அவர் கடையில் விற்காத பொருள்கள் குறைவு. எல்லாவற்றையும் தன் கடையில் வாங்கி வைத்திருந்து விற்பார். சில பொருட்கள் அவர் கடையில் மட்டுமே கிடைக்கும் என்கிற அளவுக்கு பிரபலமாக இருந்தானர். பல வருடங்களாக வெற்றிகரமாக வியாபாரம் நடத்தி வந்த அவர் உடல்நிலை தளர ஆரம்பித்தது. கண்பார்வை மங்க ஆரம்பித்தது. காதுகளும் சரியாக கேட்காமல் போகவே தன் தொழிலை மகனிடம் ஒப்படைக்க . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 19,440 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை உருளை ரெசிபி

உருளைக்கிழங்கு அல்வா

தேவையானவை: தோல் சீவி பெரிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு – ஒரு கப், சர்க்கரை – ஒன்றரை கப், நெய், பால் – அரை கப், ஜவ்வரிசி பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன், மில்க் மெய்டு – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், கேசரி கலர் பவுடர் – ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரித் துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். . . . → தொடர்ந்து படிக்க..