|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,390 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th October, 2011 குடும்ப உறவு என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனிதமிக்க உறவாகும். அதில் சில சந்தர்ப்பங்களில் சலசலப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், அதன் மூலம் இறைவன் உறவின் வலிமையை மேலும் பலப்படுத்தி விடுகின்றான். ஆனால் நம்மில் சிலர் குடும்ப உறவில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளை பெரிதுபடுத்தி பல்லாண்டுகள் நீடித்து அப்புனித உறவை ஒரே நாளில் சிதைத்து விடுகின்றார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
ஒரு ஆண் தனது ஆண்மையை இழந்து விட்டாலும் பெண் அவனுடன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,993 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th October, 2011 ‘அரசுப் பள்ளி’ என்றால் நம்மையும் அறியாமல் ஓர் அலட்சிய மனோபாவம் மனதுக்குள் உட்கார்ந்துகொள்ளும். தேர்ச்சி பெறாத மாணவர்கள், பொறுப்பற்ற ஆசிரியர்கள், அடிப்படை உள் கட்டமைப்புகள் இல்லாத பள்ளிகள் – இவைதான், அரசுப் பள்ளியின் இலக்கணங்கள் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், நீங்கள் உடனடியாக ஆரணி, சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு விசிட் அடிப்பது நல்லது!
இந்த வருடம் தன் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் இப் பள்ளி, 1911-ல் துவங்கப்பட்டபோது, இதன் பெயர், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,464 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th October, 2011 “சுட்டால் பொன் சிவக்கும், சுடாமல் கண் சிவந்தேன்” என்று நம் தமிழ் சினிமா பாடல்கள் பண்பலை வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில் உலகம் முழுவதும் உள்ள வளிமண்டல விஞ்ஞானிகள் புவி வெப்பம் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருப்பதை பற்றி பதட்டத்துடனும் பயத்துடனும் விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அனைத்து நாடுகளுக்கிடையேயான தட்பவெப்ப மாறுதல்களுக்கான அமைப்பு (Inter Governmental Panel on Climate Change -IPCC) தன்னுடைய நான்காவது அறிக்கையில் ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் பிளவு, கடல் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,162 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th October, 2011 ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்வோம்! ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!!
உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள் – பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,794 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th October, 2011 வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 9
சலிப்படைந்தால் சாதனை இல்லை!
ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் எந்த சிறந்த சாதனையும் நிகழ்ந்து விடுவதில்லை. சாதனைகளைப் பாராட்டுகின்ற மனிதர்கள் சாதித்தவர்களின் திறமைகளைத் தான் பெரும்பாலும் சாதனைகளின் காரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கென சலிக்காமல் உழைத்த உழைப்பை அதிகமாக யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனென்றால் பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் போது தான் அவர்களைக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,102 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th October, 2011 சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை. மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி இருக்கும் 10.4 கிலோ எடையுள்ள “எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி18 ராக்கெட்டுடன் புதன்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.
“எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பற்றி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ராகவ் மூர்த்தி வழிகாட்டுதலின் படி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 7 துறைகளைச் சேர்ந்த 52 மாணவர்கள், கடந்த 2 வருடங்களாகச் செயற்கைக்கோள் உருவாக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,501 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th October, 2011 “மகள் என்னைக் கனடாவுக்கு வரச் சொல்லுறா. இந்தச் சளிக்காரி நான் அங்கை போய் என்ன செய்யிறது”
மூக்கால் சளி சிந்தவில்லை.
வார்த்தைகளில் நம்பிக்கையீனம் ஓட ஓடச் சிந்தியது. அழாத குறையாகச் சொன்னார் அந்த அம்மணி.
இதே அம்மணி சென்ற மாதம் வந்தபோது,
“வாழ வழியே தெரியவில்லை. தனிய கிடந்து மாயிறன். கூப்பிட்ட குரலுக்கு ஏனென்ன யாருமில்லை. என்ன வாழ்க்கை” எனச் சலித்துக் கொண்டார்.
தனியே வாழ்வது சிரமம் எனக் கவலைப்பட்ட அதே அம்மா இப்பொழுது மகளுடன் வாழச் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,787 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th October, 2011 ஸ்ரீவத்ஸன் மெடிக்கல் ரிப்போர்ட்டில் இருந்த, உச்சரிக்கக் கஷ்டமான அந்த வார்த்தையை வெறித்துப் பார்த்தான். “Lymphangioleiomyomatosis”. சிவப்பு எழுத்துக்களில் இருந்த அந்த வார்த்தையில் எமன் தெரிந்தான். அவன் மனைவி வைஷ்ணவியை அந்த வார்த்தை மூலமாக எமன் நெருங்கிக் கொண்டிருந்தான்.
டாக்டர் அவனுக்கு அந்த வியாதியைப் பற்றி விளக்க முயன்றது அரையும் குறையுமாகத் தான் அவன் மூளைக்கு எட்டியது. “…இதை LAMன்னு சுருக்கமா சொல்வாங்க. இதுக்கு இது வரைக்கும் சரியான மருந்து கண்டுபிடிக்கலை. இது ஒரு அபூர்வமான வியாதி. இது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,935 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th October, 2011 மருந்து இல்லாமல் சிகிச்சை செய்யும் 5 `மருத்துவர்கள்’ நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானவர்கள். அவர்கள்…
மூச்சை இழுத்து விடுங்கள் என்றுதான் இந்த டாக்டரும் கூறுகிறார். அடுத்த நிமிடம் இவரது சிகிச்சையால் புத்துணர்வு அடைகிறார்கள் அனைவரும். சுத்தமான காற்றுதான் நம்மை நலமாக வைக்கும் முதல் இயற்கை மருத்துவர். காற்று உடலுக்குத் தரும் நன்மைகள் பல. காற்றுதான் உடலின் எரிபொருள். நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகவும், செல்கள் வளர்சிதை மாற்றம் அடையவும் காற்று தேவை. ரத்த ஓட்டம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,306 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th October, 2011 திருமறை நபிமொழி தமிழாக்கப் பணி – ஒரு வரலாற்றுப் பார்வை!
முன்னுரை
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு மொழிபெயர்ப்புத் துறை சிறப்பான பங்காற்றியிருப்பதை நன்றியுடன் நினைவுகூர வேண்டும். அதிலும் குறிப்பாக, அரபி மொழியிலிருந்து தமிழுக்குக் கிடைத்துள்ள அரிய கருவூலங்கள் நினைத்துப் போற்றத் தக்கவை ஆகும்.
அவை இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்குவதுடன், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை முறைப்படுத்துவதிலும், இஸ்லாமிய வரையறைக் குட்பட்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை வழிநடத்துவதிலும் பெரும் பங்காற்றி வருகின்றன.
பொதுவான தமிழ் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,281 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th October, 2011 கழிப்பறை வாடை, நாப்தலின், பினாயில், டாய்லெட் சுத்தம் செய்யும் அமிலம், சோடா உப்பு, அரிசி தவிடு, மழையில் தோன்றும் மண் வாசனை போன்ற பல விஷயங்கள் மூக்கின் ஒவ்வாமைக்கு காரணமாக அமைகின்றன. மூக்கு என்பது சுவாசத்தை சீராக விடுவதற்கு மட்டுமல்ல… மணத்தையும் முகர்ந்து உணர்ந்து கொள்ளத்தான். மோப்ப நரம்பானது மணத்தை மூளைக்கு உணர்த்துகிறது. மூளையின் கட்டுப்பாட்டை மீறி, கபால அறைகளின் சதைப்பகுதிகள் தன்னிச்சையாக இயங்குவதே மூக்கடைப்பாகும். மூக்கின் உட்புறம் இரண்டு பக்க கபால அறைகளின் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,235 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th October, 2011 உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா? கண்டுபிடிக்க ஒரு சுய பரிசோதனை
வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே…
உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது?
அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்! ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீகரிக்கும் தோற்றமுடன் எனது உடலை வைத்துக் கொள்ள விரும்புகிறேன். இ. மக்கள் . . . → தொடர்ந்து படிக்க..
|
|