|
|
அச்செடுக்க
3,668 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd September, 2011 சரியாகப் படியுங்கள்!
”கற்க கசடற” என்னும் வள்ளுவன் அறிவுரையின் படி எதையும் குறையில்லாமல், சரியாகப் படிப்பது மிக முக்கியம். ஆயிரம் பேரைக் கொல்வான் அரை வைத்தியன் என்பார்கள். எதையும் அரைகுறையாய் கற்றுக் கொள்வதில் அனர்த்தமே விளையும்.
குழந்தை எழுதப் பழக ஆரம்பிக்கும் போது பென்சிலைத் தவறாகப் பிடிப்பது இயல்பு. எழுத்துக்களைத் தவறாக ஒழுங்கற்ற முறையில் எழுதுவதும் இயல்பு. அந்த சமயங்களில் பென்சிலை சரியாகப் பிடிப்பதும், ஒழுங்காக எழுதுவதுமே அதற்குக் கஷ்டமான காரியம். . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
12,360 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd September, 2011 ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
கம்ப்யூட்டரில் இருப்பது போல மனிதனுக்கும் ‘மெமரி சிப்ஸ்’கள் உள்ளன. பெரும்பாலும் இந்த நினைவுக் காப்பங்களின் வலிமையும் எண்ணிக்கையும்
பரப்பரைத்தன்மை உடலின் ஊட்டம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன. மாவுச்சத்து வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் தாது உப்புக்கள் முதலியவையே இந்த ஊட்டத்தை நிர்ணயிக்கவல்லவை.
மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,082 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st September, 2011 சரியானதைப் படியுங்கள்
மகாத்மா காந்தி சிறு வயதில் பார்த்த ஹரிச்சந்திரன் நாடகம் அவர் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவர் பல முறை சொல்லி இருக்கிறார். மன்னனாக இருந்த ஹரிச்சந்திரன் அப்பழுக்கற்ற சத்தியவானாக இருந்ததால் சத்ய ஹரிச்சந்திரன் என்றழைக்கப்பட்டவன். அவனைப் பொய் சொல்ல வைக்கிறேன் என்று சூளுரைத்து விட்டு வந்த விசுவாமித்திர முனிவர் செய்த சூழ்ச்சியால் அவன் நாட்டை இழந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து இடுகாட்டில் வெட்டியானாக மாறி, மகன் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
8,210 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st September, 2011 ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்பம் என்பது மிகவும் சந்தோஷமான காலம் ஆகும். கர்ப்ப காலத்தில் நல்ல சமச்சீரான உணவை பராமரிப்பது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் மிகவும் முக்கியமாகும். நீங்கள் இவ்வாறு செய்ய உங்களுக்கு உதவ இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு வேண்டிய அளவு சாப்பிடுங்கள். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள், நோயாளி அல்ல என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எனவே இந்த ஒன்பது மாதங்களை அனுபவித்து மகிழுங்கள்.
நீங்கள் அசௌகரியமாக . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
4,261 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st August, 2011 சாப்பிடுவதைப் பாருங்கள்.. நல்ல மாப்பிள்ளை கிடைப்பார்..’
உணவு குறித்த ஒருவரின் மனோபாவம், சாப்பிடும் விதத்தை கவனிப்பதன் மூலம் அவரின் நடத்தை, குணாதிசயங்களை கணித்திட முடியும் என்கிறார்கள், வல்லுனர்கள். `சாப்பாட்டு மேஜையில் குளறுபடியானவராகவும், பிரச்சினைக்குரியவராகவும் நடந்து கொள்பவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார்’ என்கிறார், புகழ்பெற்ற மேலை நாட்டு எழுத்தாளர் ஒருவர். `உணவைப் பெறுவது, சாப்பிடுவது போன்ற விஷயங்களில் சீடர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்தே அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை அறிந்து, தனக்கான சீடர்களை அந்த . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,240 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th August, 2011 கண்கள். முட்டை பொரிந்து தாயின் அரவணைப்பில் பயந்து திறக்கும் குஞ்சுகளின் மெல்லிய கண்கள். உலகின் முடிவில்லா வண்ணக் காட்சிகளை குழம்பிய வியப்புடன் கண்டு வளரும் சிறிய கண்கள். தெரிந்த முகத்தை அடையாளம் கண்டு பழகிக்கொள்ளும் குழந்தைகளின் அழகிய கண்கள். உணர்ச்சிகளின் மாறுபாட்டிக்கேற்ப நிலை கொள்ளும் மனிதர்களின் பொருள் பொதிந்த கண்கள். மனதின் ஓட்டத்தை இனம் காட்டி மௌன மொழி பேசும் வித்தகக் கண்கள். நவீன வாழ்க்கை நுகரப்படுவதற்கு அச்சாணியாக இருக்கும் இமை மூடாத . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
5,959 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th August, 2011 பரபரப்பான இன்றைய கால கட்டத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு சூழலில் மன அழுத்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். பணிச்சூழல், வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றால் மன அழுத்தம் தாக்குவதால் பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் அவர்களின் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,171 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th August, 2011 ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,982 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th August, 2011 உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை. பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை. காலையில் எழுந்து டீ / காஃபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை. புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை. இவருக்குத்தான் இனிய பெருநாள்…! தன் ஆணவத்தை அடக்கி அலட்சியப் போக்கை அழித்து பகலில் பட்டினி கிடந்து இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு பசி, தாகத்தால் இச்சையை வென்று இறை கடமைகளை நிறைவேற்றி தானத்தால் ஏழைகளின் கண்களை . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,339 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th August, 2011 பொதுவாக ஓர் அரசாங்கம் பணப் பற்றாக்குறையை மூன்று வழிகளில் சமாளிக்கும், ஒன்று வரி அதிகரிப்ப, இரண்டு செலவுகளை குறைப்பது: மூன்று கடன்நெருக்கடியே சமாளிக்க இரண்டாவது வழியைத் தேர்ந்ததெடுத்திருக்கிறது. மூன்றவது வழியையும் 1950 தொடங்கி 1980 வரையிலான 30 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவின் நிதி நிலவரம் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அதற்குப் பிறகு வருமானத்தை மீறிய செலவுகள். செலவுகளைச் சந்திக்கக் கூடுதல் கடன்: கூடுதல் கடனை அடைக்க வட்டியுடன் கடன் வட்டியை அடைக்கக் கடன் பிறகு கூடுதல் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,745 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th August, 2011 உடையவர் காணும் உடல் உறுப்பை; அந்நியர் காண்பது சரியா; அரித்தெடுக்கும் பார்வைக்காகத் திரையிடச் சொல்வதுப் பிழையா!
விழிக் காணும் சருமம் விரல் தொடத் தூண்டாதா; உணர்ச்சிக்கு உரம் இட்டப் பின்னேப் படித்தாண்டத் தோன்றாதா!
பார்வை மட்டும்தானே; அழகைப் பார்க்கட்டும்; என விழிகளுக்கு விருந்து வைப்பது முறையா;
பசிக்கும் பார்வைக்கு அணைப்போடச் சொல்லித் திரைப்போடச் சொல்வது சிறையா!
மரத்துப்போன மனதினால் மரித்துப்போன வெட்கம்; கறுத்துப் போன உள்ளத்தை மீட்டெடுப்பதில் என்ன தயக்கம்!
மற்றவர் அணிந்தால் வாய் மணக்க உரைக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,614 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th August, 2011 மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.
நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு (sports . . . → தொடர்ந்து படிக்க..
|
|