Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,859 முறை படிக்கப்பட்டுள்ளது!

குப்பை போடலாமா?

இறைவா! உண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்; தின்னவாயும்; விழுங்க நாவும்; வைத்தாய்! ஆனால்!…. நாங்கள்…. தோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம்! பழத்தை இங்கே! நாவின் ருசியில் விரல்கள் மறந்தன! அதனால்…………. சாலையில் நடந்த சடுகுடு கிழவர் வைத்தார் காலை! நேரமும் காலை! வாழையின் தோலோ கிழவரைக் கண்டதா? வழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை! அவரோ! தாளாக் கால்வலி தன்னை வாட்ட வைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில் பழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார்! முன்னம் கால்வலி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,010 முறை படிக்கப்பட்டுள்ளது!

பயணித்துத்தான் பார்க்கலாமே! கவிதை

படகுகள் காத்திருக்கின்றன கரையோர கனவுகளை கலைத்து விட்டு பயணத்தை துவக்கு முன் பற்றிய பயமேன்?

படகுகள் காத்திருக்கின்றன கரை சேர்க்கும் கடமையுடன் அசைந்து அசைந்து உனை அழைக்கையில் அச்சமேன்?

படகுகள் காத்திருக்கின்றன ஒருவேளை உன் துயர் தீரலாம் ஒருக்கால் உன் பாரம் குறையலாம் ஏறிச் சென்றால் ஏற்றம் கிடைக்கலாம் ஏனில்லை நம்பிக்கை, எதற்கிந்த தயக்கம்?

படகுகள் காத்திருக்கின்றன உபயோகிக்க கற்றுக் கொள் உதறி விட்டால் உன் பயணம்தான் ரத்து. மற்றபடி படகுகள் மற்றொருவருக்காய் பயணிக்கும்

அதனால் பயணித்துத்தான் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,973 முறை படிக்கப்பட்டுள்ளது!

வேரை மறந்த விழுதே … கவிதை

உன்னில் என்றும் தன்னைக் கண்டனள் தன்னில் அதிகம் உன்னை உயர்த்தினள் கண்ணே மணியே பொன்னே என்று விண்வரை உன்னை வைத்தே போற்றினள்.

ஊட்டிய பாலுக்கு விலை வைத்ததில்லை கொட்டிய பாசத்தை கணக்கிட்டதில்லை நீட்டிய போதுன் விரல் வாசலை நோக்கி தீட்டிய கத்தியில் குத்தவள் உணர்ந்தனள்.

தனியாய் பயணம் கிளம்பிய போதும் தவியாய் அவள்மனம் தவித்திட்ட போதும் விதியாய் எண்ணி நொந்தனள் தவிர சதியாய் கண்டுனை சபித்திட நினைத்திலள்.

தேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ? பார்வைகள் மாறியே பாசமும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,652 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்றங்கள் – கவிதை

கருவறையில் இருக்கையிலே இருட்டறை தான் என்றாலும் உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை. வெளிச்சமும் பிடிக்கவில்லை வெளியுலகம் வருவதற்கோ துளியளவும் விருப்பமில்லை. உள்ளேயே இருப்பதற்கா கருவாய் நீ உருவானாய் என்றே பரிகசித்தே படைத்தவன் பாரினில் பிறக்க வைத்தான்.

அழுதே நாம் பிறந்தோம் பாதுகாப்பை இழந்தே நாம் தவித்தோம். பிறந்தது இழப்பல்ல பெற்றது ஒரு பேருலகம் என்றே பிறகுணர்ந்தோம். சிரிக்கவும் பழகிக் கொண்டோம் உறவுகளை நாம் பெற்றோம் நண்பர்களைக் கண்டெடுத்தோம் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.

ஒன்றை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 10,987 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுத்தம் சிந்திப்போம்!

இறைவா!

உண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்;

தின்ன வாயும்; விழுங்க நாவும் வைத்தாய்!

ஆனால்…! நாங்கள்…!!

தோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம்!

பழத்தை இங்கே!

நாவின் ருசியில் விரல்கள் மறந்தன!

அதனால்…

சாலையில் நடந்த சடுகுடு கிழவர்

வைத்தார் காலை! நேரமும் காலை!

வாழையின் தோலோ கிழவரைக் கண்டதா?

வழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை!

அவரோ!

தாளாக் கால்வலி தன்னனை வாட்ட

வைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில்

பழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார் !

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,901 முறை படிக்கப்பட்டுள்ளது!

தண்ணீர்!! தண்ணீர்!! தண்ணீர்!!

நீ அதிசயம் மட்டுமல்ல … நீ ஆச்சரியமான ஆசான் …. உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே …. உன் பாகுபாடில்லாத அணுகு முறையால் நீ போகும், நிற்கும், நடக்கும், ஓடும் இடமெல்லாம் சுகமே ….

நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை அதனால் நீ தளர்வதுமில்லை பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும் உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ….

சுத்த தங்கமாக நீ வலம் வந்து மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும் நீ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,027 முறை படிக்கப்பட்டுள்ளது!

யதார்த்த மயக்கம்! – கவிதை

படுப்பதுவோ… போர்த்துவதுவோ… கண்ணடைப்பதுவோ அல்ல உறக்கம்,நடந்ததுவும்… நடப்பதுவும்… நடக்க இருப்பதுவும்- என நர்த்தனமாடும் மனச் சலனங்கள் ஓய்வதே… உறக்கம்!

திறந்த கண்களும்… பரந்த பார்வையும்… உரத்த நோக்கும் அல்ல விழிப்பு,

பிறர் வலி உணர்தலும்… உணர்ந்து நீக்கலும்… நீக்கி இருத்தலுமே விழிப்பு!

காண்பதும்… கேட்பதும்… நுகர்தலும்… மூச்சிழுத்து விடுவதும் அல்ல வாழ்க்கை

நினைப்பதும்… செய்வதும்… செய்ததை உலகம் நினைத்திருக்கச் செய்வதுமே வாழ்க்கை!

உயிர் கழிதலும்… உணர்வழிதலும்… மெய் வீழ்தலும்… அல்ல மரணம்,

உயிர்களுக்கு உதவாமல்… இல்லாமலிருத்தல்போல்… . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,480 முறை படிக்கப்பட்டுள்ளது!

பறக்க எத்தனிக்காத பறவை

பறக்க எத்தனிக்காத பறவை திண்ணையில் எனது கவிதைதானும் பறக்க இயலும் என்பதை மறந்தே போனது அது.இறக்கை என்ற ஒன்றை எதற்கென நினைத்து விரித்துக்கூட பார்க்கவில்லை அதுகிடைத்தவற்றைக் கிளறிக்கொண்டிருப்பதிலேயே சுகம் கொண்டது அது.பாதுகாப்பான சூழலில் இருப்பதாகக் கருதிக்கொண்டு நாட்களைக் கடத்துவதிலேயே மரத்துப்போனது அது.

சோம்பிக்கிடப்பதே சுகம் எனக்கொண்டது அது.

கூண்டு விட்டுக் கூண்டு செல்லும் இட மாற்றங்களை மறுப்பேதும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டது அது.

கால்கள் உடைந்தும் சிறகுகள் முறிந்ததுமான தோழி தோழர்களைக் கொண்டதுமாக அங்குமிங்கும் அலைந்து கொண்டேயிருந்தது . . . → தொடர்ந்து படிக்க..