Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2025
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,317 முறை படிக்கப்பட்டுள்ளது!

நம்பிக்கையின் மறுபெயர்!

அழகிய தோற்றம், அபாரத் திறமை, நண்பர்களிடமும் எதிரிகளிடமும் காட்டிய பரிவு, வீரம் ஆகியவற்றில் அலெக்சாண்டருக்கு இணையாக உலகில் இன்னொருவர் பிறக்கவில்லை என்றே சரித்திரம் சத்தமாக கூறுகிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் தெரிந்து வைத்திருந்த உலக நிலத்தின் பெரும் பகுதியை 9 ஆண்டுகளிலேயே வெற்றி கொண்டவர் அலெக்சாண்டர். கிரீசில் இருந்து இந்தியா வரை அவரது பேரரசு பரவி இருந்தது. அவர் தோற்றுவித்த பேரரசு அவருடனேயே முடிந்து போனது. ஆனால், அவர் உருவாக்கிய சுமார் 70 நகரங்கள் இன்றும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,728 முறை படிக்கப்பட்டுள்ளது!

நாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள்

நமது நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப்பறக்கும் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி, ஒரு விழாவில் மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்களை விளக்கினார். அவை…

1. பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்

உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதேபோல மிகப்பெரிய சவாலைச் சந்திக்கும் போது, நீங்கள் அதைவிட்டு ஓடிவிட நினைக்கலாம். அல்லது பிரச்சினையை மற்றவர்களிடம் தள்ளிவிட நினைக்கலாம். அல்லது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,429 முறை படிக்கப்பட்டுள்ளது!

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்!

வணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

இஸ்லாத்தின் பார்வையில் அனைத்து வணக்க வழிபாடுகளையும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யவேண்டும். மனிதன் உள்ளத்தினால் செய்யக் கூடிய மிக முக்கியமான வணக்கங்களில் ஒன்றுதான் இறைவன் மீது தவக்குல் வைத்தல். இறைவனை சார்ந்திருத்தல் என்ற பொருளை உடையது. தவக்குல் என்பது அல்லாஹ்வை தனது உள்ளத்தினால் பூரணமாக உண்மைப்படுத்தி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,642 முறை படிக்கப்பட்டுள்ளது!

பகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக

நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டுதல்களில் சில:

வெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும். எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிகரில்லாத ஆலோசனைகளை நல்க முடியும். படித்த விஷயங்களை நிறுவனத்தில் எல்லோரும் எல்லோரோடும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள். சரியான ஆட்களை சரியான பொறுப்புகளில் அமர்த்துங்கள். திட்டமிடுதலின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,429 முறை படிக்கப்பட்டுள்ளது!

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,533 முறை படிக்கப்பட்டுள்ளது!

கைகள், கால்கள் இல்லை – கவலையும் இல்லை

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை – ஒரு உண்மைக் கதை- நவின்

எனது பெயர் நிக் வியூஜிசிக். இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,427 முறை படிக்கப்பட்டுள்ளது!

வானமே எல்லை !

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும்.

மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும்.அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே . . . → தொடர்ந்து படிக்க..