Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,257 முறை படிக்கப்பட்டுள்ளது!

தமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. எந்த ஒரு தனிக்கட்சியும் தனித்துப் போட்டியிடும் தைரியத்தில் இல்லை என்பது, ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறி அல்ல. இருந்தாலும், மத்தியிலாகட்டும் அல்லது மாநிலத்தில் ஆகட்டும் யாரும் யாருடனும் கூட்டணி வைக்கலாம் என்ற வணிக யுத்தியும் அதன் வழி புதிரான பேரங்களும் கடை விரித்திருக்கின்றன.

உங்கள் நர்கிஸ் ஒரு மாத இதழ் – வாசகர்கள் செல்போனிலும் ஈமெயிலிலும் ஏன்? ஃபேஸ் புக்கிலும் கேள்விகளை சரமாறியாகத் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,235 முறை படிக்கப்பட்டுள்ளது!

கீரனூரி ஹழரத் விடைபெற்றார்கள்!

எனது மௌத் எங்கு நிகழ்ந்தாலும், அந்த இடத்தருகே உள்ள கப்ருஸ்தானில் சீக்கிரமே அடக்கிவிடவேண்டும். என் மீது பாசமுள்ள ஆலிம் தொழவைக்க வேண்டும். கப்ருக்கு எந்த அடையாளமும் வைக்க வேண்டாம். வீட்டாளர்களும் பிறரும் முடிந்தவர்கள் தானதர்மங்கள் – துஆ செய்ய வேண்டுகிறேன்.

என்று முன்பே எழுதிவைத்துவிட்டு, முஹர்ரம் ஆஷுரா நோன்புடன் அல்லாஹ்வின் அழைப்பில் மீண்ட திண்டுக்கல் யூசூபிய்யா மதரஸா முதல்வர் அல்லாமா ஜலீல் அஹ்மது கீரனூரி ஹழரத் அவர்கள் சமுதாயத்துக்கு, தம் வாழ்நாளில் ஆற்றிய அரும்பணிகளைப் பட்டியலிடமுடியாது.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,634 முறை படிக்கப்பட்டுள்ளது!

மங்கையருள் மாணிக்கம்

“அஸ்ஸலாமு அலைக்கும்… ஹாஜியார் வீட்டிலிருந்து பேசுறேன்… ஹாஜியார் பணம் தரச் சொன்னாக” மென்மையான ஒரு குரல் … தொலைபேசியில்! “சரிம்மா… இன்ஷா அல்லாஹ் வந்து வாங்கிக்கிறேன்” நான் பதில் சொல்வேன்.

இராமநாதபுரம் சிங்காரத் தோப்பில் இருக்கும் அவர்களது வீட்டுக்குச் செல்வேன் … பணத்தைப் பெறுவேன்; அப்படியே கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரிக்குச் சென்று முதல்வர் சகோதரி சுமையாவிடம் அந்தப் பணத்தை ஒப்படைப்பேன்; அது நாங்கள் செய்துவந்த கல்வி உபகாரநிதியில் சேரும்!

இப்படி எத்தனை முறை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,352 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொன்னாடைக்கு ஒரு பொன்னாடை!

சிறுகதைப் போட்டிக்கு வந்துள்ள சிறுகதைகள் கருவிலும், உருவிலும், கதைசொல் முறைமையிலும் பல்வேறு தளங்களில் பயணிக்கின்றன. தேர்வாளர்கள் பெரும் சவால்களை சந்திக்கின்றனர்.

இஸ்லாமியச் சிறுகதை முன்னோடி எழுத்தாளர் தொடங்கி, வெகுஜன ஊடகங்களில் உயரத்தில் நிற்கிற திறன்மிக்கோர், சமுதாயப் படைப்பிலக்கியப் பாதையில் சாதனைகள் படைத்து முன்னிற்போர், துவக்க நிலை எழுத்தாளர்கள் என்று கடுமையான போட்டி நிலவுகிறது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்தான் பரிசுப் பட்டியலைத் தர முடியும் என்ற நிலைமை.

இருந்தாலும் போட்டிக்கென வந்த ஒரு சிறுகதை, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,069 முறை படிக்கப்பட்டுள்ளது!

தலைக்குனிவேற்படுத்தும் தலைகள்!

ஒழுக்கம்தான் ஒரு மனிதனுக்கு உயிர்போன்றது. பிறர் ஒரு மனிதனின் தகுதியை அளவிடுவதில் முக்கியப்பங்கு வகிப்பதும் அதுவே! சாதாரண மனிதனுக்கே அது அவசியம் எனும்போது, தலைவர்களுக்கு அது மிக மிக முக்கியமானது அல்லவா?

எல்லா மொழிகளிலும் எல்லா அறநூல்களும் போதிக்கும் முதல் பாடம் ஒழுக்கம் சார்ந்ததுதான். எல்லா சமய நூல்களும் அதனைத்தான் முன்னிறுத்துகின்றன. நமது நாட்டின் அரசியமைப்புச் சட்டமும் ஜனாதிபதி முதல் சாதாரண பஞ்சாயத்துத் தலைவர் வரை ஒழுக்கத்தை- நாணயத்தை முன்வைக்கும் உறுதிமொழியை (சத்தியப் பிரமாணத்தை) . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,696 முறை படிக்கப்பட்டுள்ளது!

தங்கம் ஒரு சிறந்த மூலதனம்!

உலகத்தின் பொருளாதாரப் போக்கை நிர்ணயிக்கும் சர்வ வல்லமையுள்ள ஆயுதமாக அமெரிக்க டாலரையே உலகம் காண்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை சரிகிறது; அது சரிந்தால் தங்கத்தின் மதிப்பு உயர்கிறது. எனவே உலகத்தில் தங்கத்தின் மதிப்பைவிட உயர்ந்தது டாலர் என்ற மதிப்பீடு உலகில் நிலவுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. உலகத்தின் பெரும்பான்மை நாடுகள் தங்களுடைய சர்வதேச வணிகத்தொடர்புக்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதே அதற்கான காரணம். உலகம் இன்னொரு நாட்டின்

நாணயத்தை அல்லது ஒரு பொருளை (உதாரணம்: . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,193 முறை படிக்கப்பட்டுள்ளது!

உரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் !

நாட்டின் எல்லா திசைகளிலுமிருந்தும் மக்களின் அமோக ஆதரவுடன் காங்கிரஸ் தலைமை அரசு அமைந்துவிட்டது. திரு மன்மோகன் சிங் வரலாற்றுப் பூர்வமாக இரண்டாம் முறையாகப் பிரதமராகியிருக்கிறார்.

அத்வானி அன் கோ சொன்னது போல ‘பலகீனமான’ பிரதமராக அல்ல; அவர்களை மிகவும் பலகீனப் படுத்திவிட்ட ‘பலமிக்க’ பிரதமராக -கம்பீரத்துடனும்- நிமிர்ந்து நிற்பவராக நிர்வாகப் பொபேற்றிருக்கிறார்.

மந்திரிசபை அமைப்பில் அவர் சோனியாவுடன் இணைந்து எடுத்த முடிவுகள் மாறியிருக்கிற அரசியல் சூழ்நிலையின் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. ‘கூட்டணிக் கட்சிகளின் உரிமைக்குரலுக்கு மதிப்பு;

அதே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,475 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரமலான் சங்கலபம்

நம் மீது இரக்கமுள்ள அல்லாஹ் நமது இம்மை வெற்றிக்கு சம்பாதித்துக் கொள்வதற்காக இன்னொரு ரமலானைத் தந்து இன்னருள் பாலித்திருக்கிறான்!

வருடம் முழுக்க அழுக்கேறியிருந்த கல்பை சுத்தி செய்துகொள்ளும் வாய்ப்பாக்கித் தந்திருக்கிறான்!

சில வருடங்களாக நாம் ஒவ்வொரு ரமலானிலும் ஒரு சங்கல்பம் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம்!

அதனை ஒட்டி இதோ நம் பார்வைக்கு ஓர் ஆலோசனை!

நமது குடும்பவாழ்வியல் சமீப காலமாக பலவிதமான நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. பொருளாதார மந்தம் ஒருவகை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதென்றால், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,376 முறை படிக்கப்பட்டுள்ளது!

எதிர்பாராமல் ஓர் ஆசுவாசம்!

நடந்து முடிந்த நாட்டின் பதினைந்தாம் பொதுத்தேர்தல் அனைத்து ஊடகக் கணிப்புகளையும் தகர்த்து விட்டு ஒரு புதிய ராஜபாட்டைக்குச் சாளரம் திறந்திருக்கிறது! மதமாச்சரிய சக்திகள் வீறுகொண்டெழும் என்று எந்த முன்னுரைப்பும் அறியத்தராவிட்டாலும், மாறிய கூட்டணிக் காட்சிகளும், கொள்கையற்ற கோஷ்டி சேரல்களும் வாக்குச் சிதறலுக்கு வழியமைத்து உறுதியான அரசமைவுக்கு இடைஞ்சலாகிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. இடதுசாரிகள் திடீரென ஞானோதயம் வந்ததுபோல திசைமாறிப் பயணித்தது வேறு நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களை அலைக்கழித்தது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் வடக்கே எந்த முன்னேற்றத்தையும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,957 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹுஸைன் முபாரக் ஒபாமா!

வஅலைக்குமஸ்ஸலாம், ஹுஸைன் முபாரக் ஒபாமா!

கெய்ரோவில் பல்கலைக்கழக வளாகத்தில் உலக முஸ்லிம்களுக்கு நீங்கள் நிகழ்த்திய உரையில் கூறிய சலாத்துக்கு எங்களது பதிலை ஏற்றுக் கொள்ளுங்கள்!

இந்த பதிலைச் சொல்வதற்கு முன் நாங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உரையை நேரடி ஒளிபரப்பில் கேட்டது மட்டுமல்லாமல், திரும்பவும் இருமுறை கேட்டு, முழுமையான உரையை எழுத்தில் படித்து, அவ்வுரையின் சாதக பாதகங்களை அலசிய தேர்ந்த ஆய்வாளர்களின் கருத்துக்களை கவனமாக ஆய்ந்து, இந்த பதிலை உங்களுக்கு நாங்கள் . . . → தொடர்ந்து படிக்க..