Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,853 முறை படிக்கப்பட்டுள்ளது!

புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை

புனித மிக்க ரமலான் மாதம் முடிந்து , நாம் எல்லோரும் ஹஜ்ஜை எதிர் நோக்கி உள்ளோம். இன்ஷா அல்லாஹ் ஹஜ் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தவர்கள், மனதளவில் ஹஜ் செல்வதற்கு தங்களை தயார் படுத்த துவங்கி விட்டார்கள். இந்த சமயத்தில், ஹஜ் செல்வோர் தங்கள் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில வழிகாட்டுதலை இங்கு தர விரும்புகிறேன். இதில் நான் 1997 ஆம் ஆண்டு , சவுதி அரசின் மருத்துவராக ஹஜ்ஜின் போது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,054 முறை படிக்கப்பட்டுள்ளது!

நல்லறங்களை பாதுகாப்போம் – வீடியோ

வழங்கியவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி அவர்கள் 23.08.2013 வெள்ளிக்கிழமை மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) ஜும்ஆ

ரமளான் மாதம் கடந்து விட்டது. அந்த மாதம் நமக்கு மிகப் பெரிய பயிற்சியை கொடுத்துள்ளது. அந்த பயிற்சியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்று சிந்திக்க வேண்டும். ரமளானில் நாம் காண்பித்த அந்த ஈடுபாடு இன்று குறைந்து விட்டது. ரமளானில் நமக்கு கிடைத்த பயிற்சி எல்லா நிலைகளில் எல்லா நேரங்களிலும் பயன்பட வேண்டும். நாம் செய்த வணக்கங்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,929 முறை படிக்கப்பட்டுள்ளது!

லாயிலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனைகள்! வீடியோ

லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை கலிமா என்று நாம் அறிவோம். ஆனால் நம்மில் பலர் அதனுடைய உண்மையான அர்த்தத்தை – அடிப்படையான நிபந்தனைகளை அறியவில்லை. எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதே இதன் அடிப்படை நிபந்தனையாகும். படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவற்றையும் (ருபூவிய்யா), வணக்கங்கள்,நேர்ச்சை,துவா போன்றவற்றையும் (உளுஹிய்யா) மற்றும் அல்லாஹ்வின் சிறப்புப் பெயர் மற்றும் அவனது பண்புகள் (அஸ்மாவு வஸிஃபாத்) அடங்கியது தான் தௌஹீத் ஆகும். ஈமான் என்பது மனதால் உறுதி கொண்டு வாயினால் மொழிந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,418 முறை படிக்கப்பட்டுள்ளது!

இபாதத் என்றால் என்ன? வீடியோ

நாம் படைக்கப்பட்டதே அவனை வணங்குவதற்கு, எனவே வணக்கம் என்றால் என்ன? என்பதை உரிய முறையில் விளங்குவோம். நாம் ஒவ்வொரு தொழுகையிலும் உன்னையே வணங்கிறோம் – உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்று ஓதுகின்றோம். அப்பொழுது அல்லாஹ்.. இது தான் எனக்கும் எனது அடியானுக்கு உள்ள உறவாகும் என்று பதில் கூறுகிறான். ஆக இறைவன் நம்மைப் படைத்தவன் நாம் அவனது அடிமை.

இபாதத் என்பது நேசம், ஆதரவு, பயம் ஆகிய மூன்று அம்சம் இருக்க . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,583 முறை படிக்கப்பட்டுள்ளது!

மன்னிக்கப்படாத பாவம்!

அல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.

எனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,996 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள்ளச்சத்தோடு நமது தொழுகை அமைய

உண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம்.

இந்த உயரிய பண்பை பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதை முதலில் பார்ப்போம்:

இறையச்சத்தின் அவசியம்:

அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,236 முறை படிக்கப்பட்டுள்ளது!

இபாதத்துகளில் கவனம் தேவை (AV)

மனிதர்களுக்கு இலக்கு, இலட்சியம் என்பது மிகவும் முக்கியமானது. பொதுவாக ஒரு செயல் செய்யும் போது மற்றொன்றை எதிர்பார்ப்பது மனிதனின் இயல்பு. இறைவன் மனிதனைப் படைத்ததே தன்னை வணங்குவதற்குத் தான். இந்த உலகில் நல்ல அமல்கள் செய்தவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் சுவர்க்கத்தை பரிசாகத் தருகிறான். வணக்கம் என்பது நாமாக செய்வது அல்ல! மாறாக நபிகள் (ஸல்) அவர்கள் ஏவிய, செய்து காண்பித்த அல்லது அனுமதித்த காரியங்கள் மட்டுமே சரியான வணக்கமாகும். நிச்சயமாக நமது வணக்கங்களில் அல்லாஹ்விற்காக என்ற தூய எண்ணம் இருக்க வேண்டும். இல்லையெனில் நமது வணக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. சகோதரர் கோவை ஐயூப் அவர்கள் குளோப் கேம்ப் பள்ளியில் ஆற்றிய உரையை ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் தருகிறோம். டெளன்லோடு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..