Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,800 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறக்கமுடியுமா உங்களை, மாலிக்?

ராஜகிரி தந்த நன்முத்து – ‘ஜமால்’ மெருகேற்றிச் செதுக்கிய மாண்பாளர், சமுதாய நற்பணியாளர் அப்துல் மாலிக் அவர்கள் நமையெல்லாம் விட்டுப் பிரிந்து, படைத்தவனின் அழைப்பில் பறந்துவிட்டார் என்ற செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத நிலையிலேயே இந்த வரிகளைப் பதிவு செய்கிறோம்.

மாலிக் ஓர் அற்புதமான மனிதர் -விலைமதிக்க முடியாத மாணிக்கம் என்பதை அவருடன் பழகியவர்கள்-பயன்பெற்றவர்கள் தங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல -உடல்களின் ஒவ்வோர் அணுவிலும் சுமந்துகொண்டே சுவாசிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு வழியே இல்லை!

அவரது ஆர்ப்பாட்டமில்லாத அணுகுமுறை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,760 முறை படிக்கப்பட்டுள்ளது!

குஜராத்தில் பயங்கரவாதம்!

இந்தியாவின் பிரதமராவதற்கு மிகவும் தகுதி வாய்ந்த மனிதர் நரேந்திர மோடி தான் என்று பாஜகவில் ஒரு பிரிவினர் குரல் கொடுத்த மறுநிமிடம் பாஜகவின் வெற்றிவாய்ப்பில் ஓட்டை விழுந்தது. தேர்தலில் அக்கட்சி தோல்வியைத் தழுவியது மட்டுமல்லாமல் “உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்டே” என்று ஒருவர் மீது ஒருவர் ஏசிக்கொள்ளும் அசிங்கம் அரங்கேறி வருகிறது.

தேர்தல் தோல்வியை ஆய்வு செய்த உயர்மட்டக் குழு மோடியின் கோரமுகத்தையும், குட்டி மோடியாகிவிடக் கொக்கரித்த வருணையும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,155 முறை படிக்கப்பட்டுள்ளது!

கார்கரேயின் உயிர்த்தியாகம் வீணா?

2008-ம் ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு முந்தைய தினம் மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியானார் கள். 150 பேர் காயம் அடைந்தனர். இந்த தீவிரவாதச் செயலின் பின்னணியில் சங்பரிவார் சதிகள் இருந்ததாக ஹேமந்த் கார்கரேயின் தலைமையி லான மகாராஷ்டிர மாநில தீவிர வாதத் தடுப்புப்படை கண்டுபிடித்தது. ராணுவத்தில் பணியாற்றும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித், பெண் சாமியார் பிரக்யாசிங் உட்பட 11 பேர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கார்கரே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,211 முறை படிக்கப்பட்டுள்ளது!

உரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் !

நாட்டின் எல்லா திசைகளிலுமிருந்தும் மக்களின் அமோக ஆதரவுடன் காங்கிரஸ் தலைமை அரசு அமைந்துவிட்டது. திரு மன்மோகன் சிங் வரலாற்றுப் பூர்வமாக இரண்டாம் முறையாகப் பிரதமராகியிருக்கிறார்.

அத்வானி அன் கோ சொன்னது போல ‘பலகீனமான’ பிரதமராக அல்ல; அவர்களை மிகவும் பலகீனப் படுத்திவிட்ட ‘பலமிக்க’ பிரதமராக -கம்பீரத்துடனும்- நிமிர்ந்து நிற்பவராக நிர்வாகப் பொபேற்றிருக்கிறார்.

மந்திரிசபை அமைப்பில் அவர் சோனியாவுடன் இணைந்து எடுத்த முடிவுகள் மாறியிருக்கிற அரசியல் சூழ்நிலையின் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. ‘கூட்டணிக் கட்சிகளின் உரிமைக்குரலுக்கு மதிப்பு;

அதே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,502 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரமலான் சங்கலபம்

நம் மீது இரக்கமுள்ள அல்லாஹ் நமது இம்மை வெற்றிக்கு சம்பாதித்துக் கொள்வதற்காக இன்னொரு ரமலானைத் தந்து இன்னருள் பாலித்திருக்கிறான்!

வருடம் முழுக்க அழுக்கேறியிருந்த கல்பை சுத்தி செய்துகொள்ளும் வாய்ப்பாக்கித் தந்திருக்கிறான்!

சில வருடங்களாக நாம் ஒவ்வொரு ரமலானிலும் ஒரு சங்கல்பம் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம்!

அதனை ஒட்டி இதோ நம் பார்வைக்கு ஓர் ஆலோசனை!

நமது குடும்பவாழ்வியல் சமீப காலமாக பலவிதமான நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. பொருளாதார மந்தம் ஒருவகை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதென்றால், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,402 முறை படிக்கப்பட்டுள்ளது!

எதிர்பாராமல் ஓர் ஆசுவாசம்!

நடந்து முடிந்த நாட்டின் பதினைந்தாம் பொதுத்தேர்தல் அனைத்து ஊடகக் கணிப்புகளையும் தகர்த்து விட்டு ஒரு புதிய ராஜபாட்டைக்குச் சாளரம் திறந்திருக்கிறது! மதமாச்சரிய சக்திகள் வீறுகொண்டெழும் என்று எந்த முன்னுரைப்பும் அறியத்தராவிட்டாலும், மாறிய கூட்டணிக் காட்சிகளும், கொள்கையற்ற கோஷ்டி சேரல்களும் வாக்குச் சிதறலுக்கு வழியமைத்து உறுதியான அரசமைவுக்கு இடைஞ்சலாகிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. இடதுசாரிகள் திடீரென ஞானோதயம் வந்ததுபோல திசைமாறிப் பயணித்தது வேறு நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களை அலைக்கழித்தது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் வடக்கே எந்த முன்னேற்றத்தையும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,974 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹுஸைன் முபாரக் ஒபாமா!

வஅலைக்குமஸ்ஸலாம், ஹுஸைன் முபாரக் ஒபாமா!

கெய்ரோவில் பல்கலைக்கழக வளாகத்தில் உலக முஸ்லிம்களுக்கு நீங்கள் நிகழ்த்திய உரையில் கூறிய சலாத்துக்கு எங்களது பதிலை ஏற்றுக் கொள்ளுங்கள்!

இந்த பதிலைச் சொல்வதற்கு முன் நாங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உரையை நேரடி ஒளிபரப்பில் கேட்டது மட்டுமல்லாமல், திரும்பவும் இருமுறை கேட்டு, முழுமையான உரையை எழுத்தில் படித்து, அவ்வுரையின் சாதக பாதகங்களை அலசிய தேர்ந்த ஆய்வாளர்களின் கருத்துக்களை கவனமாக ஆய்ந்து, இந்த பதிலை உங்களுக்கு நாங்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,980 முறை படிக்கப்பட்டுள்ளது!

குரோதம்

இன்று அன்று ஊரில் பங்களா ஊரைச்சுற்றி நிலபுலங்கள்! டவுனில் கமிஷன்மண்டி டஜன்டஜனாய் வாகனங்கள்! பேங்கு லாக்கரில் பேல்பேலாய் நகைநட்டு! அந்தக் காலத்தில் அரசாண்ட மன்னருக்கு ஒப்பான சொத்துக்கள் ‘ஓடையடி சுலைமானுக்கு! அந்தச் செல்வந்தரின் அழகான பங்களா சோகத்தில் மூழ்கி சோர்ந்து கிடந்தது! மகன் மஹ்மூது மலைத்துபோய் நின்றான்! மக்கள்; பேரன்கள் மாடிவீட்டு உறவினர்கள் மண்டிக் கிடந்தார்கள்! மவுனமாய் அழுதார்கள்! எல்லா டாக்டர்களும் ‘இறைவன் விட்ட வழியென்று’ இங்கிதமாய்ச் சொல்லி இங்கனுப்பி விட்டார்கள்! ‘நேர எதிர்பார்ப்பில்’ நேரம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,364 முறை படிக்கப்பட்டுள்ளது!

சகோதர பாசம்

இன்று அன்று சக்தி உள்ளவரை சளைக்காமல் உழைத்ததனால் சத்தார் ராவுத்தருக்கு சொத்துக்கள் ஏராளம்! இரண்டே பிள்ளைகள் இருவருமே ஆண்மக்கள்! இருவருக்கு மிடையில் ஈராறு வருடங்கள்! பெரியவன் அமீர் பின்னவன் அன்வர் அலி! மனைவி மரியம் மௌத்தாகி விட்டதனால் அமீரின் அரவணைப்பில் அன்வரை விட்டுவிட்டு அத்தா சத்தாரும் அல்லாஹ்வின் அழைப்பேற்றார்! அண்ணன் அமீரும் அவன்மனைவி ஆஷிக்காவும் சின்னவன் அன்வரை சித்திரவதை செய்தார்கள்! பள்ளிக்குச் சென்றுவந்த பாலகனாம் அவனின் படிப்பை நிறுத்தி பலவேலையும் கொடுத்து அடித்துக் கண்டித்து அன்றாடம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,790 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள்ளதைக்கொண்டு

இன்று அன்று “பாத்துச்செய் பஷீரு! பத்து நாள்ல திருப்பித் தாரேன்” பரக்கத்து கெஞ்சினான் பஷீர் கோபித்தான். “என்னடா பரக்கத்து என்னதான் செலவுனக்கு? சின்னக் குடும்பம் சீரான வியாபாரம்! சொந்த வீடு; சொத்துப் பத்தும் உண்டுதான்! கடன் கடன்னு கண்டபடி வாங்கினா கட்டுக்குள் நிக்குமோ? கடைசியில் சிரமமாச்சே?” “அப்புறமாப் பேசலாம் அதப்பத்தி பஷீரு! இப்ப எனக்குத்தேவை இருபத்தி ரெண்டாயிரம்! மானப் பிரச்சினை மனசுவச்சுத் தந்துடுப்பா” “இருந்தாத் தந்துடுவேன் இப்ப இல்லை; எனை நம்பு!” கறாராய்ச் சொல்லிவிட்டான் கான்ட்ராக்டர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,650 முறை படிக்கப்பட்டுள்ளது!

வளர்ப்பு

இன்று அன்று ஆசியா மரியத்துக்கு அழகான ஒருபிள்ளை! வயது நான்கு வதூது அதன் பெயர்! கொள்ளை அழகு குறும்புகளோ ஏராளம்! பேச்சில் செல்லம் பெரியவன்போல் துருதுருப்பு! ஆனா ஆவன்னா அழகாக அவன் படிப்பான் ஏ பி சீடி எழிலாக அவன் சொல்வான்! என்ன சொன்னாலும் சொன்னதைச் சொல்லிவிடும் புத்தி சாலித்தனம் பூரிப்பு எல்லோருக்கும்! ஒலி ஒளி கேட்டால் ஒரே மூச்சில் மனப் பாடம்! ஒரு ஸ்டெப் விடாமல் ஒழுங்கான டான்ஸ் மூவ்மென்ட்! ஆசியா மரியம் அகமகிழ்ந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,065 முறை படிக்கப்பட்டுள்ளது!

எளிதாய் ஒரு தொழில்

இன்று அன்று வாட்ட சாட்டமுகம் வகையான கம்பீரம் இனிய பேச்சு எப்போதும் புன்சிரிப்பு தூய வெண்ணுடை தீட்சண்யமிகு பார்வை கறுப்புத் தாடி காய்த்துப் போனநெற்றி பார்ப்போரை ஈர்க்கும் பக்திப் பரவசமே! பலவாறாய் சிரமப் பட்டநம்ம முத்தலிபு சில வருஷ மாக சிரமமின்றி வாழ்கிறார்! வீட்டைப் புதுப்பித்தார் வயலிரண்டை வாங்கிப் போட்டார். வங்கியில் பணம் சேர்த்தார் வாகனமும் வாங்கிவிட்டார் என்ன தொழிலென்று யாருக்கும் தெரியாது எப்படி வசதி என்று யூகிக்கவும் முடியாது எளிதான தொழிலொன்று இருக்கிறது என்றஉண்மை . . . → தொடர்ந்து படிக்க..