|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,102 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd March, 2009 இன்று அன்று கடன்உடன் வாங்கி காசிம் முகம்மது கடைசி மகளின் கயாணம் நடத்தினார் பதினைந் தாயிரம் பணமாய்த் தந்து பத்துப் பவுனும் போடஒப் பந்தம் அங்கும் இங்கும் ஆளாய்ப் பறந்ததில் அல்லாஹ் உதவினான் அனைத்தும் சேர்ந்தது மாப்பிள்ளைத் தோழர் முப்பது பேருடன் மணவிழாக் காண மேலும் நூற்றுவர் வருவார் என்பது வழிமுறைப் பேச்சு காசிம் அதற்கென கறியும் காயும் கச்சித மாகக் கடையில் வாங்கினார் வந்தது மணநாள் வந்தனர் விருந்தினர் அன்புடன் அவர்களை அழைத்து வீட்டில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,361 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th February, 2009
இன்று
அன்று
பஹ்ருதீன் அலிக்கு பாரிக்கத்து ஒரே மகள்! பணக்கார இடத்தில் பக்குவமாய்க் கொடுத்திருந்தார்! பாரூக் அவன் பெயர்; படித்தவன்; பண்பாளன்! எடுத்தெரிந்து பேசுதலை எப்போதும் அறியாதவன்! தானுண்டு தொழிலுண்டு தன்கடமை உண்டென்று தயங்காது நடப்பவன் தளராத உழைப்பாளன்! ஆனால் பாரிக்கத்து அவனுக்கு நேரெதிர் நடையுடை பாவனை நாகரிகத்தின் உச்சம்! யாரையும் மதிக்காத ஆர்ப்பாட நடைமுறைகள்! பேச்சில் ஆணவம் பிறரை மதிக்காமை! பிறந்த வீட்டின் பெருமை பேசுதலில் நிரந்தரத் தீவிரம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,186 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th January, 2009 இன்று அன்று மாலிக் ஸ¤புஹான் மலேசியத் தொழிலதிபர் மாடி வீடுகள் மனிசேஞ்ச் பிஸினஸ் ப்ரொவிசன் டிப்போக்கள் புக்ஸ்டால்கள் ஹோட்டல்கள்! ஏவிய பணிசெய்ய ஏராளம் பணியாட்கள்! அவரது அம்மா ஆயிஷா பீவிக்கு அவர் ஒருவர்தான் ஆண்பிள்ளை; வேறில்லை ஒரேவொரு பெண்பிள்ளை அவளும் வெளியூரில்! மாலிக் ஸ¤புஹானின் மாளிகை வீட்டினிலே ஆயிஷா மட்டும்தான்! அவருக்குத் துணையாக முனியாயி என்ற முதிய பெண்ணொருத்தி ! வயது முதிர்ச்சி; வாட்டும் நோய்கள்! ஆயிஷா வுக்கு அலுத்தது வாழ்க்கை! அன்பு மகனை அருமை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,077 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th April, 2008 இன்று அன்று ஆயிஷத்து பாக்கிரா அலிக்கமா லின்மனைவி! அரசுப் பணியில் அலிக்கமால் ஒருகுமாஸ்தா! ஆயிரத்து எண்ணூறு அவனுக்கு வருமானம்! ஒண்டுக் குடித்தனம்; ஓயாத பற்றாக்குறை! உள்ளதைக் கொண்டு நல்லது காணும் உயர்ந்த மனநிலை ஆயிஷாவுக் கில்லை! அவள் அடிக்கடி அரற்றுவாள்; எகிறுவாள்! கண்ணைக் கசக்குவாள்; கணவனை ஏசுவாள்! “பிழைக்கத் தெரியாத பித்துக் குளியாக எனக்குக் கிடைத்தது இருக்குதே?” என்றவள் அங்க லாய்ப்பாள்; அடிக்கடி சண்டைதான்! வேறு வழியில்லை விலகவும் மதியில்லை! மனைவியின் அழுத்தத்தால் மாறினான் அலிக்கமால்! . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,946 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th April, 2008 26 – 06 – 2005 அன்று, உத்திரப்பிரதேசம் மீரட் நகரத்தின் சாதர் பஜார் பகுதியில் வசிக்கும் செல்வி இர்ரம் இதுவரை எந்த முஸ்லிம் பெண்ணும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்து செய்தியில் இடம் பெற்றுள்ளார்.
அவருக்கும் , லக்னோவில் மருந்துக்கம்பெனி நடத்தும் ஜியாவுல் சித்தீக் மணமகணுக்கும் அன்று திருமணம் நடக்கவிருந்தது. எல்லா ஏற்பாடுகளும் தயார்! நிக்காஹ்வுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு சினிமாவில் வருவதுபோல, மாப்பிள்ளை வீட்டார் தங்கள் கைவரிசையைக் காட்டத்தொடங்கினர். ஒரு காரும், 3 லட்சம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,146 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th September, 2005 கலைஞரின் பாராட்டு ஹிமானா சையதின் “ஹார்ட் அட்டாக்”
‘தமிழ் மாமணி, ‘பாரத் ஜோதி’, ‘சிறந்த குடிமகன்’ போன்ற விருதுகள் பெற்றுள்ள சித்தார்கோட்டையைச் சார்ந்த டாக்டர் ஹிமானா சையத் அவர்கள் 565 சிறுகதைகள், 9 நாவல்கள், 1000 கவிதைகள், 1000 கட்டுரைகள் மற்றும் 35 புத்தகங்களும் எழுதி உள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் “ஹார்ட் அட்டாக்” என்ற மருத்துவ நூலாகும்.
உலகின் தலைசிறந்த தமிழ் அறிஞரும், நாட்டின் மூத்த அரசியல் வாதியுமான டாக்டர் கலைஞர் அவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,712 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd August, 2005 இன்று அன்று முன்னறையின் உள்ளே முஹ்ஷின் பைல் பார்த்தான் மும்தாஜ் அவன் மனைவி மும்முரமாய்ப் படம் பார்த்தாள்! கண்ணைக் குளமாக்கும் காட்சி அது! மும்தாஜும் கலங்கினாள்; காட்சியிலே கச்சிதமாய் ஒன்றிவிட்டாள்! அந்த நேரத்தில் அடுப்பங்கறை உள்ளிருந்து வந்ததொரு வெடிச்சத்தம் வாசலுக்கே கேட்டிருக்கும்! முஹ்ஷின் வெளிவந்தான்; மும்தாஜும் ஸ்தம்பித்தாள்! என்ன நடந்ததென்று இருவருக்கும் புரியவில்லை! கொஞ்ச நேரம் கூர்ந்து யோசித்ததும் நன்கு புரிந்தது நடந்தது என்னவென்று! ஓடினாள் மும்தாஜ் உடன் தொடர்ந்தான் முஹ்ஷின்! அடுப்பங்கறையினுள்ளே ஆரிபா நின்றிருந்தாள்! . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,242 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th February, 2005
சித்தார்ர் கோட்டை வலைத் தளத்தின் மூலம் உங்களைச் சந்திப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. காரணம்:
ஒன்று – இது என் அன்னை பூமியின் பெருமை சொல்கின்ற வலை அலை. இரன்டு – இது என் அன்பு மாணவர் உருவாக்கிய வலைத்தளம்.
எத்தனையோ பத்திரிக்கைகளில் கடந்த 20 ஆன்டுகளாக தொடர்ந்து எழுதி வந்தாலும், இதில் எழுதுவதில் எனக்குள்ள தனி மகிழ்ச்சியை நான் மறைக்க விரும்பவில்லை.
புகழனைத்தும் இறைவனுக்கே!
பத்திரிகை படிக்கும் வாசகர்களுக்கும், . . . → தொடர்ந்து படிக்க..
|
|