Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,253 முறை படிக்கப்பட்டுள்ளது!

புன்னகை என்ன விலை?

மருந்து கடை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். முதல் வரிசை முழுக்க, கடையின் அகல முழுவைதயும் அடைத்துக் கொண்டிருக்க, நான் பின் வரிசை மனிதனாகநின்றேன்.. கடையிலோ உரிமையாளர் மட்டுமே (அப்படித்தான் தெரிந்தார்) இருந்தார். ஊகும்! காத்திருந்து கட்டுபடியாகாது, அடுத்த கடைதான் என்று மெல்ல நான் நழுவப் பார்த்த வேளையில் சார் ஒரு நிமிஷம் வந்துடேன் என்றார் என்னைப் பார்த்து ஒரு புன்னகைக் கலப்போடு. அதன் பிறகு நான் காத்திருந்தது ஏழு நிமிடங்களுக்கு மேல். அந்தப் புன்னகை அந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,843 முறை படிக்கப்பட்டுள்ளது!

நூற்றுக்கு நூறு!

இன்றைய இளம் தலைமுறையினரிடம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர் பார்க்கும் ஒரே ஒரு விஷயம் நூற்றுக்கு நூறு. தேர்வுகளில் நூற்றுக்கு நூறு கொடுத்து பாராட்டி மகிழ்கிறது. குறைவாக மதிப்பெண் களைப் பெறும் மாணவர்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று முத்திரையிட்டு அவர்களை மன உளைச் சலுக்கு ஆளாக்கிவிடுகிறது.

ஒரு மாணவன் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கி விட்டால் மட்டும் போதுமா? இந்த கேள்வியை நாம் அனைவரும் நமக்குள்ளே கேட்டுப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,077 முறை படிக்கப்பட்டுள்ளது!

கணவரை மகிழ்விப்பது எப்படி?

(அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் – ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்)

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

மனைவியின் அழகிய வரவேற்பு

• பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,915 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்

“என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?” என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.

அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார்.

சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,338 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாரம் – சிறுகதை

குழந்தை ஹஸீனா பீரிட்டு அலறியது. மூத்தவன் அஸ்லம் தொட்டிலில் படுத்துக் கொண்டு தொடர்ந்து ஆட்டுமாறு அடம் பிடித்துக் கொண்டிருந்தான். ஆட்டும் வேகத் தில் கொஞ்சம் தளர்ச்சி தெரிந்தாலும் பெரி தாகக்

குரலெடுத்துக் கத்தினான். கால், கையை உதைத்து தொட்டிலிலிருந்து கீழே இறங்க முயற்சித்தான்.

“அடேய்! சும்மா படுக்கிறியா இல்லையா?”

கீழே தொங்கிய அவனது இரண்டு கால்களையும் தொட்டிலுக்குள்ளே தள்ளி ஸல்மா மீண்டும் படுக்க வைத்து ஸ்பிரிங் தொட்டிலை, “ஹூ! ஹூ! அல்லாஹு” என்று தாலாட் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,679 முறை படிக்கப்பட்டுள்ளது!

குர்ஆனின் நற்போதனைகள்…

உண்மை பேசுக!

அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119 நேர்மையாக பேசுக!

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

அழகானதைப் பேசுக!

பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,010 முறை படிக்கப்பட்டுள்ளது!

வேரை மறந்த விழுதே … கவிதை

உன்னில் என்றும் தன்னைக் கண்டனள் தன்னில் அதிகம் உன்னை உயர்த்தினள் கண்ணே மணியே பொன்னே என்று விண்வரை உன்னை வைத்தே போற்றினள்.

ஊட்டிய பாலுக்கு விலை வைத்ததில்லை கொட்டிய பாசத்தை கணக்கிட்டதில்லை நீட்டிய போதுன் விரல் வாசலை நோக்கி தீட்டிய கத்தியில் குத்தவள் உணர்ந்தனள்.

தனியாய் பயணம் கிளம்பிய போதும் தவியாய் அவள்மனம் தவித்திட்ட போதும் விதியாய் எண்ணி நொந்தனள் தவிர சதியாய் கண்டுனை சபித்திட நினைத்திலள்.

தேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ? பார்வைகள் மாறியே பாசமும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,258 முறை படிக்கப்பட்டுள்ளது!

எத்தனை தடவை சொன்னாலும்…

இன்றைய பெற்றோர் பலரின் பிரச்சினையே, `எத்தனை தடவை சொன்னாலும் பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டவே மாட்டேங்கிறாங்க’ என்பதாகத்தான் இருக்கிறது. பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் உள்ள வீட்டில் இந்த ஆதங்கக்குரல் சற்று அதிகமாகவே கேட்கிறது.

இத்தனைக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்கி நடக்கும் கட்டாயத்தில் உள்ளவர்கள் தான். அவர்களிடம் நல்ல தன்மையாக சொன்னாலே கேட்டுக் கொள்வார்கள்.

ஆனால் என்ன நடக்கிறது? அவர்கள் செய்யும் சின்னத்தவறும் விசாரணை என்ற பெயரில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,679 முறை படிக்கப்பட்டுள்ளது!

மனைவியைப் புரிந்து கொள்ளுங்கள்

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க மனைவி சொல் அப்படியே கேட்க வேண்டும் என்பது பற்றி?

ஒரு மனைவி, தன் கணவனிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள்….? விதவிதமான பட்டுப்புடவைகளா? தங்கம், வைரம் என்று நகைக் குவியலா? பெரிய பங்களா, ஏ.சி.கார் என்று ஆடம்பர விஷயங்களா….? நிறைய சம்பளமும், ஏகப்பட்ட பேங்க் பேலன்ஸும் வேண்டுமென்றா? அல்லது தன் கணவன் மன்மதன் போல் அழகாக இருக்க வேண்டுமென்றா?

இல்லவே இல்லை…! மனைவியின் எதிர்பார்ப்பே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,240 முறை படிக்கப்பட்டுள்ளது!

உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்

உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ”யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது?’ எனவினவ, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

‘இந்த நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,743 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுடும் உண்மை; சுடாத அன்பு! – சிறுகதை

இருபது வருடங்கள் கழித்து தன் மகனைப் பார்க்க நிர்மலா சென்னைக்கு வந்திருக்கிறாள். இந்தத் தீர்மானம் அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும் கொடுமையான அனுபவமாக இந்த பயணம் இருக்கப் போகிறது என்பதை அவள் நன்றாகவே அறிவாள். போகும் இடத்தில் மகனால் ஒரு புழுவை விடக் கேவலமாக அவள் பார்க்கப்படுவாள், நடத்தப்படுவாள் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை. ஆனால் எத்தனையோ காலமாய் அவள் சுமந்து கொண்டிருந்த ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைக்காமல் இறக்க அவளுக்கு மனமில்லை என்பதால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,119 முறை படிக்கப்பட்டுள்ளது!

முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …

முதுமை நெருங்க நெருங்க மனிதன் எத்தனையோ ஆற்றல்கள் இழக்க நேர்கிறது. உடல் தளர்வது மட்டுமல்ல மூளையின் ஆற்றலும் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதை அவன் நிறையவே உணர்கிறான். முன்பு போல் அவனால் பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. புதியனவற்றைக் கற்றுக் கொள்வது முன்பு போல் அவனுக்கு எளிதாக இருப்பதில்லை. இது பொதுவாக நாம் எல்லோரும் நம்பும் யதார்த்த நிலை என்றாலும் பல அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கை உண்மையைச் சாராதது என்று சொல்கின்றன. முதுமையிலும் . . . → தொடர்ந்து படிக்க..