|
|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,686 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd September, 2013 முன்முடிவுகளை முறியடியுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!!!
Break Beat Prejudice, Ahead in life ..!
நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டே திரிவார்.. நல்ல திறமைசாலிதான். வாழ்க்கையில் அவரால் ஒரு படி கூட முன்னேற முடியவில்லை..
காரணம் அவர் எடுக்கும் முன் முடிவுகள்(Prejudice).. புதிதாக எந்த ஒரு தொழிலையோ, வேலையையோ ஆரம்பிப்பதற்கு முன்பு அவர் எடுக்கும் சில முன் முடிவுகளால் அதைத் தொடங்காமலேயே இருந்துவிடுவார்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,611 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th May, 2013
கண்பார்வையில்லாத ஒருவரிடம் இருக்கின்ற கண்ணாடி போன்றது : படிப்பறிவில்லாத முட்டாள்களிடம் உள்ள புத்தகங்கள்” என்று அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ்நாட்டில் தமிழைத் தவிர பல மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் வசித்து வருகின்றார்கள். எல்லாருமே ஓரளவு தமிழில் பேசுகிறார்கள்; பேசினால் புரிந்து கொள் கிறார்கள். ஆனால், மிகப் பெரும்பாலானவர்கட்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. இது ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.
ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
23,417 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd May, 2013 ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார்.
அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, “அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா?”, என்று கூறிவிட்டு புகைவண்டியில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,428 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th December, 2012 மனிதர்கள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். தற்கால மனிதர்களின் மனம் மிகச் சிறிய தோல்வியைச் சந்தித்தால் கூட துவண்டு நம்பிக்கை அற்றுப் போகின்றது. துன்பங்களில் ஈடுபடுவதை மனித மனம் அடிப்படையில் விரும்புகின்றது. துன்பத்தின் துவளுதல் காரணமாக செயலற்றுப் போவதை மனித மனம் விரும்புகின்றது. இந்தத் துன்ப விருப்பத்தில் இருந்து மனித உள்ளத்தை மீட்டுக் கொண்டு வரவேண்டும். துன்பத்தால் செயலற்றுப் போகும்; மனத்தை அதன் இயல்பிலிருந்து மாற்றி எப்போதும் செயல்படும் மனமாக நிலைக்க வைக்கவேண்டும். மனித மனத்தை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,150 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st September, 2012 ஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும் ஆகும் காலம் வந்தது. அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சிறியதாக ஆரம்பித்த அந்தத் தொழிலை தன் கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் மிக லாபகரமான கம்பெனியாக வளர்த்திருந்தார். தனக்குப் பின் அந்தக் கம்பெனியின் நிர்வகிக்க யாரை நியமிப்பது என்று நிறைய யோசித்தார். தன் பிள்ளைகளில் ஒருவரையோ, இருக்கும் டைரக்டர்களில் ஒருவரையோ தலைமை ஏற்கச் சொல்வதற்குப் பதிலாக, நன்றாக யோசித்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,109 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th August, 2012 2. அறிக உங்கள் திறமையை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமையை இறைவன் அளித்திருக்கிறான். ஒரு மாணவன் படிப்பில் சிறந்து விளங்குவான். மற்றொரு மாணவி தனது இனிய குரலினால் அனைவரது பாராட்டையும் பெறுவாள். மற்றொரு மாணவன் தடகள விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவான். வேறு ஒரு மாணவி ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவளாக இருப்பாள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருப்பது உண்மை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் திறமை எதில் முழுமையாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,949 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th March, 2012 வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 23
வெற்றிக்கு மூன்று விஷயங்கள் தேவை. அவை திறமை, உழைப்பு, காலம். இந்த மூன்றில் முதலிரண்டு தேவைகள் புரிந்த அளவுக்கு மூன்றாவது தேவையான காலம் புரியாமல் இருப்பதே பல திறமையாளர்களும், உழைப்பாளர்களும் தோல்வியடையக் காரணம். என்னிடம் இத்தனை திறமை இருந்தும் பயன்படவில்லையே, என்னுடைய இத்தனை உழைப்பும் வீணானதே என்று புலம்பும் பலரும் தக்க காலத்தில் தகுந்த விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.
வெற்றிக்கான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,257 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th December, 2011 வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 15
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை படித்தேன். அதில் “ஒரு தாயிற்கும் தந்தைக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இருந்தால் கூட அவர்கள் குழந்தைகளில் ஒன்றைப் போலவே எல்லா விதங்களிலும் இன்னொரு குழந்தை இருக்க முடியாது” என்று உயிரியல் விஞ்ஞானி ஒருவர் எழுதியிருந்தார். இறைவனின் சிருஷ்டிகளில் தான் என்னவொரு அற்புதம் இது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி அற்புதம். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,734 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd November, 2011 வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 13
நம்மில் பலருக்கு அடுத்தவர்கள் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதாக ஒரு மனத்தாங்கல் இருக்கிறது. அதனால் நமக்கு உரிய கௌரவம் தராமல் இருப்பதாக வருத்தமும் இருக்கிறது. ஆனால் உண்மையில் மிகவும் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் அடுத்தவர் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதோ, நமக்குரிய கௌரவம் தராமல் இருப்பதோ அல்ல. நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு, நம்மை நாமே முழுமையாக கௌரவிக்கத் தவறி விடுவது தான்.
ஒவ்வொரு மனிதனும் தன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,000 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th October, 2011 வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 9
சலிப்படைந்தால் சாதனை இல்லை!
ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் எந்த சிறந்த சாதனையும் நிகழ்ந்து விடுவதில்லை. சாதனைகளைப் பாராட்டுகின்ற மனிதர்கள் சாதித்தவர்களின் திறமைகளைத் தான் பெரும்பாலும் சாதனைகளின் காரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கென சலிக்காமல் உழைத்த உழைப்பை அதிகமாக யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனென்றால் பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் போது தான் அவர்களைக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,959 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th March, 2011 திண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், திறமையுடனும் திகழ்ந்தார்.10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் . . . → தொடர்ந்து படிக்க..
|
|