அது ஐம்பதுகளின் பின் பகுதி. கொழும்பு ஆலிம் அவர்களால் தொடங்கப்பட்ட உள்ளூர் மக்தப் மதரஸாவான (மார்க்கக் கல்விக்கூடம்) ‘மதரஸா மழ்ஹருஸ்ஸுஅதா’வில் ஓதிக் கொண்டிருந்த நேரம். தலைமை உஸ்தாத் மௌலானா மௌலவி அஹ்மது இப்ராஹிம் ஆலிம் பாகவி முதவ்வல் அவர்களின்முதுமைக் காலம். மாவட்ட ஜமாத்துல் உலமாவின் தலைவராக ஆயுள் முழுக்க இருந்தவர்கள்; “சேதுநாட்டின் தீன் முத்து ” என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்கள். “பெரிய ஆலிம்ஸா” என்ற செல்லப் பெயரால்தான் அனைவரும் அழைப்பர் அவர்களை!
. . . → தொடர்ந்து படிக்க..

