Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,109 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுகப்பிரசவம் சுலபமே!

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது.

ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,893 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள, கடலாடி அனல் மின் நிலைய திட்டத்திற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாராகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி என்ற இடத்தில், தமிழ்நாடு மின் வாரியம், 4,000 மெகாவாட் திறன் உடைய, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா, 2015 செப்டம்பரில், சட்டசபையில் வெளியிட்டார். இதையடுத்து, இத்திட்டம் குறித்த, முதல்கட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நிறுவனம், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,372 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருத்துவத் துறைக்கு சிகிச்சை தேவை!

இரு வாரங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 23 பேரில் 20 பேரின் பார்வை முற்றிலுமாகப் பறிபோயிருக்கிறது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், 300 ரூபாய் கையூட்டு தர மறுத்த ராஜேந்திர பிரசாத் என்ற வலிப்பு நோய் கண்ட 18 வயது இளைஞர், அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தப்பட்டதால் இறந்தே போய்விட்டார். இந்தக் கொடுமை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,179 முறை படிக்கப்பட்டுள்ளது!

சமையலில் செய்யக்கூடாதவை!

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,153 முறை படிக்கப்பட்டுள்ளது!

சமோசா… சக்சஸ்… கோடீஸ்வரர்!

கேள்விக்குறி வாழ்க்கை ஆச்சரியக்குறியானது!

இங்கிலாந்து இளவரசர் சார்லசிடமிருந்து, சிறந்த தொழில் முனைவோருக்கான விருது பெற்ற, ஹாஜா புன்யமின்:

15 ஆண்டுகளுக்குமுன்… ஒரு வானலி, அடுப்பு மட்டுமே வைத்துக்கொண்டு சமோசா விற்றவர், இன்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் இவர் ஆறாவது வரை மட்டுமே படித்தவர்.

“எந்தவொரு தொழிலாக இருந்தாலும், அதில் ஒரு ஆத்மார்த்தமான தேடல் இருந்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும். தொழில் செய்பவருக்கும் தொழிலதிபருக்கும் இடையே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,711 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 – மார்னிங் டிஃபன் 2/2

காரப்புட்டு

தேவையானவை: துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் – தலா கால் கப், பச்சைமிளகாய் – 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.

தாளிக்க: முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பருப்பு வகைகளை நீரில் ஒன்றாக ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைக்கவும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,150 முறை படிக்கப்பட்டுள்ளது!

டானிக்! டானிக்!! டானிக்!!!

இரும்புக்கு டானிக், இதயத்துக்கு டானிக், மூளைக்கு டானிக், கிட்னிக்கு டானிக் என டானிக் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுவோரின்எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களைக் குறிவைத்து வணிக உலகமும் சாமர்த்தியமாக, வேகமாக விற்பனையாகும் வீட்டு நுகர்பொருட்களை (FMCG-FAST MOVING CONSUMER GOODS), வேகமாக விற்பனையாகும் ஆரோக்கிய உணவுகளாக (FMHG- FAST MOVING HEALTH GOODS) மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறது. கொஞ்சம் அக்கறை; கொஞ்சம் உறுத்தல்; நிறையப் பயம் நிறைந்த நடுத்தர வர்க்கமும், இணையம் மூலமும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,592 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுவனத்திற்கு இட்டுச்செல்லும் காரணிகள்

சுவனத்திற்கு செல்ல மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்று தான் ஈமான் ஆகும். மற்ற எந்த செயல்கள் செய்தாலும் ஈமான் இல்லை என்றால் – முஃமினாக இல்லை என்றால் நிச்சயமாக சுவர்க்கம் தடையாக அமையும். இந்த உலகத்தை அல்லாஹ் ஒரு அலங்காரமாக – ஒரு சோதனையாக அமைத்து உள்ளான். இந்த உலகிற்காக நம்மை போட்டி போட சொல்லவில்லை .. மாறாக மகத்தான வெற்றி என்று சுவர்க்கத்தை குறிப்பிடுகிறான். ஆக அல்லாஹ் மறைவான அந்த சுவர்க்கத்திற்காக போட்டி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,588 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய நிதி அமைப்பில் இருக்கும் வரிகள்!!

வரிகள் என்பது முன்வரையற்ற விகிதங்கள் மற்றும் சீரான இடைவெளியில் அரசாங்கத்துக்கு நாம் கட்டும் பணம். இந்த வரிப்பணம் தான் அரசாங்கத்தின் முக்கியமான வருவாய். இதனை வைத்து வரி கட்டுபவர்களுக்கு அரசாங்கம் பல வகையான சலுகைகளை அளிக்கின்றன. முக்கியமாக இரண்டு வகை வரிகள் உள்ளது; ஒன்று நேர்முக வரி, இன்னொன்று மறைமுக வரி. நேர்முக வரியை சென்ட்ரல் போர்டு ஆப் டைரக்ட் டாக்சஸ் (CBDT) என்ற குழுவும், மறைமுக வரியை சென்ட்ரல் போர்டு ஆப் எக்ஸ்சைஸ் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,215 முறை படிக்கப்பட்டுள்ளது!

புதையல்! – சிறுகதை

திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று.

ஒரு நாள்—

வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான்.

வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,453 முறை படிக்கப்பட்டுள்ளது!

பித்தப் பையில் கல் உண்டாவது ஏன்?

மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.

சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,266 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்

மின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்: விரிவான அலசல்

மின் வெட்டு தமிழகம் முழுதும் பல வருடங்களாக தீராத ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

தற்போது வரலாறு காணாத அளவு மின்வெட்டு படு மோசமாய் உள்ளது. சென்னையில் செவ்வாய் கிழமை அனைத்து நிறுவனங்களுக்கும் “மின் விடுமுறை” மார்ச் மாதம் முதல் அமுல் படுத்தியதால், பல நிறுவனங்கள் செவ்வாய் அன்று அலுவலகம் விடுமுறை விட்டு ஞாயிறு வேலை நாள் ஆக்கியுள்ளனர். . . . → தொடர்ந்து படிக்க..