Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,904 முறை படிக்கப்பட்டுள்ளது!

உங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்

எந்த ஒரு மனிதனுக்கும் தனிமை, அந்தரங்கம் என்பது இல்லாத அளவுக்கு ‘கண்காணிப்புகள்’ அதிகரித்துள்ளன. ‘பாதுகாப்பு’ என்ற காரணத்தில் தொடங்கிய கண்காணிப்புகள் இன்று பல்வேறு வடிவங்களில் உருமாறிவிட்டது. மனிதனைச் சுற்றி ஏராளமான ‘கேமிரா’ கண்கள், ‘சென்சார்’ கருவிகள் சூழ்ந்துள்ளன. வாகனத்தில் செல்லும்போது சாலை விதிகளை மீறினால் போதும்… ஏதோ ஒரு மூலையில் விழித்துக் கொண்டிருக்கும் ‘கேமிரா’ அதை படம் பிடித்து அபராதம் செலுத்த வைத்து விடும்.

இப்படி மனித இனத்தைச் சுற்றி இருக்கும் ‘சென்சார்’கள் மூலம் தனிமைக்கு ஆபத்து ஏற்பட்டாலும் சிக்கலான நேரத்தில் உதவிக்கு வருவதும் இந்த ‘சென்சார்’ கருவிகளே.  
 
உங்களைச் சுற்றி இருக்கும் கண்கள்….

 தொழில் நுட்ப வசதிகளிலும், நவீன கருவிகளும் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கிய பிறகு மனிதனின் தனிமை காணாமல் போய்விட்டது. நீங்கள் வீட்டுக்குள் இருந்தாலும், தெருவில் நடந்து சென்றாலும் ‘கேமிரா’ கண்கள் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது. நம்முடைய அந்தரங்க தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது என்று நினைத்தால், நீங்கள் ஏமாந்து போவீர்கள். இதற்கு உதாரணமாய் ‘செல்போன்’களை சொல்லலாம்.

உங்களிடம் ‘செல்போன்’ இருக்கிறது என்றால் இத்தகைய அனுபவம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். திடீரென்று ஒரு இனிய பெண் குரல் உங்களை அழைத்து இனிக்க இனிக்க பேசத் தொடங்கும். ஏகப்பட்ட மரியாதையுடன் உங்கள் பெயர் சொல்லி அழைத்து, எங்கள் வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குங்களேன் என்று கெஞ்சிப் பேசும்.

உங்கள் செல்போன் நம்பர் அந்த நிறுவனத்துக்கு எப்படி கிடைத்தது. நீங்கள் கொடுக்காத போதிலும் அவர்களால் எப்படி தொடர்பு கொள்ள முடிந்தது.  இதற்கு காரணம் செல்போன் நிறுவனம் உங்களைப் பற்றிய விவரங்களை அந்த வங்கிக்கு ‘விற்றுவிட்டது’ தான்.

மேலை நாடுகளில் மக்களின் வாங்கும் சக்தி, வருமானம், விருப்பம் போன்றவற்றை தெரிந்து கொள்ள புதுமையான முறையை கடைப்பிடிக்கிறார்கள். அதாவது ஒரு நிறுவனம் கீழ்க்கண்டவாறு அறிவிப்பு வெளியிடும். ‘எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்து கொள்பவர்களுக்கு ஒரு கொள்முதல் அட்டை (ஷாப்பர் கார்டு) இலவசமாக தரப்படும். இதைப் பயன்படுத்தி நீங்கள் குறிப்பிட்ட கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.’

இந்த அறிவிப்பை நம்பி பலர் இலவசம்தானே என்று நினைத்து கொள்முதல் அட்டையை வாங்குவதுண்டு. ஆனால் கொள்முதல் அட்டையை கொடுக்கும் முன்பு அந்த நிறுவனத்திடம் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள், வருமானம், விரும்பி வாங்கும் பொருட்கள், எதிர்காலத்தில் வாங்க திட்டமிட்டுள்ள பொருட்கள்… என்று உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொடுத்திருப்பீர்கள்.

அந்த நிறுவனமும் இதுபோன்ற வாடிக்கையாளர் தகவல்களை பிரபல நிறுவனங்கள், வியாபார அமைப்புகளிடம் பணம் வாங்கிக் கொண்டு விற்று விடுகின்றன. அந்த நிறுவனங்களும் தொலைபேசியில் உங்களை தொடர்பு கொண்டு ‘அழகான புதிய டி.வி.யை நாங்கள் தயாரித்து இருக்கிறோம்.  நீங்கள் புதிய டி.வி. ஒன்று வாங்கும் மன நிலையில் இருக்கிறீர்கள். உங்களுக்காக 10 சதவீதம் தள்ளுபடி விலையில் டி.வி.யை தருகிறோம்’ என்று ஆசை வார்த்தை காட்டி பொருட்களை விற்க முயற்சி செய்வதுண்டு.

சென்சார் நிறைந்த உலகம்:

இந்திய புதிய சென்சாரால் நிரப்பப்பட்ட உலகம் நமது தனிப்பட்ட வாழ்க்கையை தெள்ளத் தெளிவாக வெளியுலகிற்கு காட்டினாலும், சில ஆய்வாளர்கள் இத்தொழில் நுட்பத்தை மேம்படுத்தி தனிமையை பாதுகாக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில வேலைப்பாடுகள் கடுமையான உழைப்பினால் ஒரு புதிய தரவுத்தளத்தை அமைத்து மக்களின் அடையாளங்களை தெளிவாக அமைத்து தீவிரவாத தடுப்புத் துறைகளின் புலன் விசாரணைக்கு பக்க பலமாக அமையப் போகிறது.

கலிஃபோர்னியாவிலுள்ள பாபோ ஆல்டோ ஆய்வு மையத்தை சேர்ந்த தெரஸா லண்ட் என்பவர் ‘தனிமை துணைக் கருவிகள்’  வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறார். தரவுத் தளத்துடன் இணைக்கப்பட்ட இக்கருவை தரவுகள் உட்புகுதல் மற்றும் வெளியேறுதலை வடிகட்டுகிறது. இது தீச்சுவர் வலையமைப்பு போல் செயல்பட்டு கணினி வைரங்கள் மற்றும் அத்துமீறி நுழைபவர்களையும்  தடுக்கிறது.

உதாரணமாக ஒரு வெள்ளை நிற வோல்க்ஸ் வேகன் காரின் பழுது பார்க்கப் பட்ட தகவலை வினவும் தரவுத்தளதிற்கு பதில் அளிக்கும்பொழுது தெரஸா லண்ட் சின் வடிகட்டி முதலில் மற்ற பொது தரவுத்தளமான காரின் பதிவு எண் மற்றும் இதேபோல் வேறு கார் இருக்கின்றனவா என சரி பார்க்கிறது.  ஒரே ஒரு கார் மட்டும் இருந்தால் அக்காரின் உரிமையாளரின் அடையாளத்தை அறிந்துகொள்கிறது. அந்த தரவுத்தளத்தில் வினவலுக்கு  பதில் அளிக்க வேண்டுமென்றால் நீதிமன்ற ஆணையோ அல்லது மற்ற அதிகாரப் பூர்வ ஆணைகளோ சமர்பிக்கப்பட்டால் மட்டுமே அதைப்பற்றிய முழு விவரங்களை அளிக்கிறது. மேலும் யாராவது அத்துமீறி இத்தகவல்களைப் பெற முற்பட்டால் அவர்களின் விவரங்களையும் பதிவு செய்து கொள்கிறது. தெரஸா லண்ட் ஆய்விற்கு  பண உதவி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்னிஜ் மெலோன் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த உதவி விரிவுரையாளர் லத்தன்யா சுவினி என்பவர் வடிவமைத்த மென்பொருள் முற்றிலும் வேறு மாதிரியான யுத்தியை பின்பற்றியது.

இவரின் தனிமையை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்ட மென்பொருள் தனி நபரின் விவரங்களை அளிக்காது. உதாரணமாக, இது சம்பந்தப்பட்ட நபரின் வீசொலிக் குறியீட்டில் முதல் மூன்று இலக்கங்களை மட்டுமே கொடுக்கும். அதேமாதிரி பிறந்த நாள் பற்றிய விவரங்களில் பிறந்த வருடத்தை மட்டுமே கொடுக்கும்.

மற்ற சில ஆய்வாளர்களும், ஒருவரைப் பற்றிய அதிகப்படியான தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். வீடியோ கண்காணிப்பு கேம ராக்கள் குற்ற செயல்பாடுகளை கண்காணிக்கவே அமைக்கப்பட்டாலும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் கண்காணிக்கிறது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மோகன் திரிவேதி என்பவர் ஒரு புதிய கண்காணிப்பு கேமராவை வடிவமைத்தார். இது கண்காணிக்கும் இடத்தில் நடமாடும் மக்களின் உருவங்களை பதிவு செய்வதை தடுக்கிறது. அதே சமயம் அக்கண்காணிப்புக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பாடுகள் இருந்தால் (உதாரணமாக ஒரு இடத்தில் மக்கள் நடமாடும் பொழுது ஒருவர் மட்டும் ஓடினால்) உடனடியாக அதன் உருவத்தை பதிவு செய்து விடும். நீங்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக அறியும் சென்சார்களும் உண்டு.  இவை   என Smart Building Sensor Networks அழைக்கப்படுகிறது.

உதாரணமாக அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அவரவர் இடத்தில் இருக்கிறார்களா என்பதை அறியும். கணினி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர் மார்கோ குருடெகர் என்பவர் ஒரு புதிய சென்சாரை வடிவமைத்துள்ளார். இந்த சென்சார் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை மட்டும் அறிந்து கொள்ள முடியும். இவை ‘பயனர் அடர்த்தி’ (User Density) என்றழைக்கப்படுகிறது. இவை குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை துல்லியமாக அறியப்பட்டாலும் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாது.

சரியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக Pervasive Computing பயிற்சி மையத்தைச் சேர்ந்த மார்க் லாகெரின்ஸ் என்பவர் ஐரோப்பாவில் உள்ள பல சென்சாரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கும் பொருட்களின் பரிசோதனைக் கூடத்திற்கு சென்று சென்சாரைப் பற்றியும், தனிமையின் பாதிப்புகளைப் பற்றியும் கருத்துக்களைக் கூறுமாறு அதன் வடிவமைப்பாளர்களைக் கேட்டார். ஆனால் அவர்களோ ‘இது என் வேலை அல்ல’ என்றும் ‘இது சட்டம் இயற்றுபவர்களின் வேலை என்றும்’ கூறினர். இதன் முடிவில் இவர் கூறியதாவது ‘தனிமை பாதுகாப்பு’ என்பது வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணியாகவே மாறிவிட்டது.

சென்சார் வடிவமைப்பாளர்களின் மனப்பான்மை வேகமாக மாறிவரும் உலகின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவே உள்ளது. தனிமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காலப்போக்கில் நமது எதிர்பார்ப்புகளை சில சமயம் சிறியதாகவோ அல்லது சில சமயம் பெரியதாகவோ மாற்றக்கூடும். காலப்போக்கில் ‘நாம் கண்காணிக் கப்படுகிறோம்’ என்ற சூழ்நிலை நமக்கும் பழக்கமாகி விடும். தொழில் நுட்பங்கள் வளரவளர அதன் செலவீனங்கள் குறைவதோடு மிகவும் சக்திவாய்ந்ததாக மாறிவிடுகிறது. இதன் மூலம் தனிமையே இல்லாத ஒரு சமூகத்தில் வாழும்படியான சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். ஆனால் இந்த மாற்றங்கள் அவ்வளவு எளிதாக இருக்காது. இந்த சென்சார்கள் நாம் பாதுகாப்பாகவும், திறன் மிகுந்ததாகவும், சிறந்த வாழ்க்கை முறையை கொண்டதாகவும் மாற்றும் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் இவை தவறுதலாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளும் அதிகம். ஒவ்வொரு நாடும், நாம் இத்தகைய கண்காணிப்பில் இருந்தும் அத்துமீறல்களில் இருந்து விடுபடுவதற்கு கடுமையாகப் போராட வேண்டியதிருக்கும்.
 
 இனி உங்கள் மனைவியை ஏமாற்ற முடியாது 
 
‘மனைவி அமைவதெல்லாம் இறை வன் கொடுத்த வரம்’ என்பார்கள். சிலருக்கு மனைவி வரமாக அமைவதுண்டு. சிலருக்கு மனைவி சாபமாக போய் விடுவதும் உண்டு. மனைவியிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் கணவர்களில் சிலர் புத்திசாலித்தனமாய் தப்பித்துக் கொள்வதும் உண்டு. ‘அவசர அலுவலக வேலையாக ‘வெளியூர்’ பயணம் செல்ல வேண்டியுள்ளது என்று (பொய்) சொல்லி விட்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்று ‘ஜாலி’யாக இருப்பதுண்டு. இதேபோல சிலர் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வேண்டும் என்பதற்காக ‘தலைவலி உயிர் போகிறது’ என்று அலுவலகத்தில் டபாய்த்து விட்டு மைதானத்தில் ஆட்டம் போடுவதும் உண்டு.

இனிமேல் உங்கள் மேல் அதிகாரியையோ, மனைவியையோ ஏமாற்றி விட்டு ஒரு இடத்துக்கு போவதாக கூறிவிட்டு இன்னொரு இடத்துக்கு போக முடியாது. நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள், என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை காட்டிக் கொடுக்கும் தொழில் நுட்பம் வந்து விட்டது. இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு ஐ.பி.வி.6  என்று பெயர்.

அதுசரி ஐ.பி.வி.6 என்றால் என்ன என்கிறீர்களா? இது ஒரு ‘இணைய தள வழிமுறை முகவரி’ (Internet Protocal Address) அமைப்பாகும்.  என்பது  என்பதாகும். இதில் புதிய வடிவமைப்புதான் ஐ.பி.வி.6 அதாவது இண்டர்நெட் புரோடாகால் வர்சன் 6 என்பதாகும். இணைய தள முகவரிகள் எண்கள் மற்றும் பெயர்களை அடிப்படையாக கொண்டது. தற்போது 32 ‘பிட்’  கள் கொண்ட முகவரியே பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் குறைந்த அளவு இணையதள முகவரிகள் மட்டுமே உருவாக்க முடியும். பயன்படுத்த முடியும். ஐ.பி.வி.6 என்பது 128 ‘பிட்’கள் கொண்டது. இதன் மூலம் ஏராளமான முகவரிகளை பயன்படுத்த முடியும். அதாவது இருமக் கணக்கீடுகளின் (Binary Arithmatic) அபார ஆற்றல் மூலம்  3K 102 எண்ணிக்கை கொண்ட முகவரிகள் பயன்படுத்தலாம். இதன் காரணமாக ஒவ்வொரு முகவரிக்கும் ஒரு செயல்பாடுகளை அளிக்க முடியும்.

உதாரணமாக தெருவிளக்குகளில் கேமிரா பொருத்தப்பட்டு அதை இணைய தளம் மூலம் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் ஒரு தெருவில் என்ன நடக்கிறது என்பதை உங்கள் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் பார்க்கலாம். உதாணமாக 10-வது தெருவில் அரசியல் கட்சி கூட்டம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த தெருவுக்கு போகாமலேயே வீட்டில் இருந்தபடி 10-வது தெருவில் உள்ள கேமிராவை இணைய தளம் மூலம் தொடர்பு கொண்டு அரசியல் கூட்டத்தை பார்க்கலாம்.

மேலும் ஒவ்வொரு முறையும் உங்களது கார் அல்லது செல்போன்கள் இணைய தளத்துடன் இணைக்கப்படும் போது நீங்கள் எங்கிருக்கிறீர்கள். என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் போன்ற விவரங்கள் தெரியப்படுகிறது.

நீங்கள் ஒரு ஜவுளிக்கடையை கடந்து செல்லும்போது உங்கள் செல்போனில் ஒரு ‘தகவல்’ (எஸ்.எம்.எஸ்.) வந்து விழும். குறிப்பிட்ட அந்த ஜவுளிக் கடையின் புதிய வரவுகள், தள்ளுபடி சலுகை விவரங்கள் அந்த தகவலில் தெரிவிக்கப்படும். ஜவுளிக்கடையின் கம்ப்யூட்டர் மற்றும் கடை வாசலில் உள்ள சென்சார் கருவிகள் கேமிராக்கள் இதற்கு காரணமாகும். ஜவுளிக் கடையை கடந்து செல்லும்போது சென்சார் கருவிகள் மற்றும் கேமிராக்கள் உங்களை படம் பிடிக்கும். உங்களிடம் உள்ள செல்போன் மற்றும் கிரெடிட் கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகள் மூலம் உங்களைப் பற்றிய தகவல்கள் நொடிப் பொழுதில் சேகரிக்கப்படும். பின்னர் இந்த தகவல் அனைத்தும் ஜவுளிக்கடையின் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டு பின்னர் அதன் மூலம் உங்கள் செல்போனுக்கு எஸ்.எம். எஸ். பறக்கும்.
 
இனி ஆபீசில் ‘ஓவர் டைம்’இருக்கிது என்று கூறி விட்டு பீச்சுக்கு ‘கலர்’ பார்க்க சென்றால் மாட்டிக் கொள்ளும் அபாயமும் உண்டு. கணவர்கள் பாடு இனி திண்டாட்டம்தான்.

அடையாள அட்டை 

விற்பனை நிலையங்கள் மற்றும் நூலகங்களில் ஆர்.எப்.ஐ.டி  எனப்படும் அடையாள அட்டைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆர்.ஐ.எப்.டி.என்றால் ரேடியோ பிரிகுவன்சி ஐடன்டிபிகேசன் சிஸ்டம் என்று பெயராகும். அதாவது ரேடியோ அலைவரிசை மூலம் அடையாளம் காணும் முறையாகும். இத்தகைய ஆர்.எப்.ஐ.டி அடையாள அட்டைகள் காகிதம் போல மெல்லியதாக இருக்கும். இதில் எலக்ட்ரானிக்ஸ் சர்க்கியூட் மற்றும் சிறிய ரேடியோ ஆண்டனா பொருத்தப்பட்ட நுண் சில்-மைக்ரோ சிப்  இருக்கும். இந்த நுண்சில் உப்பு தூள் அளவு தான் இருக்கும். இதன் ஒரு புறத்தின் அளவு 0.4 மில்லிமீட்டர் தான். ஆர்.எப்.ஐ.டி அட்டைகள் 128 பிட்டுகள் கொள்ளவு கொண்டதாகும். இந்த அட்டையில் சம்பந்தப்பட்ட பொருள் பற்றிய தகவல்கள் உள்பட அனைத்து விதமான வியாபார தகவல்களையும் பதிவு செய்ய முடியும்.

தற்போது கடைகளில் நாம் வாங்கும் பொருட்களில் பார்கோடுகள் போன்ற ஒரு அமைப்பு இருப்பதை பார்த்து இருக்கலாம். அதில் இருந்து மேம்பட்டது மற்றும் கூடுதல் திறன் கொண்டதாக ஆர்.எப். ஐ.டி அட்டைகள் இருக்கும். உதாரணமாக ஒரு கடையில் ஸ்டாக் எடுப்பதாக இருந்தால் கொள் முதல், விற்பனையான சரக்குகள் போன்ற விவரங்கள் மூலம் கைஇருப்பு சரக்கை சரிபார்க்க முடியும். ஆனால் ஆர்.எப்.ஐ.டி அட்டைகள் ஒட்டப்பட்ட பொருட்கள் உங்கள் கடையில் இருந்தால் ஒரு சில நிமிட நேரத்தில் ஸ்டாக் எடுத்துவிட முடியும். அதாவது ஆர்.எப்.ஐ.டி அட்டைகளை வாசிக்கும் திறன் கொண்ட கருவி (சுகுஐனு சுநயனநச) உள்ளது. இந்த கருவியை கடைக்குள் அல்லது சரக்குகள் ஸ்டாக் வைத்திருக்கும் இடத்தில் காட்டினால் போதும் ஆர்.எப்.ஐ.டி அட்டைகளில் இருந்து வெளிப்படும் சிக்னல்கள் மூலம் ஸ்டாக் நிலவரங்கள் பதிவாகி விடும்.

பொருட்கள் விற்பனையில் மட்டுமல்லாமல் பொது மக்களை கண்காணிக்கும் பணிக்கும் ஆர்.எப்.ஐ.டி அட்டைகள் பயன்படும். இதற்கு ஒரு உதாரணம்….

உலக வங்கிக்கு எதிராக ஒரு போராட்டம் நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த இடத்துக்கு வரும் போலீசார் ஆர்.எப்.ஐ.டி அட்டைகளை வாசிக்கும் கருவி மூலம் அந்த இடத்தை ஸ்கேன் செய்தால் போதும். ஆர்.எப்.ஐ.டி அட்டைகள் கொண்ட உடைகள் அணிந்து  இருப்பவர்கள் பற்றிய விவரம் பதிவாகி விடும். இதன் மூலம் எந்த கடையில் நீங்கள் உடை வாங்கினீர்கள் என்பது முதலில் கண்டுபிடிக்கப்படும். உடனே அந்த கடையில் உள்ள கம்ப்யூட்டருடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட எண் கொண்ட உடையை வாங்கியது யார்? அவரது முகவரி என்ன? என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். (உங்கள் சட்டையை உங்கள் நண்பர் அணிந்து சென்றிருந்தாலும் மாட்டிக்கொள்வது என்னவோ நீங்கள்தான்). அப்புறம் என்ன கோர்ட்டு சம்மன் வீடு தேடிவரும்.

தகவல் தொகுப்பு:  எம்.ஜே.எம்.இக்பால்,