Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2007
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,702 முறை படிக்கப்பட்டுள்ளது!

மலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின் மூன்றாம் குடும்ப தின விழா

கோலாலம்பூர், பிரிக்ஃபீல்டில் உள்ள விவேகானந்தா பள்ளிவளாகத்தின் ‘கந்தையா மண்டபம்’ காலையிலேயே களை கட்டிவிட்டது. லை 8 மணிக்கே மலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின் தலைவர் ஹாஜி கமருஸ்ஸமான், ஹாஜி புர்க்கான் அலி, ஜனாப் கனி உள்ளிட்ட அனைவரும் ஆஜாராயிருந்து வருபவர்களை வரவேற்கக் காத்திருந்தனர். காலை 10 மணிவாக்கில் ஓரளவு கூட்டத்துடன் விழா தொடங்கியது.ஞாயிறு பல வகையில் மலேசியாவில் சிரமமான நாள். வாரத்தின் அனைத்து அலுவல்களையும் அந்த நாளைக்கு ஒத்திபோட்டு எதை முதலில் செய்வது என்ற குழப்பத்திலேயே நாள் ஓடிவிடும்! வியாபாரிகள் அனுதினமும் அதிகாலையில் எழுந்து நாள் முழுக்கப் பம்பரமாய்ச் சுழல வேண்டியிருப்பதால், ஞாயிறு அன்று சற்றுத் தாமதமாகவே எழ முடிகிற யதார்த்தம்!

மேலும் பினாங்க், சபாக்பெர்னம், தைப்பிங்க் போன்ற தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து வருபவர்களும் சற்றுத் தாமதமாகத்தானே வரமுடியும்?

ஒவ்வொரு குடும்பமாக வந்து சேர்ந்து கொன்டிருந்தாலும், 12 மணிக்கெல்லாம் மண்டபம் நிறைந்துவிட்டது.

 

 

  • கூட்டம் 10.30 மணிக்குத் தொடங்கியது.

  • மௌலவி மர்ஹூம் அப்துல் ஹையி ஆலிம் அவர்களின் மகனார் மௌலவி முகம்மது ஹபீப் ஆலிம் அவர்களின் துஆ மற்றும் கிராஅத்துடன் விழா தொடங்கியது.

  • தலைவர் ஹாஜி கமருஸ்ஸமான் அவர்களின் தலைமை உரை சுருக்கமாகவே இருந்தது.


ஹபீப் ஆலிமின்

வாழ்த்துரை சுருக்கமாக இருந்தாலும் முஸ்லிம் ஆண் மற்றும் பெண்ணுக்கான இஸ்லாமியச் சூத்திரத்தை நேரடியாகத் தொட்டுக் காட்டி நெஞ்சில் பதிய வைப்பதாய் அமைந்தது.ஒரு முஸ்லிம் பெண்

 

 

  1. தொழுகை

  2. நோன்பு

  3. கணவருக்குப் பணிந்து தொண்டூழியம் செய்தல்

  4. தன் கற்பைக் காத்துக்கொள்ளல்

இந்நான்கும் கைக்கொண்டால், மறுமையில் அவருக்கு சொர்க்கமே என்றும்

ஒரு முஸ்லிம் ஆண்

  1. தான் உண்ணும் சிறந்த உணவை தன் மனைவிக்கு வழங்கவேண்டும்

  2. தான் உடுத்தும் சிறந்த உடையை தன் மனைவிக்கு வழங்க வேண்டும்

  3. மனைவியை அருவருப்பான வார்த்தைகளால் ஏசக்கூடாது; பிறர்முன்னால் கண்டிக்கக்கூடாது- தனியறையில் வைத்தே புத்தி சொல்லவேன்டும்

  4. முகத்தில் அடிக்கக் கூடாது.

  • இந்த மையக் கருத்தில் நின்று அவர் ஆற்றிய உரை அவரது தந்தையாருடன் நெருக்கமான தொடர்புகொண்ட என் போன்றவர்களை பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது.

  • ஹபீப் ஆலிம் குறுகிய காலத்தில் மலேசியாவில் தன் மலர்ந்த – கனிவான பழகு முறையால் அனைவரையும் ஈர்த்து வருகிறார். சமுதாய நலம் நாடிகள்- பிரமுகர்கள் பலருடனும் நல்ல தொடர்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளார்.அவரிடம் உதவும் மனப் பான்மை நிறையவே இருக்கிறது.
     

அடுத்து பேராசிரியர் டாக்டர். ர. காதர் இபுறாஹிமதன் சிறப்புரையை நிகழ்த்தினார்.

  • தன் தன்முனைப்புப் பேச்சாலும், எழுத்தாலும், பயிர்ச்சித்திறனாலும் தமிழ் பேசும் உள்ளங்களையெல்லாம் ஈர்த்து நிற்பவர் பேராசிரியர்.

  • அவரது உரை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.சிறு சிறு அனுபவ உதாரணங்கள் வழி சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த அவரது நீண்ட உரையின் சுருக்கம்:
     

  • 1.எண்ணமே வாழ்வு-ஒருவனின் நம்பிக்கைப் படியே அவன் வாழ்வு அமைகிறது.ஃப்ரான் ஸ் நாட்டில் ஒருவனை இருட்டில் பொம்மைப்பாம்பை வைத்துக் கடிக்கச் செய்தார்கள்.பிறகு அவனிடம் உண்மைப் பாம்பைக் காட்டி அதுதான் கடித்தது என்று சொன்னார்கள். அவனது ரத்தததைச் சோதித்தபோது அதில் அந்த விஷப் பாம்பின் நஞ்சு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

  • 2.அறிவாளி வேறு புத்திசாலி வேறு.தன் அறிவை தன் வாழ்க்கைச் சிறப்புக்குச் சரியாக பயன்படுத்தத் தெரிந்தவனே புத்திசாலி.

  • 3.கௌதுல் அஃலம் முஹய்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி அவர்களிடம் “நீங்கள் எப்படி வலி ஆனீர்கள்?” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில்:
    தொழுகைபொன்ற கடமைகளுடன் “1. பிறை கண்ணியப் படுத்துதல் 2.பிறருக்கு ஆறுதல் சொல்லுதல் 3. பிறரை ஆசுவாசப் படுத்துதல் 4.கர்வம் தவிர்த்தல்” என்று சொன்னார்கள்.

  • 4.மலேசியாவில் சீக்கியர்கள் வெறும் 90,000 பேர்தான். ஆனல் 56% கற்றவர்கள்; 48% பணக்காரர்கள் . அத்துடன் ஒற்றுமையுடனான செயல்பாடு.அதனால் இன்று அவர்கள் அரசிடம் நினைத்ததை சாதித்துக் கொள்கிறார்கள்.

  • 5.தமிழ் முஸ்லிம்கள் 2 முதல் 5 லட்சம் பேர் உள்ளோம். ஆனால் கல்வியின்மையும், ஒற்றுமையின்மையும் நம்மை முன்னேற விடாமல் தடுக்கிறது.

  • 6. சிறு வயதில் உணவுப்பண்டம் விற்ற மஹாதீர் – ஒரு காலத்தில் துங்கு அப்துர்ரஹ்மான் காலத்தில் கட்சியிலிருந்து தூக்கி வீசப் பட்ட மஹாதீர், 20 வருடங்களுக்கு மேல் பிரதமராக இருக்க முடிந்தது.இது மனிதன் தலைகீழாய் மாற முடியும் என்பதற்கு உதாரணம்.

  • 7.மனிதன் மட்டுமே கெடமுடியும்- உயரவும் முடியும்- மிருகங்களால் இவ்விரண்டும் முடியாது.

  • 8.பொறாமையைக் கைவிடுதல் உயர்வுக்கு வழி வகுக்கும்.

  • 9.குற்றவாளிகள் உருவாவதற்கு பெற்றோரின் கவனக் குறைவே காரணம்.

  • 10.”என் தவறை நினைத்து நான் வெட்கப்பட்டதால்தான் வாழ்வில் உயர முடிந்தது”- உலகப் பணக்காரர் பில் கேட் கூற்று.

  • 11.க்ஃபாஅவின் சாவியை வேண்டியும் பெற முடியவில்லை நாயகம்(ஸல்) அவர்களால். ஆனால் நிலைமை தலைகீழாக மாறி பிறகு(மக்கா வெற்றிக்குப் பிறகு)அந்தச் சாவி தானாகவே அவர்கள் கைக்கு வந்தது.

…. பேராசிரியரின் உரை இப்படி அறிவார்த்தமாக நீண்டு அனைவரையும் நிறைவு படுத்தியது.


பிறர் காசுகொடுத்துக் கேட்கும் இத்தகைய பேருரையை நேரில் வந்து இலவசமாகக் கேட்க முடியாத நம்மவர்கள் நஷ்டவாளிகளே- இதை நான் என் உரையிலும் குறிப்பிட்டேன்.
இவ்வுரையுடன் பகலுணவு- லுஹர் தொழுகை இடைவெளி.


உணவு இடைவேளை முடிந்தவுடன் ஜனாப் ஹஸன் அவர்களின் ‘மேஜிக் ஷோ’ ஆரம்பித்தது.

  • இளவல் ஹஸன் மல்லாரி முகம்மது சயீத் அவர்களின் கடைசி மகன். அவரது தாயாரும் என் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள்.

  • டெக்னீஷியனான தம்பி ஹஸன் பொழுதுபோக்காக மேஜிக் செய்ய ஆரம்பித்து, இப்போது முழுநேரத் தொழிலாகவே செய்து வருகிறார்.

  • மலேசியாவின் பிரபல ஸ்டார் ஹோட்டல்கள், மற்றும் அனைத்து விழாக்கள் – நிகழ்ச்சிகளுக்கு மேஜிக் செய்து வருகிறார்.

  • மலேசியாவின் பிரபல ‘ஸ்டார்’ நாளிதழ் பலமுறை அவரைப் பற்றி விமரிசனங்கள் எழுதி கௌரவப் படுத்தியுள்ளது.

  • சுமார் ஒன்றரை மணி நேரம் அவரது வியத்தகு மேஜிக் ஷோ நடைபெற்றது.

  • நகைச் சுவையும் – நளினமும் வியப்பும் இழைந்தோடிய அந்த நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

  • நம்மூர் இளவலான அவர் தன் தொழிலில் மேலும் மேலும் வளர்ச்சிகண்டு சிறந்தோங்க அனைவரும் துஆ செய்வோமாக.


விழா நிறைவுரை ஆற்ற நான் அழைக்கப் பட்டேன். சென்ற ஆண்டு குடும்பதின விழாவின் தொடர்ச்சியாகவே என் உரையை அமைத்துக் கொண்டேன்.
உரைச் சுருக்கம்:

  • 1.மலேசியாவில் நம் கைவசம் இருந்த பல பெரிய தொழில்களை இழந்துவிட்டோம். அவற்றை மீண்டும் திரும்பப் பெற வேண்டும்

  • 2.பல நாடுகளிலும் தங்கள் ஊர்களின் அமைப்புக்களை வைத்திருப்போரின் விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம் ‘நம்மூருக்கு இப்படி ஓர் அமைப்பு இல்லையே ‘ என்ற ஆதங்கம் எழும். இப்போது அந்த ஆதங்கம் இல்லை. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!

  • 3.இதுவரை 250 குடும்பங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளன. இன்னும் பலர் பதிவு செய்துகொள்ளவில்லை என்று சொல்லப் பட்டது. அவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்

  • 4.நிர்வாகிகள் அனைவரும் ரொம்பவும் பிஸியான வேலைச் சூழலில் உள்ளவர்கள். இருந்தும் கடமை உணர்வுடன் அலைந்து திரிந்து இந்த அற்புதமான அமைப்புக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறார்கள்; இந்த அருமையான நிகழ்ச்சியையும் இவ்வளவு சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். அதற்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.

  • 5.பொதுப்பணி செய்வது கடினமானது. மன உளைச்சல் தரக் கூடியதுதான்; அதைப் பொருட்படுத்தாமல் நிர்வாகிகள் தங்கள் பணியைத் தொடரவேண்டும். இளந்தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்கு வழி காட்டிகளாகச் செயல் படுவது பற்றி சிந்திக்கலாம்.

  • 6.மிகக் குறைந்த காலத்தில் மலேசிய சித்தார்கோட்டை சங்கம் பரவலாக அறியப் பட்டிருக்கிறது. மலேசியாவின் பதிவுசெய்யப் பட்ட அமைப்புகளில் ஒன்றாக இது திகழ்கிறது. சமீபத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மது அவர்களுக்கு தமிழ் முஸ்லிம்கள் அளித்த வரவேற்பில் நமக்கு முக்கிய இடம் தரப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • 7. நிர்வாகிகள் மன உளைச்சலை விட்டுவிட்டு – புறந்தள்ளிவிட்டு துடிப்புடன் செயல் படத் தொடங்கி விடவேண்டும்

  • 8.பத்திரிகைத்துறையில் நம்மூர் வாசிகள் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக முன்பு இருந்தது. அதைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

  • 9.சித்தார்கோட்டைக்கு ஒரு பெருமைக்குரிய பாரம்பரியம் உண்டு. திறமைக்குப் பஞ்சமில்லை. பல துறைகளிலும் தங்களை வளர்த்துக்கொண்டு, பரவலாக தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து நம் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கவேன்டும்.

  • 10.மக்தப் மதரஸாக்களை வலுப்படுத்துவதன் மூலம் நம் தனித்தன்மையைப் பாதுகாத்து கொள்ள முடியும்.

  • 11. இது, காலம் நேரத்தைக் கடந்த வேகமான உலகம். செய்தி ஊடகங்களும், வலைத்தளங்களும் சமுதாய முன்னேற்றத்துக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக மாறியுள்ளன. நமக்கென்று ஒரு வலைத்தளத்தை நம்மூர் பொறியாளர் இளவல் ஹாஜா முயினுத்தீன் பல வருடங்களாக, பல சிரமங்களுக்கு மத்தியில் எந்த பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் நடத்தி வருகிறார். ஓர் எழுத்தாளன் என்ற முறையில் என்னாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். விளம்பரங்கள் மூலம் நாம் அவரை ஊக்கப் படுத்த முடியும். சங்க உறுப்பினர்கள் தங்களது பல்துறை முன்னேற்றத்துக்கு அதை பயன் படுத்திக் கொள்ள முடியும். அனைவரது ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றன.
     

என் உரைக்குப்பின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

  • மிகவும் காஸ்ட்லியான பல பரிசுகள் வழ்ங்கப் பட்டன.

  • கோலாலம்பூர்- பினாங்க் பிரபல ‘வருசை ஜுவல்லர்ஸ்‘ நிறுவனம் சென்ற வருடம் போலவே இம்முறையும் சுமார் 11,000 (பதினோராயிரம்)வெள்ளிக்கான நகைகளை பரிசுப்பொருட்களக வழங்கி வியக்க வைத்தார்கள்.

  • குலுக்கலின் போது இரண்டு மோதிரங்கள் சகோதரர் வருசைமுஹம்மது அவர்கள் குடும்பத்தினருக்கே விழுந்தது. அவற்றை அவர் பெற்றுக்கொள்ளாமல், திரும்பவும் குலுக்கலுக்கு விட்டு பிறருக்கே கிடைக்கச் செய்தது பெருந்தன்மையின் – விசால மனதின் உச்சம்!

  • சங்க செயலாளர் ஜனாப் கலீபத் ரஹ்மான் அவர்களின் சுருக்கமான நன்றியுரை- ஹபீப் ஆலிம் அவர்களின் துஆ வுடன் விழா நிறைவுக்கு வந்தது.


சில விழாத்துளிகள்:

  1. நம்மூரின் பெரும்பாலான முக்கியத் தொழிலதிபர்கள் நேரம் ஒதுக்கி விழாவில் கலந்துகொண்டனர்.

  2. சங்கத்தின் சந்தாவாக ஆன்டுக்கு ஒருமுறை வசூலிக்கப் படும் தொகை, அப்படியே செலவிடப்படாமல் வங்கியிருப்பில் வைக்கப் பட்டுள்ளது.

  3. மலேசியா வாழ் நம்மூர்வாசிகளுக்கான பல அரிய முற்போக்குத் திட்டங்களை சங்கம் – காலத்துக்கேற்ற வகையில் தயாரித்து வைத்திருக்கிறது. அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; தங்கள் ஒத்துழைப்பை முழுமையாக நல்க வேண்டும்.

  4. இன்ஷா அல்லஹ் அடுத்த ஆண்டு குடும்ப தின விழா இன்னும் சிறப்பாக அமைய அனைவரும் துஆ செய்யவேண்டும்!

  5. அன்று பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நடைபெற்றதால் சிலர் விழாவுக்கு வரமுடியவில்லை; என்றாலும் ஹாஜி முஹம்மது ரஷீத், ஜனாப் மெர்டேகா அஹ்மத் இபுறஹிம் போன்றோர் விழாவுக்கு வந்து பகல் நேரம் வரை இருந்து கௌரவித்துச் சென்றார்கள் என்பது சங்கத்தை கண்ணியப் படுத்திய நிகழ்வாகும்.

  6. ி்ச்ி ப் ்கள்