Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2008
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,903 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேர்மை

இன்று அன்று
ஆயிஷத்து பாக்கிரா
அலிக்கமா லின்மனைவி!
அரசுப் பணியில்
அலிக்கமால் ஒருகுமாஸ்தா!
ஆயிரத்து எண்ணூறு
அவனுக்கு வருமானம்!
ஒண்டுக் குடித்தனம்;
ஓயாத பற்றாக்குறை!
உள்ளதைக் கொண்டு
நல்லது காணும்
உயர்ந்த மனநிலை
ஆயிஷாவுக் கில்லை!
அவள் அடிக்கடி
அரற்றுவாள்; எகிறுவாள்!
கண்ணைக் கசக்குவாள்;
கணவனை ஏசுவாள்!
“பிழைக்கத் தெரியாத
பித்துக் குளியாக
எனக்குக் கிடைத்தது
இருக்குதே?” என்றவள்
அங்க லாய்ப்பாள்;
அடிக்கடி சண்டைதான்!
வேறு வழியில்லை
விலகவும் மதியில்லை!
மனைவியின் அழுத்தத்தால்
மாறினான் அலிக்கமால்!
கைகூ சாமல்
கையூட்டு வாந்கினான்!
காசு சேர்ந்தது
கஷ்டமும் மறைந்தது!
ஆனால் ஒருநாள்
அவன்லஞ்சம் வாங்கையில்
கையும் களவுமாய்
காவலர் பிடித்தனர்!
வேலை போனது;
வீதிக்கு வந்தானே!
டமாஸ்கஸ் நகரின்
தலைவர்; கவர்னர்
அமர்பின் அப்துல்
அஜீஸெனும் நல்லார்!
நீதி வழுவா
நேர்மை யாளர்!
நிலைத்த புகழின்
நேரடி முகவரி!
அந்தத் தலைவரின்
அன்பு மனைவி
அருமை பாத்திமா
ஒருநாள் சொன்னாள்:
“பிள்ளைகள் தமக்குத்
துணிமணி எடுக்கனும்
துட்டுஎதுவும் இல்லைகையில்!
ஒருவாரச் சம்பளத்தை
ஒன்றாகக் கொடுத்தால்
எடுத்து விடலாம் ”
என்றவள் சொன்னதும்
துடித்துப் போனார்
தூயவர் அஜீஸும்!
“என்ன பாத்திமா,
இப்படிப் பேசுறே?
ஒருவாரம் பதவியில்
ஒட்டியிருப்பேன் என
உத்தர வாதம்
உள்ளதா? யோசி!
மக்கள் என்னை
மாற்றிட நினைத்தால்
மாசுகள் பட்டு
மருகனும் அல்லவா?
வேண்டாம்; வேண்டாம்!
வீண் பழி நமக்கு!”
என்றனர் கவர்னர்
என்னே நாணயம்!
அந்த அப்துல் அஜீஸும்
அவரது மனைவியும்
இந்த அலிக்கமாலும்
இவரது துணைவியும்
சொந்த பந்தம்தான்!
சோதர முஸ்லிம்கள் தான்!
என்ன செய்வது?
சொல்லுங்கள்….
என்ன செய்வது?