|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,503 முறை படிக்கப்பட்டுள்ளது!
பறக்க எத்தனிக்காத பறவை Posted on 20th January, 2011
|
பறக்க எத்தனிக்காத பறவை
திண்ணையில் எனது கவிதைதானும் பறக்க இயலும்
என்பதை மறந்தே போனது அது.இறக்கை என்ற ஒன்றை
எதற்கென நினைத்து
விரித்துக்கூட பார்க்கவில்லை அதுகிடைத்தவற்றைக்
கிளறிக்கொண்டிருப்பதிலேயே
சுகம் கொண்டது அது.பாதுகாப்பான சூழலில்
இருப்பதாகக் கருதிக்கொண்டு
நாட்களைக் கடத்துவதிலேயே
மரத்துப்போனது அது.
சோம்பிக்கிடப்பதே சுகம்
எனக்கொண்டது அது.
கூண்டு விட்டுக் கூண்டு
செல்லும் இட மாற்றங்களை
மறுப்பேதும் தெரிவிக்காமல்
ஏற்றுக்கொண்டது அது.
கால்கள் உடைந்தும்
சிறகுகள் முறிந்ததுமான
தோழி தோழர்களைக்
கொண்டதுமாக
அங்குமிங்கும் அலைந்து
கொண்டேயிருந்தது அது.
“இருத்தல்” போதும்
என அகமகிழ்ந்து இப்போது
கூவுதலையும்
மறந்து அலைகிறது அது.
http://chinnappayal.blogspot.com/ |
|
|
|