Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,975 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊழலுக்கு எதிரான முதல் அடி – அண்ணா ஹசாரே

கடந்த ஆண்டு மெகா ஊழல்கள் ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம், CVC கமிஷனராக தாமஸ் நியமணம் என ஊழல் கொடி கட்டி பறந்தது. இன்னும் அதற்குண்டான தீர்வுதான் எட்டப்படவில்லை. தமிழக தேர்தலிலும், உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியிலும் மூழ்கி திளைத்துவரும் பதிவுலகம், இவரை பற்றி எழுத்தாது ஆச்சரியமே.

ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்ட வரையறையை கொண்டு வரவும், மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்த்தா அமைப்பை நிறுவவும் 73 வயது அண்ணா ஹசாரே தில்லியில் இன்று 3 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்.

யார் இந்த அண்ணா ஹசாரே?
மகாராஷ்டிரத்தில் ஜூன் 15, 1938ல் பிறந்த கிசான் பாபு அசாரே (எ) அண்ணா ஹசாரே ஒரு சமூக சேவகர். இவர் சமூக சேவையை பாராட்டி இந்தியா பத்மபூசன் விருதை 1992 ல் இவருக்கு வழங்கியது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது தற்போது நடைமுறையில் உள்ள சட்டவரைவினை விட வலுவானதாக உள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றகோரி இவருடன் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இவருடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். நாடு முழுவதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

ஊழலுக்கெதிரான இந்தியா:
இந்த சட்ட முன்வரைவு வலுவான, திறனான, அரசியலில் இருந்து விடுபட்ட இரு அமைப்புகளாக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா உருவாக்கப்படவும் அவை பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை புலனாய்வு செய்யவும் வழி செய்கிறது. மேலும் குறிப்பிட்ட காலவரைக்குள் குறை நீக்கலும் புலனாய்வு முடிவு பெறவும் வழி செய்கிறது.

இந்த சட்ட வரையறை மூலம்,

  1. ஊழலுக்கு எதிரான தனி ஆணையம் அமைக்கப்படும்
  2. இதன் உறுப்பினர்களை மக்களும் நீதியரசர்களும் தேர்ந்து எடுப்பர்
  3. ஆளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில வராமல் தேர்தல் ஆணையம் போல தனி அமைப்பாக இயங்கும்
  4. இதில் செய்யப்படும் புகார்கள் ஓராண்டில் விசாரணையும் அடுத்த ஆண்டில் தீர்ப்பும் வழ்ங்கப்படும்
  5. சிறிய அளவில் நடைபெறும் கையூட்டு முதல் பெரிய அளவில் நடைபெறும் ஊழலகள் வரை இந்த அமைப்பில் புகார் செய்யலாம்
  6. இந்த அமைப்பில் உள்ளவர்கள் மீதே புகார் வந்தால் 2 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும்.

ஒரு தனி மனிதனாக இருந்து மாபெரும் சமூக போராட்டத்தை தூண்டியிருக்கும் அண்ணா ஹசாரேவிற்கு தோள் கொடுப்போம். நாட்டில் புரையோடி இருக்கும் ஊழல் புற்றுநோயை களைய சரியான சமயம் இதை விட்டால் வேறு கிடைக்காது.

உலககோப்பை வெற்றிக்காக தெருவிற்கு வந்து கொண்டாடும் நாம், ஏன் இது போன்ற நல்லவிஷயத்துக்காக வீதியில் இறங்ககூடாது.

குறைந்தபட்சம் பதிவுகள் மூலமாகவாவது நம் ஆதரவை தெரிவிக்கலாமே…..

நன்றி: சூரியனின் வலை வாசல்

அண்ணா ஹசாரே அவர்களின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 02261550789 என்கிற செல்போன் எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கும்படி அவரது ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அன்னா ஹசாரே அலை தமிழகத்திலும் எழுச்சி வீடியோ (தினமலர்)

[hdplay id=13 width=400 height=300 ]