Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2011
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,367 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரு பக்க நியாயம் – ஹிஜாப்

உடையவர் காணும்
உடல் உறுப்பை;
அந்நியர் காண்பது சரியா;
அரித்தெடுக்கும் பார்வைக்காகத்
திரையிடச் சொல்வதுப் பிழையா!

விழிக் காணும் சருமம்
விரல் தொடத் தூண்டாதா;
உணர்ச்சிக்கு
உரம் இட்டப் பின்னேப்
படித்தாண்டத் தோன்றாதா!

பார்வை மட்டும்தானே;
அழகைப் பார்க்கட்டும்;
என விழிகளுக்கு
விருந்து வைப்பது முறையா;

பசிக்கும் பார்வைக்கு
அணைப்போடச் சொல்லித்
திரைப்போடச் சொல்வது சிறையா!

மரத்துப்போன மனதினால்
மரித்துப்போன வெட்கம்;
கறுத்துப் போன
உள்ளத்தை மீட்டெடுப்பதில்
என்ன தயக்கம்!

மற்றவர் அணிந்தால்
வாய் மணக்க உரைக்கும்
ஒழுக்கமுறை என்று;
நாங்கள் அணிந்தால்
மட்டும் வாய் குரைக்கும்
அடக்கு முறையென்று!
நன்றி:–யாசர் அரஃபாத் – அஜீஸ் அஹ்மத் வலைப்பூக்கள்