Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,313 முறை படிக்கப்பட்டுள்ளது!

முஹர்ரத்தில் ஏவப்பட்டவைகளும் – விலக்கப்பட்டவைகளும்

முஹர்ரத்தில் ஏவப்பட்டவைகளும் – விலக்கப்பட்டவைகளும்.
புனித மாதம்
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம்  பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! திருக்குர்ஆன் 9:36.
மேற்குறிப்பிட்ட புனித மாதங்களாகிய நான்கு மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும் அதில் பத்தாம் நாளும், அதற்கு முந்தைய ஒன்பதாவது நாளுமாகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்க வேண்டும்.

ஆஷூரா நோன்பு பற்றிய நபிமொழிகள்
 ரமளான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும் (திர்மிதி)
ஆஷூரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு பிறருக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இது யூதர்களும் கிருத்துவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்றார்கள் (முஸ்லிம்).
ஆஷூராவின் நோன்பு முந்தைய வருடத்துப் பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது (புகாரி)

ஏன் நோற்கப் படுகிறது ?
இறைதூதர் மூஸா(அலை) அவர்களுக்கு ஏகஇறைவன் சில அற்புதங்களை செய்து காட்டும் ஆற்றலை வழங்கினான் அவர்கள் செய்துகாட்டும் அற்புதங்களை சூனியம் என்று அந்நாட்டு மன்னன் ஃபிர்அவுன் உதாசீனப்படுத்தினான் காரணம் சூனியக்கலை அக்கால கட்டத்தில் நாடெங்கும் கோலோச்சிக் கொண்டிருந்தது.
மூஸா(அலை) அவர்கள் செய்துகாட்டும் அற்புதங்களை முறியடித்து அவர்களை மக்களிடம் தோல்வியுறச் செய்வதற்காக எகிப்து முழுவதிலிமிருந்து சூனியக்கலையில் கைதேர்ந்த மாந்திரீகர்கள் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்து வர ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான்.
இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள செய்து காட்டும் அற்புதத்தை பொய்ப்பிக்க முணைவது என்பது ஏகத்துவத்தை குழி தோண்டி புதைப்பதற்கு எடுத்த  முயற்சி என்பதால் இறைநிராகரிப்போனின் முயற்சியை முறியடித்து ஏகத்துவத்தை மேலோங்கச் செய்வதற்காக இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்தான்.
மாந்த்ரீகர்கள் படை .பிர்அவ்னின் அரண்மனையை புடை சூழ்ந்து கொண்டது. இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களும், மாந்திரீகர்களும் எதிரும் புதிருமாக சாகஸம் புரிவதற்காக நின்று கொண்டிருக்க மன்னன் தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்க முதலில் இறைதூதர் அவர்கள் மாந்திரீகர்களை நோக்கி நீங்களே  தொடங்குங்கள் என்றுக் கூறுகிறார்கள்.
”நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். திருக்குர்ஆன் 7:116
அவற்றைப் பார்த்ததும் மன்னனும், மாந்திரீகர்களும், பார்வையாளர்களும் குதூகலமடைந்தனர், அதைப் பார்த்த மூஸா அலை அவர்கள்  இறைவன் பொய்யை அழித்து உண்மையை நிலைநாட்டுவான் என்று கூறினார்கள் அதன் பின் தனது கைத்தடியை எறியும்படி இறைவன் இறைதூதருக்கு செய்தி அனுப்பினான். ”உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. திருக்குர்ஆன் 7:117
எத்தனை மாந்திரீகர்கள் வரவழைக்கப்பட்டனரோ அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையை கற்றிருப்பர் அத்தனையையும் இறைதூதருடைய கைத்தடியிலிருந்து வெளிப்பட்ட அற்புதம் ஒன்றுமில்லாமல் துடைத்தெறிந்து விட்டது.
இதைப்பார்த்ததும் அவ்விடத்திலேயே இறைதூதர் மூஸா(அலை) அவர்களும், அவர்களுடைய சகோதரர் ஹாரூன் அவர்களும் ஏற்றுக்கொண்ட இறைவனை நாங்களும் ஏற்றுக்கொண்டோம் என்று அனைத்து மாந்திரீரகர்களும் திருக்கலிமாவை மொழிந்தனர் ”அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்” என்றும் கூறினர்.  திருக்குர்ஆன் 7:121,122.
தன்னை கடவுள் என்று பிரகடனப் படுத்திக்கொண்டு மொத்த மக்களையும் அடக்கி ஆணவம் செய்தவனால் இதை சகிக்க முடியவில்லை வெகுண்டெழுந்தான். தனது வலிமை மிக்க படையுடன் அவர்களை கொல்வதற்கு விரட்டினான்.
வெருண்டோடியவர்களை செங்கடல் எதிர்கொண்டது அதற்குமேல் அவர்களால் எங்கும் செல்ல முடியாது நம்மிடம் வசமாக மாட்டிக்கொண்டனர் என்று நினைத்தான் அவர்களுடைய உறுதிமிக்க இறைநம்பிக்கையைப் பார்த்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறைத்தூதருடைய கையில் உள்ள தடியால் கடலின் மீது அடிக்கச்செய்து கடலைப் பிளக்கச் செய்து அவர்களை கொடுங்கோலன் ஃபிர்அவுனிடமிருந்து காப்பாற்றி விடுகிறான்.
இஸ்லாயீலின் மக்களை கடலை கடக்கச் செய்தோம் ஃபிர்அவுனும் அவனது படையினரும் அக்கிரமமாகவும் அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர் முடிவில் அவன் மூழ்கும் போது  இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிற வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன் நான் முஸ்லீம் என்று கூறினான். திருக்குர்ஆன் 10:90
அவனுடைய அரண்மனையில் எகிப்தினுடைய மொத்த மாந்திரீகர்களும் இஸ்லாத்தை ஏற்றபொழுதே இவனும் ஏற்றிருந்தால் அல்லாஹ் கண்ணியப் படுத்தி இருந்திருப்பான் காலம் கடந்து இறைவனை நம்பிக்கை கொண்டதால அவனுடைய உடலை மட்டும் பாதுகாத்து பின்வரக்கூடிய மக்களுக்கு சாட்சியாக்குவதாக இறைவன் அவனிடம் கூறினான்.
10:92. உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். திருக்குர்ஆன் 1:92.
அல்லாஹ்வுடைய அத்தாட்சியைப் பார்த்ததும் தாமதிக்காமல் அவ்விடத்திலேயே இறைநம்பிக்கை கொண்டோம், என்று அவர்கள் கூறிய அந்த உறுதிக்காக அவர்களை இறைவன் கொடுங்கோல் மன்னனுடையப் பிடியிலிருந்து  கடலைப் பிளந்து காப்பாற்றியது ஒரு முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும் அதற்கு இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவே முஹர்ரம் மாதத்தின் ஆஷூரா நோன்பு நோற்கப் படுகிறது.
மாற்றமான யூத ஷியாக்களின் முடிவு 
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. என்று அல்லாஹ் கூறும் அந்த நேரான மார்க்கத்தில் கோணலை ஏற்படுத்துவதற்காக இறைநம்பிக்கை கொண்டோம் என்று பொய் கூறி உண்மையாக நம்பிக்கை கொண்ட மக்களை  வழிகெடுக்க யூதர்கள் செய்த சதி தான் முஹர்ரம் மாதத்தில் அநியாயமாக ஹூசைன் (ரலி) கர்பளாவில் கொல்லப்பட்டார்கள் எனும் வதந்தியாகும்.
அம்மாதங்களில் (போர்செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்…என்ற அல்லாஹ்வுடைய உத்தரவை மீறி மதீனாவிலிருந்து கூபாவுக்கு ஹூசைன் ரலி அவர்கள் தலைமையில் வரம்புமீறி போர் நடத்திச்சென்றவர்கள் தோல்விஅடைந்தார்கள். என்பதுவே உண்மை.
இதன் பெயரால் இன்று உலகில் வாழும் ஷியாக்கள் உடல்களை கிழித்துக்கொண்டு ரெத்தம் ஓடச்செய்யும் வேடிக்கை கூத்துக்களை நாம் அதிகம் விவரிக்க வேண்டியதில்லை தொலைகாட்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு காட்டுவார்கள்.
இவற்றை இஸ்லாம் போதிக்கவில்லை,
இவற்றை போதிக்க இஸ்லாம் வரவில்லை,
இவற்றை தடுக்கவே இஸ்லாம் வந்தது.
இவற்றை தடுத்தும் விட்டது.
ஒப்பாரி வைப்பது, ஆடைகளையும், உடல்களையும் கிழித்துக் கொள்வது இறை நிராகரிப்புச் செயலாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (முஸ்லிம்)
ஷியாக்கள் செய்யக்கூடிய இந்த வினோதமான வேடிக்கைகளை சன்னி முஸ்லிம்களாகிய நம்மவர்கள் செய்வதில்லை என்றாலும் ஹஸன், ஹூசைன் (ரலி) பெயரால் கொலுக்கட்டை அவித்து வழங்குவது இன்றும் இருந்து வருகிறது இதுவும் மேல்படி அடிப்படை இல்லாத அநியாயமாக கொல்லப்பட்டார்கள் என்பதை நம்பி செயல்படுவதாகும் என்பதுடன் கொலுக்கட்டை அவித்துப் பகிர்வது என்பது இனிப்புப் பொருட்களை படையல் செய்யும் மாற்றுமத கலாச்சாரத்திற்கு ஒப்பானதாகும். பிறமதக் கலாச்சாரத்தை பின்பற்றுபவன் அவர்களையே சார்ந்தவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்(அபுதாவூத்)
அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே!
ஷியாக்களுடைய செயலை அதனுடைய நிழல் கூட நம்மீது படியவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் கொலுக்கட்டை அவித்து பகிர்வது, நெருப்பில் உப்பைக் கொட்டுவது போன்றவைகள் அவர்களுடைய செயலின் நிழலாகும் அதனால் அவைகளையும் செய்யக் கூடாது.
ஷியாக்களுடைய அந்த இஸ்லாம் எனும் பெயரால் நடத்தப்படும் வரம்பு மீறிய செயலை தடுக்க வேண்டும் முடிய வில்லை என்றால் மனதால் வெறுக்க வேண்டும்.
உங்களில் எவரும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் அதைத் தடுக்கட்டும், இயலாவிட்டால் தமது நாவால் அதைத் தடுக்கட்டும், அதற்கும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் அதைத் வெறுக்கட்டும். அதுவே ஈமானில் பலவீனமான நிலையாகும். என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் நம்முடைய சக்திக்குட்பட்ட வரை நமது ஊர்களில் நடக்கும் மேல்படி கலாச்சாரத்தை தடுத்து நிருத்துவதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும், அதற்கு இயலவில்லை என்றால் மார்க்கம் என்றப் பெயரில் மேல்படி கலாச்சாரம் உள்ளே நுழைந்து விட்ட வரலாற்றை மக்களுக்கு விளக்கிக் கூற முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்ன காரணத்தின் அடிப்படையில் ஆஷூரா நோன்பை நோற்றார்களோ நோற்கச் சொன்னார்களோ அதே காரணத்தின் அடிப்படையில் ஆஷூரா நோன்பை நோற்றால் கடந்த வருடத்துப் பாவங்கள் மன்னிக்கப்படும்.
ஆஷூராவின் நோன்பு முந்தைய வருடத்துப் பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது (புகாரி)
நன்றி: ஆன்லைன் பிஜே